STEAM கல்வி என்பது, நியஉலகின் (Real world) பரச்சினைகள் பற்றி பரந்துபட்டு சிந்திப்பதற்கு மாணவர்களை ஊக்கப்படுத்தும் ஒன்றிணைந்த கற்றல் அணுகுமுறையாகும்.

விஞ்ஞானம் (Science), தொழில்நுட்பம் (Technology), பொறியியல் (Engineering), கலை (Arts) மற்றும் கணிதம் (Mathematics) ஆகியதுறைகளின் கூட்டிணைவாகும்.

Georgette Yakman என்பவர் STEAM கல்வியை முதன்முதலில் 2006 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார். STEAM என்பது எழுதப்பட்ட கலைத்திட்டம் ஒன்றல்ல. இதுவொரு கற்றல் அணுகுமுறையாகும். (Learning approach).


STEM கல்வி மற்றும் STEAM கல்வி இரண்டிற்கும் இடையிலான வேறுபாடு.

STEM கல்வி மற்றும் STEAM கல்வி இரண்டுமே விஞ்ஞான எண்ணக்கருக்களை அணுகுவதற்கான வழிமுறையாகும்.

ஆனால், STEM கல்வி, பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வன்திறன்களை (Hard skills) மட்டும் பிரயோகிக்கின்றது. ஆனால் STEAM கல்வி பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வன்திறன்களை (Hard skills) மற்றும் மென்திறன்கள் (Soft skills) இரண்டையும் பிரயோகிக்கின்றது.

மேலும் STEAM கல்வி, STEM எண்ணக்கருக்களை புரிந்துகொள்வதற்காக கூட்டுணர்வை (Collaboration) ஊக்கப்படுத்துகின்றது.


STEAM கல்வியின் இயல்புகள்

21 ஆம் நூற்றாண்டின் பணியாட்களிற்கு தேவையான திறன்களான பிரச்சனை விடுவித்தல் (Problem solving) மற்றும் திறனாய்வுச்சிந்தனை (Critical thinking) என்பவற்றை கட்டியெழுப்புவதற்கான கல்விசார் மாதிரிகையாக (Educational Model) STEAM கல்வி கருதப்படுகின்றது.

எதிர்காலத்தில் மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்வதற்கு STEAM கல்வி அவசியமாகும். STEAM கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள், விஞ்ஞானம் (Science), பொறியியல் (Engineering) மற்றும் ஆய்வு (Research) ஆகிய பரந்துபட்ட துறைகளில் மாணவர்களை, வேலைவாய்ப்புக்காக தயார்ப்படுத்துகின்றன.

STEAM துறையில் கற்றவர்கள், பரந்துபட்ட தொழில்துறையில், வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்


STEAM கல்வியின் நன்மைகள்

  • நியஉலகின் (Real world) பிரச்சனைகளை வெளிக்காட்டுகிறது. 
  • நேரடிக்கற்றலை (Hands on learning) உள்ளடக்குகிறது.
  • (Independent exploration) ஊக்குவிக்கின்றது.
  • கூட்டுணர்வை கற்பிக்கிறது.
  • கல்வியில் சமத்துவத்தை ஊக்குவிக்கிறது.
  • (Developing soft skills) தொடர்பாடல் (communication) ພໍ (Critical thinking) படைபாற்றல் (Creativity) (Problem solving) एं (Collaboration) ஈடுபாடு (Engagement) மற்றும் ஊக்கல் (Motivation)
  • கற்றல் அனுபவங்களை தனியுரிமையாக்குதல் (Personalizing learning experiences )


STEAM கல்வி கற்பித்தல் முறைகள்

செயற்றிட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கற்றல் (Project-based learning). ( கணக்கீட்டு சிந்தனை) மார்க்கர் இடைவெளிகள். STEAM கற்றல் செயற்பாட்டுக்கான உதாரணங்கள்

  • • DIY பொறியியல்
  • • பாலம் கட்டும் சவால்கள் பொறியியல் யோசனைகளை ஆராய்கின்றன
  • • எரிமலையை உருவாக்குங்கள் (அறிவியல்)
  • • ஆப்பிள் ஆக்சிஜனேற்றம் (அறிவியல்)

Post a Comment

Previous Post Next Post