Co-curricular activities ( இணைப்பாடவிதான செயற்பாடுகள் ) ?

By Sivanganam Prasad
12th October, 2025

முறையான பாடவிதானத்தைப் போசிக்கக்கூடிய வகையில் பாடசாலை மூலம் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப் படுவதும் தொடர்ச்சியான மேற்பார்வைக்கு உட்படுத்தப் படுவதுமான செயற்பாடுகளின் தொகுப்பு இணைப்பாட விதான செயற்பாடுகள் ஆகும்.


பாரம்பரிய வகுப்பறைக் கற்பித்தலில் இருந்து ஓரளவுக்கு மாற்றியமைத்து நிர்வகிக்கப்படுவதும், ஒழுங்கமைக்கப்பட்ட பாடசாலை மூலம் செயற்படுத்தப்படுவதுமான சகல செயற்பாடுகளும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் ஆகும்.

பாடசாலை வகுப்பறைப் போதனைகளுக்கு அப்பால் உடல், உள, சமுதாய பண்பாட்டு வளர்ச்சி ஆகியவற்றை வளர்க்கக்கூடிய பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களில் மாணவர்களை பங்குகொள்ளச் செய்வதன் மூலம் மாணவர்களை பூரண மனிதனாக மாற்றும் செயற்றிட்டம் இணைப்பாடவிதான செயற்பாடுகள் ஆகும்.



இணைப்பாடவிதான செயற்பாடுகள்.

பாடசாலை நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு முக்கிய பகுதி.
கல்வியின் பிரதான பாகம்.
நேரசூசியில் இதற்கான நேரம் ஒதுக்கப்படுவதில்லை.
மாணவர்களின் ஆற்றல் வளரும்.
மாணவர்களின் மனப்பாங்கு விருத்தி செய்யப்படும்.
பாடசாலையின் மூலவளங்களுக்கேற்ப திட்டமிடல் வேண்டும்.
பல சமூகத்துடன் இணைந்ததாக திட்டமிடல் வேண்டும்.
அதிபர், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள் இதனை இனங்கண்டு ஒழுங்குபடுத்த வேண்டும்.
சில முயற்சிகள் பாடசாலை நேரத்தில் இடம்பெறும் (வாரத்தில் ஒருமுறை அல்லது இருமுறை) (உதாரணம் : மாணவர் மன்றம்)
பெற்றோர், கல்வித் திணைக்களத்தினரின் ஒத்துழைப்பு பெறப்படல் வேண்டும்.
சமூகத்தின் கலாசார விழுமியங்களிலிருந்து வேறுபடக் கூடாது.


இணைப்பாடவிதான செயற்பாடுகளின் வகைகள்.

வருடாந்த நிகழ்ச்சிகள்
  • வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி
  • இல்ல விவாதப் போட்டி
  • இல்ல மெய்வல்லுனர் போட்டி
  • இல்ல நுண்கலைப் போட்டி
  • பெற்றோர் தினம்
  • வருடாந்த பரிசளிப்பு விழா
  • பாடசாலைத் தினம்
  • மொழித்தினம் (தமிழ், சிங்களம், ஆங்கிலம் )
  • வருடாந்த நிகழ்ச்சிகள்
  • கம்பன் விழா
  • கல்விச் சுற்றுலா
  • சிறுவர் தினம்
  • தைப்பொங்கல் விழா
  • புத்தாண்டு விழா
  • கலை விழா
  • சமய விழாக்கள்
  • வேறு வருடாந்த விழாக்கள்
  • தலைமைத்துவ சேமநல நிகழ்ச்சிகள்

மாணவர் மன்றம்
  • மாணவர் பாராளுமன்றம்
  • மாணவர் தலைவர் வாரம்
  • மாணவர் நலன்புரிச் சங்கங்கள்
  • இலக்கியமும் ஆக்க முயற்சிகளும்

பாடசாலை சஞ்சிகை வெளியீடு
  • வகுப்பு ரீதியான சஞ்சிகை வெளியீடு
  • கண்காட்சி
  • விவாதம்
  • அரட்டை அரங்கம்
  • நாடகம்
  • இலக்கிய மன்றம்
  • கணித மன்றம்
  • விஞ்ஞான மன்றம்
  • மொழி ரீதியான மன்றங்கள்
  • வணிக மன்றம்
  • உடல் வளர்ச்சி, ஆளுமை வளர்ச்சிக்குரியவை

விளையாட்டுக்கள்
  • உடல் வனப்பு முயற்சிகள்
  • அணிவகுப்ப (March Past)
  • உடற் பயிற்சி
  • இசை வாத்தியம் (Band)
  • சாரணியம் (Scout)
  • Cadet
  • பொழுதுபோக்குக் கழகம்


செயற்றிட்டம் (Project)

ஒரு குறித்த நோக்கத்தை அல்லது பெறுபேற்றை அடைவதற்காக தெரிவுசெய்து, திட்டமிட்டு, குறித்த காலப் பகுதிக்குள் அமுல்படுத்துவதன் மூலம் கற்றலையும் தகைமைகளையும் விருத்தி செய்து கொள்ளக்கூடிய செயன்முறை செயற்றிட்டம் ஆகும்.

வேலைத்திட்டமொன்றின் கீழ் விஷேட நோக்கங்களை /நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகப் பயன்படும் செயன்முறை அம்சங்கள் செயற்றிட்டம் ஆகும்.

