Leadership ( தலைமைத்துவம் )

By Sivanganam Prasad
12th October, 2025

தலைமைத்துவம் என்பது ஒரு தனிநபரின் அல்லது ஒரு குழுவினரின் பின்தொடர்பவர்கள் அல்லது ஒரு அமைப்பு, சமூகம் அல்லது குழுவின் உறுப்பினர்களுக்கு செல்வாக்கு மற்றும் வழிகாட்டும் திறன் ஆகும்.
  •  தலைமைத்துவம் பற்றிய சிந்தனைகள் பிளேட்டோ, அரிஸ்டோட்டில் காலத்திலேயே தோற்றம் பெற்றுள்ளன. 
  •  கிரேக்க தத்துவவியலாளர்கள் "சிரேஷ்ட மனிதன்" எனப் பயன்படுத்தியுள்ளனர்
  • "தலைவர்கள் பிறக்கிறார்கள்" (பிளேட்டோ 
  • கி.பி. 1300 இல் தலைவர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • கி.பி. 1800 இல் தலைமைத்துவம் எனப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தலைமைத்துவம் பல பண்புகளைக் கொண்டுள்ளது
  • L - Liberate செயல்களுக்கு அருகிலிருந்து - தீர்மானம் எடுப்பவர்
  • E - Encourage பின்பற்றுவோரை ஊக்குவித்தல்
  • A - Achieve ஒழுங்கமைப்பின் இலக்கை அடைதல்
  • D - Develop தனியாள், குழுவின் - அபிவிருத்தி
  • E - Example முன்மாதிரியாக இருத்தல்
  • R - Build Relationship தொடர்பை ஏற்படுத்தல்

தலைமைத்துவத்தின் இயல்புகள். 
  • பிறரது நடத்தையில் செல்வாக்கு செலுத்தக் கூடியது.
  • மானிடத்திறன் கொண்டிருத்தல்
  • எப்பொழுதும் நோக்கத்தின் அடிப்படையில் செயற்படல்
  • தொடர்பாடல் திறன் கொண்டிருத்தல்
  • விமர்சனங்களை ஏற்கும் தன்மை கொண்டிருத்தல்
  • பொறுப்புக்களையும், ஆபத்துக்களையும் ஏற்கின்ற மனநிலை கொண்டிருத்தல்
  • தலைமைத்துவம் ஒரு குழுவுக்கான குறிப்பிட்ட வரையறையைக் கொண்ட வகிபங்கு
  • தலைமைத்துவம் குறிப்பிட்ட சூழலில் செயற்படுகிறது.

Qualities a leader should possess in tamil



தலைமைத்துவத்தின் பண்புகள்.
  • செவிமடுத்தல்
  • குழு உறுப்பினருடன் இணைந்து செயற்படல்
  • ஆளுமையுடன் செயற்படுதல்
  • அர்ப்பண சிந்தையுடன் செயற்படல்
  • பக்கச் சார்பின்றி நேர்மையாக நடத்தல்
  • பொது நலனில் அக்கறையாக இருத்தல்
  • பிறருடன் நல்லுறவைப் பேணல்
  • பொறுப்புகளைச் செவ்வனே நிறைவேற்றல்
  • உணர்ச்சி வசப்படாதிருத்தல்
  • உறுதியான தீர்மானங்களை எடுத்தல்
  • தவறுகளைப் பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளல்

தலைமைத்துவ இயல்புகள்
  • செவிசாய்த்தல்
  • அமைதி
  • பொறுமையாகச் செயற்படல்
  • தேவைகளை இனங்கண்டு இருத்தல்
  • தடைகளை தவிர்ந்து முன்னோக்கிச் செல்லல்
  • கருத்துப்பரிமாற்றம்
  • நம்பிக்கைத் தன்மை
  • தெரியாதவற்றை அறிந்திருத்தல்
  • நேர்ச்சிந்தனை
  • தைரியம்
  • கடின உழைப்பு
  • தெளிவான தொடர்பாடல்
  • ஊழியர்களை விளங்கிக்கொள்ளல்
  • வளங்களுடன் செயற்படல்
  • உரையாடல், திருப்பதியடைதல், செவிசாய்த்தல் முக்கியமென சிந்தித்தல்
  • ஒழுங்கமைத்தல்
  • செயல்ரீதியானது
  • அபகீர்த்திக்குள்ளாக்காதிருத்தல்
  • மகிழ்ச்சி
  • எழுந்து நிற்கும் திறன்


