AI காலத்தில் நாம் இழந்து கொண்டிருக்கும் 6 முக்கிய விஷயங்கள் ?

By Sivanganam Prasad
1 hour ago

 AI காலத்தில் மனிதர்களின் கவனம், சுய அடையாளம், முடிவு திறன் போன்றவை மெல்ல குறைந்து வருகிறது. இந்த ஆழமான வழிகாட்டியில், உங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர 6 முக்கிய வழிகளை அறியுங்கள்.

இன்றைய உலகில் Artificial Intelligence (AI) நம் வாழ்க்கையை எளிமையாக்கி, வேகமாக மாற்றி வருகிறது. ஆனால் இந்த முன்னேற்றத்தின் பின்னால் நாம் கவனிக்காத சில முக்கியமான மனித திறன்கள் மெல்ல மறைந்து வருகின்றன. இந்த இழப்புகள் திடீரென்று தெரியாது. அவை மெதுவாக, “வளர்ச்சி” என்ற பெயரில் நம் வாழ்க்கையில் இருந்து மறைந்து கொண்டிருக்கின்றன.


AI காலத்தில் நாம் இழந்து கொண்டிருக்கும் 6 முக்கிய விஷயங்கள்

1. சிரமத்தின் மதிப்பு (The Illusion of Ease)

AI அனைத்தையும் எளிதாக்குகிறது. ஆனால் சிரமம் இல்லாமல் நாம் வளர முடியாது. சிரமம்  ஒரு அனுபவம் அதுவே உங்கள் அறிவு. சில சிரமங்கள் வாழ்க்கையை உருவாக்கும் அடித்தளம் என்பதை மறந்துவிடக் கூடாது. எளிய வ

ழியை தேர்வு செய்வதற்கு முன், அது உங்களை வளர்க்குமா என்று கேளுங்கள்.

2. கவனத்தின் வீழ்ச்சி (Collapse of Attention)

மல்டிடாஸ்கிங் நம்மை திறமையானவர்களாக அல்ல, கவனம் கலைந்தவர்களாக மாற்றுகிறது. வேகமான வாழ்க்கை, குறைந்த கவனம் மற்றும் குறைந்த கவனம்,0 குறைந்த மனிதத் தொடர்பு இது கவனத்தின் வீழ்ச்சி காரணம். தினமும் ஒரு வேலை மட்டும் முழு கவனத்துடன் செய்யுங்கள்.

3. சுய அடையாள இழப்பு (Loss of Self)

நாம் எழுதுவது, பேசுவது என்பது நம் அடையாளத்தை உருவாக்குகிறது. ஆனால் இன்று Email, Thoughts, Stories இப்படி எல்லாவற்றையும் AI க்கு கொடுத்தால், நம் “நான்” என்ற உணர்வு குறையும். உங்கள் உணர்வுகளை AI அல்ல, நீங்களே எழுதுங்கள்.

4. சுகமான சிக்கல் (Comfort Trap)

நாம் பிரச்சினைகளைப் பார்த்தும், அதை தவிர்க்க முயல்கிறோம். தெரியும் ஆனால் செயல் இல்லை, அறிவு ஆனால் மாற்றம் இல்லை, AI பற்றியும் இதே நிலைதான். “நான் தவிர்க்கும் உண்மை என்ன?” என்று உங்களிடம் கேளுங்கள்.

5. தீர்மான திறன் சிக்கல் (Crisis of Judgment)

AI நமக்காக வேலை செய்கிறது. ஆனால் முடிவெடுக்க வேண்டியது இன்னும் நாம்தான். ஒவ்வொரு நாளும் நீங்கள் எடுத்த முடிவுகளை சிந்தியுங்கள்.

6. செயல் திறன் இழப்பு (Loss of Agency)

AI காலத்தில் நிச்சயமின்மை, பயம் அதிகம் ஆனால் செயல்பாடு குறைவு, ஆனால் நமக்கு இன்னும் சக்தி இருக்கிறது. பழைய நல்ல அனுபவங்களை மீண்டும் நினைவில் கொள்ளுங்கள். அது உங்களுக்கு வலிமை தரும்.


🔄 உங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர 6 வழிகள்

✔️ தினமும் உங்கள் குரலில் எழுதுங்கள்
✔️ ஒரு வேலைக்கு முழு கவனம் செலுத்துங்கள்
✔️ சிரமத்தை தவிர்க்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்
✔️ உண்மையை எதிர்கொள்ளுங்கள்
✔️ உங்கள் முடிவுகளை நீங்களே எடுங்கள்
✔️ உங்கள் கடந்த அனுபவங்களில் இருந்து வலிமை பெறுங்கள்.


AI என்ன செய்ய முடியும் என்பது முக்கியமல்ல.  நாம் இன்னும் நமக்காக என்ன செய்ய தயாராக இருக்கிறோம்? இதுவே இந்த காலத்தின் மிக முக்கியமான கேள்வி

Tags:

#Artificial Intelligence #Machine Learning #Deep Learning #Neural Networks #Natural Language Processing #career #job #Automation #AI Ethics #Generative AI

Related Updates

WhatsApp Google Map

Safety and Abuse Reporting

Thanks for being awesome!

We appreciate you contacting us. Our support will get back in touch with you soon!

Have a great day!

Are you sure you want to report abuse against this website?

Please note that your query will be processed only if we find it relevant. Rest all requests will be ignored. If you need help with the website, please login to your dashboard and connect to support

;