TED Talks in Chris Anderson !

By Sivanganam Prasad
5th October, 2025

 
TED Talks in Chris Anderson

ஒரு மேடைப் பேச்சுக்கு எப்படியெல்லாம் தயாராக வேண்டும் என்று, உலகப் புகழ் பெற்ற TED conference-ஐ நடத்தும் Chris Anderson எழுதிய புத்தகம் இது. புத்தகத்தில் speech techniques பற்றியும், அதைப் பயன்படுத்திப் பார்வையாளர்களைக் கவர்ந்த பேச்சுக்களைப் பற்றியும் சொல்கிறார். Notes போஸ்ட் பண்றதுக்கு முன்னாடி, பிடிச்ச பேச்சுக்களை மட்டும் தனியா எழுதியிருக்கேன்.

Speech by: Richard Turere
Technique: How to use visuals to enhance your speech
நம் பேச்சின் நடுவில் காண்பிக்க நினைக்கும் போட்டோக்கள்/slides-ஐ கவனமாகத் தேர்ந்தெடுப்பதும், அவற்றை சரியான நேரத்தில் காண்பிப்பதும், பேச்சுக்குப் பெரும் பலம் சேர்க்கும். கென்யாவில் வாழும் ஒரு சிறுவன், சிங்கங்களிடமிருந்து தன் வீட்டு மாடுகளைப் பாதுகாத்த கதையைச் சொல்லும் போது, காண்பிக்கும் போட்டோக்கள் நாம் கென்யாவிற்கே சென்ற உணர்வு வரும். பேச்சும் அத்தனை எளிமை. Loved it.

Speech by: Salman Khan
Technique - How to deliver a contradicting idea
பார்வையாளர்கள் ஆழமாக நம்பும் ஒரு கருத்துக்கு மாறான இன்னொரு கருத்தை அவர்கள் ஒத்துக்கொள்ளும் விதமாக எடுத்துச் சொல்வது எளிதில்லை. அப்படி, 'வீடியோக்கள் பார்ப்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கு நல்லதில்லை' என்ற கருத்துக்கு எதிர் கருத்தான, 'வீடியோக்களைப் படிப்புக்காகப் பயன்படுத்துவது எப்படி அவர்களுக்கு நன்மை தரும்' என்று விளக்குகிறார்.

Speech by: Monica Lewinsky
Technique: How to overcome fear

பில் கிளிண்டன் - மோனிகா லெவின்ஸ்கி விவகாரம் ஏற்படுத்திய பரபரப்பு எல்லாருக்குமே தெரிஞ்சது தான். இதனால், மோனிகா லெவின்ஸ்கி சுமார் 15 ஆண்டுகள் விலகி இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். பின்னர் 2015-ல், பெரும் மனவுறுதியுடன், சில பொதுவெளிகளில் பேச முன்வந்தார். பேச்சுக்குத் தயாராகும் நேரங்களில், அவருக்கு ஏற்பட்ட பயமும் பதற்றமும் வார்த்தைகளில் விவரிக்க முடியாதது. ஆனாலும், அதைக் பார்வையாளர்களுக்கு காண்பிக்காமல், TED மேடையில் இதுவரை சிறப்பாக பேசப்பட்ட உரைகளில் ஒன்றைப் பேசினார். That 'அவராலேயே தைரியமா பேச முடியும் னா, நீங்களும் பேசலாம்' moment.

Speech by: Dan Gilbert
Technique: How to break down a complex concept பார்வையாளர்களுக்குப் பழக்கமில்லாத துறையைச் சார்ந்த ஒரு கருத்தை, அவர்களுக்குப் புரியும்படியாக எப்படி சொல்வது? அந்தக் கருத்துக்குத் தேவையான புதிய, அறிமுகம் இல்லாத வார்த்தைகளை எப்படி அறிமுகப்படுத்துவது? கடினமான சூழ்நிலைகளிலும் சந்தோஷத்தை உருவாக்கக்கூடிய திறன் நம் மூளைக்கு எப்படி வருகிறது என்பதை விளக்கும் இவர் பேச்சில், experience stimulator, impact bias, psychological immune system போன்ற பல terms-ஐ அறிமுகம் செய்கிறார். ஆனால் பார்வையாளர்களுக்குப் புரியும்படியாக, ஒவ்வொரு வார்த்தையையும் ஒரு உவமையோடு சொல்கிறார். பல வருட ஆராய்ச்சியை, இருபது நிமிடப் பேச்சில் இத்தனை எளிதாகச் சொல்வதெல்லாம் ஒரு கலை

Tags:

Tamil Book Review Book Summary in Tamil Tamil Literature Review Tamil Novel Review Short Story Review Poetry Review Educational Book Self-help Book Review Psychological Book Tamil Book Lovers Community
WhatsApp Google Map

Safety and Abuse Reporting

Thanks for being awesome!

We appreciate you contacting us. Our support will get back in touch with you soon!

Have a great day!

Are you sure you want to report abuse against this website?

Please note that your query will be processed only if we find it relevant. Rest all requests will be ignored. If you need help with the website, please login to your dashboard and connect to support