தலைமைத்துவக் கோட்பாடுகள்

Varma, 2001 இன் படி,
1940 க்கு முன் விஷேட குணவியல்பு பிரவேச கோட்பாடு
✓1940 1960 கோட்பாடு - பாணயுடனிணைந்த பிரவேச
✓ 1960 1980 -சூழ்நிலைசார் பிரவேச கோட்பாடு
1980 க்கு பின் நவீன தலைமைத்துவ பிரவேச - கோட்பாடு
செயலிடைத் தொடர்புடைய கோட்பாடு
✓ கவர்ச்சிகரமான தலைமைத்துவக் கொட்பாடு

நுண்மதி :

நுண்மதி அல்லது நுண்ணறிவுத்திறன் ஒரு தலைவருக்கு மிகவும் முக்கியமானது, சொல்சார் திறன்கள், சரியான புலக்காட்சி பெறும் திறன்கள், நியாயித்தல், பிரச்சினைத் தீர்த்தல் முதலியவை ஒருவரது நுண்ணறிவு சார்ந்த அம்சங்களாகும். எனினும், ஆய்வு முடிவுகளின்படி தலைவரின் நுண்ணறிவு அவரது குழுவினரின் நுண்ணறிவு மட்டத்தைவிட மிகவும் உயர்ந்திருந்தால் தொடர்பாடல் பிரச்சினைகள் ஏற்படலாம். அவரது சிந்தனைகளை அவரது குழுவினரால் புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படலாம்.

சுயநம்பிக்கை :

தனது தேர்ச்சிகள், திறன்கள் ஆகியவற்றில் ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கையானது பிறரை வழிப்படுத்தும் சுயநம்பிக்கையை அவருக்கு வழங்குகிறது. காந்தி தனது நேர்மைத் திறத்திலும் லெனின் தனது பொதுவுடைமைக் கோட்பாட்டிலும் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தனர். தலைமைத்துவம் என்பது பிறரது நடத்தையில் செல்வாக்கு செலுத்துதல் எனக் கொண்டால் அத்தகைய செல்வாக்கு செலுத்தும் ஆற்றல் சுயமதிப்பு, சுயநம்பிக்கை ஆகியவற்றிலிருந்தே பிறக்கிறது.




தலைமைத்துவக் கோட்பாடுகள்.


நடத்தை சார் அணுகுமுறை

1. அயோவா பல்கலைக்கழக ஆய்வு
  1. ஜனநாயகத் தலைமைத்துவம்
  2. எதேச்சாதிகாரத் தலைமைத்துவம்
  3. தலையிடாத் தலைமைத்துவம்
2.ஒஹியோ பல்கலைக்கழக ஆய்வு
  1. அமைப்பை முதன்மைப்படுத்தல்
  2. பணியாளரைக் கருத்திற்கொள்ளல்
3.மிக்சிகன் பல்கலைக்கழக ஆய்வு
    1. வேலையை மையமாகக் கொண்ட தலைமைத்துவ நடத்தை
    2. பணியாளரை நடத்தை மையமாகக் கொண்ட தலைமைத்துவ
4.பிளேக், மோற்றன் ஆகியோரின் தலைமைத்துவச் சட்டகம்
  1. சனசமூக முகாமைத்துவம்
  2. வறிய நிலை முகாமைத்துவம்
  3. நடுநிலையான முகாமைத்துவம்
  4. அதிகாரத்துக்குப் பணியும் முகாமைத்துவம்
  5. குழு முகாமைத்துவம்


சூழ்நிலை சார் அணுகுமுறை

சூழ்நிலையின் சாதகத் தன்மைக்கேற்ப தலைமைத்துவப் பாங்கு மாறுபடுகின்றது என்பது இக்கோட்பாட்டின் மையப் பொருள்

பீட்லர்
1. பணி மையமான
2. உறவு மையமான




தலைமைத்துவப் பாணிகள்.

Jacob Getzel இன் படி,
  • நிறுவன பாணி
  • தனியாள் பாணி
  • இடைபட்ட பாணி
Kert Levin இன் படி
  • சர்வாதிகார தலைமைத்துவப் பாணி
  • ஜனநாயக தலைமைத்துவப் பாணி
  • சுதந்திரமான தலைமைத்துவப் பாணி
Robert House இன் படி,
  • அடைவு மையமான
  • வழிநடாத்தும் தலைவர்
  • பங்குபற்றல்
  • உதவும்



தலைமைத்துவப் பாங்குகள்

மெக்ஸ் வெபர்
1. பணித்துறைத் தலைவர்
2.வசீகரத் தலைவர்
கர்ற் லீவின், லிப்பிற், வைற்
1. ஜனநாயகத் தலைவர்
2. எதேச்சாதிகாரத் தலைவர்
3. தலையிடாத் தலைவர்
பீட்லர்
1. பணியாளர் சார்ந்த தலைமைத்துவம்
2. பணி சார்ந்த தலைமைத்துவம்
கிறீன்லீப் 
பணியாள் தலைவர்
பர்ன்ஸ்
1. கொடுத்து வாங்கும் தலைமைத்துவம்
2. நலைமாற்றத் தலைமைத்துவம்
ரெனன்பாம், ஸ்மித், பீட்லர், ஹேர்சே, பிளான்சாட்
  சூழ்நிலைசார் தலைமைத்துவம்