வேலைத்திட்டம் : ஒரு நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக செய்யவேண்டிய செயன்முறை அம்சங்கள்
செயற்றிட்டம் : வேலைத்திட்டமொன்றின் கீழ் விஷேட நோக்கங்களை / நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற் காகப் பயன்படும் செயன்முறை அம்சங்கள்
இலக்கு : நோக்கத்தை நெருங்குவதற்கு செயன்முறைகள் மூலம் அடைந்து கொள்ளவேண்டிய அளவிடமுடியுமான பெறுபேறுகள்
செயன்முறைகள் : இலக்கை நோக்கிச் செல்வதற்குச் செய்யவேண்டிய விரிவான செயன்முறைகள்
அடையக்கூடியதும் வினைத்திறன் பொருந்தியதுமான ஒரு குறிக்கோள் அல்லது பல குறிக்கோள்கள் காணப்படல். அக்குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்காக திட்டமிடப்பட்டதும் வரிசைக் கிரமமானதுமான செயற்பாடுகள் அடங்கிய பணியொழுங்கு காணப்படல். குறிப்பிட்ட கால வரையறைக்குள் அவ்வேலைத்திட்டத்தைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருத்தல். சம்மந்தப்பட்ட செயற்றிட்டத்தின் வினைத்திறனை மதிப்பீட்டுக்கு உட்படுத்தக்கூடியதாக இருத்தல்.



செயற்றிட்டத்தின் பயன்கள்.

மொணவர்கள் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பங்குற்றுதல்.
மாணவர்கள் சுய நம்பிக்கையுடன் தங்களது தலைமைத்துவ ஆற்றலை முன்னேற்றவும் செயற்படுத்தவும்.
மாணவர்களின் ஆக்கத்திறனையும் புத்தாக்கத்தினையும் அதிகரித்தல்.
மாணவர்கள் பாடசாலையினுள்ளே பெற்றுக்கொள்ளக்கூடிய வளங்களை இனங்காண்பதற்கும் அவற்றை பயன்படுத்து வதற்கும்.
மாணவர்கள் கோட்பாட்டுசார் அறிவு தொடர்பான செயற்பாட்டு அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளல் .
மாணவர்கள் எண்ணக்கருக்களை மிகவும் சரியாக விளங்கிக்கொள்ளல்.
பாடசாலை சமூகத்துடன் நட்புறவான தொடர்புகளை வைத்துக்கொள்ளல்.
இணைப்பாடவிதான செயற்பாடுகளுடன் தொடர்புட்ட பிரச்சினைகளை வினைத்திறனான முறையில் கையாளல்.
மாணவர்கள் பாடசாலை தொடர்பான செயற்பாடுகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபடுதல்.


செயற்றிட்டத்திற்குப் பொருத்தமான துறைகள் /பிரச்சினைகளுக்கான சில உதாரணங்கள்.

இணைப்பாட செயற்பாடுகளில் மாணவர்களின் பங்குபற்றலை முன்னேற்றுவது தொடர்பான செயற்பாடுகள் - விளையாட்டு, அழகியல்,செஞ்சிலுவைச் சாரணியர், விவாதப் போட்டி, கண்காட்சி போன்ற நிகழ்ச்சித் திட்டங்கள்.
பாடசாலை மாணவர்களின் சுகாதார வசதிகள் / போசணை / மாணவர்களின் நலன்புரி வசதிகளை முன்னேற்றுவது தொடர்பான செயற்றிட்டம்.
விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாட மன்றங்களை செயற்படுத்தல் .
தலைமைத்துவ ஆற்றல்கள் /முன்வைத்தல் திறன்கள் /ஊக்கல் /ஈடுபாடு தொடர்பானவற்றிக்குப் பாடசாலை மாணவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள்.
மாணவர் ஒழுக்கத்தினை முன்னேற்றுதல் தொடர்பான நிகழ்ச்சித் திட்டங்கள்.
மாணவர்களின் அழகியல் தொடர்பான பிரச்சினைகள்
மாணவர்களில் நேரான மனப்பாங்குகளை விருத்தி செய்தல்.


செயற்றிட்ட முன்மொழிவு (Project Proposal)

செயற்றிட்ட நோக்கங்களுக்கும் கால வரையறைக்கும் ஏற்றபடி திட்டமிடப்பட்ட செயற்பாடுகள்.
செயற்றிட்டத்தினால் எதிர்பார்க்கப்படும் பெறுபேறு
கால அட்டவணை
உத்தேச வரவு -செலவுத்திட்டம்
பாடசாலை அதிபரின் அனுமதி
குறிப்பு : அனுமதிக்கப்பட்ட செயற்றிட்டத்தின் முன்மொழிவு இறுதி செயற்றிட்ட அறிக்கையுடன் இணைக்க வேண்டும்.

Tags:

#Education Information Tamil Education Kazhvi Thagaval Student Awareness LearningIs Power Education For All Knowledge Sharing Tamil Learning Education Matters Future Through Education
WhatsApp Google Map

Safety and Abuse Reporting

Thanks for being awesome!

We appreciate you contacting us. Our support will get back in touch with you soon!

Have a great day!

Are you sure you want to report abuse against this website?

Please note that your query will be processed only if we find it relevant. Rest all requests will be ignored. If you need help with the website, please login to your dashboard and connect to support