School Counseling ( பள்ளி ஆலோசனை ) ?

By Sivanganam Prasad
13th October, 2025

ஆலோசனை வழங்கும் ஆசிரியரிடத்தில் காணப்பட வேண்டிய ஆலோசனைத் திறன்களும் நடத்தைசார் பண்புகளும்.



ஆலோசனைத் திறன்கள் என்றால் என்ன?

ஆலோசனை திறன்கள் உள்ளடக்கியதுதனிநபர்கள் வணிகங்கள் அல்லது நிறுவனங்களுக்கு திறம்பட ஆலோசனை வழங்கவும் வழிகாட்டவும் அனுமதிக்கும் திறன்கள் மற்றும் பண்புகள்.. வாடிக்கையாளர் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கும், சிக்கல்களை பகுப்பாய்வு செய்வதற்கும், தீர்வுகளை உருவாக்குவதற்கும், மாற்றத்தை செயல்படுத்துவதற்கும் இந்தத் திறன்கள் மிக முக்கியமானவை. 


ஆலோசனைத் திறன்கள் ஏன் அவசியம்?
1. ஆலோசனை நாடியின் பிரச்சினையைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு
2. ஆலோசகருக்குரிய நடத்தைசார் பண்புகளைத் தெளிவாகவும் பொருத்தமான சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்துவதற்கு
3. ஆலோசனை நாடியிடம் விஞ்ஞான ரீதியிலான தலையீட்டினை மேற்கொள்வதற்கு
4. பொருத்தமான ஆலோசனை கூறல் தொடர்பான கொள்கைகளைப் பயன்படுத்துவதற்கு
5.சேவை நாடியுடனான கலந்துரையாடலை செம்மையாக நெறிப்படுத்துவதற்கு
6.ஆலோசனை கூறல் நுட்பங்களைப் பொருத்தமாகக் கையாள்வதற்கு
7. ஆலோசனை கூறல் அமர்வுகளைச் சலிப்பில்லாமல் நிறைவ செய்வதற்கு
8. ஆலோசனை நாடியுடனான சிறந்த தொடர்பாடலைக் கட்டியெழுப்புதற்கு


ஆலோசனை கூறல் தொடர்பான திறன்கள் ?
1. வரவேற்கும் திறன்
2. பரிவுணர்வு காட்டும் திறன்
3.உன்னிப்பாகச் செவிமடுக்கும் திறன்
4. பதிலளிக்கும் திறன் அல்லது எதிர்வினை காட்டும் திறன்
5. எதிர்வாதம் புரியும் திறன்
6. ஆலோசகர் தன்னுடைய விடயத்தில் பெரிதும் அக்கறையுடன் இருக்கிறார் என்ற மனப்பதிவு ஏற்படும் வண்ணம் செயற்படல்.
7. தொடர்பாடல் திறன்
8. பிரதிபலித்தல் திறன்
9. சுருக்கிக்கூறும் திறன் அல்லது பொழிப்பாக்கம் அல்லது அறிக்கைப்படுத்தல்
10. அறிக்கைப்படுத்தும் திறன் அல்லது பதிவு செய்யும் திறன்
11. இறுதிவரை நட்புறவோடு கலந்துரையாடுதல்.
12. ஆலோசனை நாடிக்கு பேச இடமளிப்பதோடு பொருத்தமான இடத்தில் மட்டும் கேள்வி எழுப்ப வேண்டும்.


ஆலோசனை வழங்கும் ஆசிரியரிடத்தில் காணப்பட வேண்டிய நடத்தைசார் பண்புகள் ?

மாணவர்களின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் பெரும் பங்காற்றுபவர் ஆசிரியர் மட்டுமன்றி, அறிவுரை பகர்பவரும் (Counsellor) பெரும் பங்கு வகிக்கிறார். அறிவுரை பகர்பவர் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டி. மாணவர்களின் நலனில் மிகவும் அக்கறையுடன் செயற்பட்டு அம்மாணவர்களின் வாழ்கையை ஒளிமயமானதாக மாற்றும் பணியினைச் செய்கின்ற உன்னத மனிதர்தான் ஆலோசகர் ஆவார். இந்த விடயங்களை Carl Rogers, Kramar போன்றோர்களது ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.



வழிகாட்டுபவருக்கு இருக்க வேண்டிய சிறப்பியல்கள் ?
1. அறிவுத் தெளிவு உடையவர் (Intellectual Competence)
2. சக்தி உடையவர் (Energy)
3. நெகிழ்வுத் தன்மை உடையவர் (Flexible)
4.உதவியளிப்பவர் (Supporter)
5.நல்ல மனம் கொண்டவர் (Good mind)
6.சுய விழிப்புணர்வு உடையவர் (Self-Awarness)


ஆலோசனை கூறுபவருக்கு இருக்க வேண்டிய பண்புகள் ?
உணர்வுபூர்வமானவராக இருக்க வேண்டும்.
நல்லுறவுடன் நடத்தல்
நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும்.
பணிவு
பரிவுணர்வு அல்லது ஒத்துணர்வு
சிந்தனையில் நெகிழ்ச்சி இருக்க வேண்டும்.
உண்மையாக இருத்தல்
அறிவாற்றல் மற்றும் திறமை
மதித்து நடத்தல்
தைரியம்
ஏற்றுக்கொள்ளுதல்
சகிப்புத் தன்மை
புரிந்து கொள்ளல்
தீர்மானம் எடுக்கும் ஆற்றல்
பணிக்காக அர்ப்பணித்தல்
இரகசியம் பேணல்
தலைமைத்துவப் பண்புகள்
ஊக்குவித்தல்
தேக ஆரோக்கியம் மற்றும் புறத்தோற்றம்
முதிர்ச்சி

Tags:

School Counselling Student Support Mental Health in Schools School Counselor Student Wellbeing Education Matters Emotional Support Child Guidance Counselling in Education Positive School Culture
WhatsApp Google Map

Safety and Abuse Reporting

Thanks for being awesome!

We appreciate you contacting us. Our support will get back in touch with you soon!

Have a great day!

Are you sure you want to report abuse against this website?

Please note that your query will be processed only if we find it relevant. Rest all requests will be ignored. If you need help with the website, please login to your dashboard and connect to support