21 ஆம் நூற்றாண்டிற்கான பாடசாலை தலைமைத்துவம்
  • அதிபர் தலைமைத்துவம்
  • பாடசாலையொன்றில் கல்வியின் தரத்தை அதிகரிப்பதாகவே அதிபரின் தலைமைத்துவம் காணபப்ட வேண்டும் (Field Holden & Lawlor, 2000)
  • கற்றல் சமூகத்தை உருவாக்கல் (Caldiwell & Spinks, 1998)

அதிபரின் தலைமைத்துவ வகிபங்கு
  • தரவு முகாமைத்துவம்
  • மனித முகாமைத்துவம்
  • சேவை மற்றும் வசதிகள் முகாமைத்துவம்
  • நிதி முகாமைத்துவம்
  • இடைத்தொடர்பு முகாமைத்துவம்



அதிபர் தலைமைத்துவத்தில் கவனம் செலுத்த வேண்டிய துறைகள்.

  • மாணவர்
  • ஆசிரியர்கள்
  • பாடவிதானம்
  • பாடஇணைச் செயற்பாடு
  • பௌதிக வளம்
  • பாடசாலை சமூகம்
  • ஆலோசனை செயற்பாடுகள்
  • நிர்வாகம்
  • நிதி


21C தொடர்பான ஒவ்வொரு தலைமைத்துவம்
  • திறன் சார் தலைமைத்துவம்
  • பரந்த தேர்ச்சிகள், திறன்கள் காணப்பட வேண்டும் எனக் குறிப்பிடுகின்றது
  • தேர்ச்சிகள் சில...
  • விமர்சன ரீதியான சிந்தனை
  • ஆக்கபூர்வமான சிந்தனை
  • விழிப்புணர்வு
  • தொடர்பாடல்
  • சமூக மற்றும் கலாச்சார நுண்ணறிவு
  • குழு மற்றும் ஒத்துழைப்பு செயல்முறைகளை எளிதாக்குதல்

ஆசிரியரின் தலைமைத்துவம்
  • வகுப்பறை மற்றும் மாணவர் செயற்பாடு
  • Sergiovani, 1996 இன் படி,
  • கல்வியியல் தொடர்பான தலைமைத்துவம்
  • வகுப்பறை முரண்பாட்டைத் தீர்த்தல்
  • சமூக ஒத்துழைப்பைப் பெறல்


21C தொடர்பாக ஆசிரியர் தலைமைத்துவம்

ஆசிரியர்களின் தலைமைத்துவப் பணிகள்
  • கலைத்திட்ட பாடவிதான பணிகள்
  • இணைக்கலைத்திட்டச் செயற்பாடுகள்
  • பாடசாலை அபிவிருத்தி வேலைகள்
  • ஆசிரியர் வாண்மை விருத்தி வேலைகள்
  • வகுப்பாசிரியர் கடமைகள் பொறுப்புக்கள்
  • ஆசிரியரின் மேற்பார்வைப் பணிகள்
  • பாடவிதான இணைப்பாளராக
  • மாணவருடனான உறவுகள்
  • மாணவரைக் கற்கத் தூண்டல்
  • வழிகாட்டால் ஆலோசனை முகாமை
  • பெற்றோருடனான உறவுகள்



ஆசிரியர் தலைமைத்துவத்தின் இயல்புகளும் செயற்பாடுகளும்
  • வகுப்பறைச் சூழலை சிறப்பாகப் பெணல்
  • பாடத்தைத் திட்டமிடல்
  • கற்றல் வளம், முறை மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் தீர்மானம் எடுத்தல்
  • வகுப்பறை, குழு, தனியாள் கற்றற் செயன்முறையை ஒழுங்கமைத்தல்
  • • வள மற்றும் நேர முகாமைத்துவம்
  • கற்றல் இலக்கை விளங்கிக் கொள்ளல்




Tags:

Psychologytamil Leadership Social Psychology Lead Skills social skills Social Influence Social Norms Social Facilitation Social Loafing
WhatsApp Google Map

Safety and Abuse Reporting

Thanks for being awesome!

We appreciate you contacting us. Our support will get back in touch with you soon!

Have a great day!

Are you sure you want to report abuse against this website?

Please note that your query will be processed only if we find it relevant. Rest all requests will be ignored. If you need help with the website, please login to your dashboard and connect to support