நிர்வாக குழு அச் சமூகம் தொடர்பாக யாப்பு ஒன்றை உருவாக்குவது அவசியமாகும். அந்த யாப்பிற்கு அமைவாக குழுவின் கொள்கைகளை நிறைவேற்றுவதுடன் அங்கத்தவர்களின் அபிவிருத்திக்கு அவசியமான சூழலை உருவாக்குவதற்காக நிர்வாக குழு செயற்படுவது முக்கியமாகும். சமூகத்தில் பொறுப்புக்களைப் பகிர்தல், பொது உடன்பாட்டிற்கமைவாகச் செயற்படுதல், பொது நோக்கத்திற்காகச் செயற்படுதல், ஜனநாயக மயமாக்கல் விஞ்ஞான ரீதியாகச் சிந்தித்தல்,  நிர்வாக குழுவின் அபிவிருத்தியை ஏற்படுத்துவதாகும். விசேடமாக மாதாந்தக் கூட்டம் நடாத்துவது அது தொடர்பாக அவசியமானதாகும்.

அதனூடாக அங்கத்தவர்களைக் குழுவாகச் செயற்படுவதற்குச் வழங்குவதோடு அவர்களுக்குச் சந்தோசத்தையும் சந்தர்ப்பம் விநோதத்தையும் பெற்றுக்கொடுக்கும். சந்தோசத்தையும் விநோதத்தையும் வகிப்பது அனுகூலமானதொன்றாகும். அமைப்பில் போது கீழ்வருமாறு உத்தியோகத்தர் சபையொன்றினைத் தெரிவுசெய்து தொடங்க முடியும். அமைப்பில் தலைவர், செயலாளர், மற்றும் பொருளாளர் போன்றவர்களை அங்கத்தவர்களிடையே தெரிவுசெய்து அங்கத்தவர்களின் எண்ணிக்கை 15 இற்கும் மேற்பட்டதாக அதிகரிக்கும் போது கீழ்வருமாறு உத்தியோகத்தர் சபையொன்றினைத் தெரிவுசெய்து நியமிக்க முடியும்.

  1. தலைவர்
  2. செயலாளர்
  3. பொருளாளர்
  4. உபதலைவர்
  5. உபசெயலாளர்
  6. ஆலோசகர்


தலைவர்

ஒரு அமைப்பொன்றில் பிரதான உத்தியோகத்தரான தலைவர் ஒவ்வொரு வருடத்திலும் நடாத்தப்படும் வருடாந்தக் கூட்டத்தின் அங்கத்தவர்களின் வாக்குகளால் சன்நாயக் முறைப்படி செய்யப்படுகின்றார். அவ் அமைப்பொன்றிற்கு ஒரு வருட காலம் தலைமை பதவியை வகிப்பவராக அவர் இருப்பார். அவர் உத்தியோகத்தர்களின் பணிப்பா கொள்ளல் சபையிலும் தலைமை வகிப்பார் தன்னுடைய வருட காலப்பகுதியில் அமைப்பிற்குப் புதிய அங்கத்தவர்களைத் இணைத்துக் அங்கத்தவர்களின் உற்சாகத்தைப் பாதுகாத்துக் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளல், வேலைகள் நடைபெறுவதைக் கவனித்தல் என்ற வகையில் அமைப்பைத் தன்னுடைய காலத்தில் முன்னேற்றிச் செல்லல் தலைவரின் செயற்பாடாக இருக்க வேண்டும்.


தலைவரின் பொறுப்புக்கள்.

1. குழுவின் அங்கத்தவர்களுடன் ஒரு நிகழ்ச்சித் திட்ட (Project planning Workshop) அமரவை நடாத்தி அவ் அமைப்பிற்கான ஒரு வருடாந்த செயற்றிட்டம் ஒன்றினைத் தயாரித்தல்.

2. சகல உத்தியோகத்தர்களினதும் செயற்பாடுகளையும், பொறுப்புக்களையும் பற்றிய ஒரு விளக்கத்தன்மையை அந்த உத்தியோகத்தர்களுக்குத் தேவையான உதவியையும் வழிகாட்டல்களையும் வழங்குதல்.

3. உத்தியோகத்தர்களுக்கு தங்களுடைய, பணி தொடர்பாளி அறிவு, எண்ணங்கள் மற்றும் திறமைகளை வளர்க்கக் கூடிய பயிற்சியை வழங்குதல்.

4. குழுவின் நிதி நிலைமைபற்றித் தெளிவுடன் இருத்தல் அங்கத்துவப் பணத்தைத் திரட்டி குழுவிடம் உரிய நேரத்தில் கிடைக்கக்கூடியதாக அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

5. அங்கத்தவர்களின் கூட்டங்களுக்கும் தலைமைதாங்கி கூட்டத்தை நெறிப்படுத்துதல்.

6. அங்கத்தவர்களையும் உத்தியோகத்தர்களையும் உற்சாகப்படுத்தித் தேவையான தூண்டுதலை வழங்குதல்.

7. அங்கத்தவர்களினதும் உத்தியோகத்தர்களினதும் செயற்பாடுகளை மதித்தல்.

8. குழுவிற்கான புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளல்.

9. அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பிரதேச மற்றும் தேசிய மட்டத்திலான கூட்டங்களுக்குச் சமூகமளித்தல் புதிய அமைப்புகளுடனும், ஏனைய அமைப்புகளுடனும், தேசிய அமைப்புக்களுடனும் தொடர்பாடல் பாலமாகச் செயற்படுதல்.

10. குழுவின் பிரதான மக்கள் தொடர்பாடல் நபராகவும், அமைப்பின் பேச்சாளராகவும் செயற்படுதல்.

11. பயனுள்ள சமூக முகாமைத்துவத் திட்டமொன்றினைத் தயாரித்து அதனை அமுலாக்குதல்.

12 அமைப்பினால் மேற்கொள்ளப்படும் வேலைகள் பற்றி அடிக்கடி விமர்சனத்தை மேற்கொண்டு முன்னேற்றத்தைக் கவனித்தல்.

13. பணிப்பாளர் சபையிலும் அங்கத்தவரிடையேய வேலை செய்வதற்கான ஒரு தகுந்த சூழ்நிலையினையும் நன்மை தரும் கலாச்சார அமைப்பொன்றினையும் கட்டியமைத்தல்.

14. குழுவிற்கு அங்கத்துவத்தையும் சமுதாயத்தினுள் அதற்கான வரவேற்பையும் வளர்ச்சியடையும் படியான ஒரு முழுமையான செயற்றிட்டமொன்றினைத் தயாரித்தல்.

15. கடந்த வருடத்தின் போது முழுமையாக்க முடியாமற்போன செயற்றிட்டங்கள் இருப்பின் அவற்றைப் பூர்த்தியாக்குதல்.

16. குழுவின் எல்லாச் செயற்றிட்டங்களும் யாப்பில் குறிப்பிடப்படும் நோக்கங்களுடன் நடைபெறுகின்றதா, என்பதைப் பற்றிக் கவனித்தல்.

 17. தன்னுடைய பதவிக்காலத்தில் சகல செயற்றிட்டங்கள் தொடர்பான அறிக்கையொன்றினைத் தயாரித்துக்கொள்ளல்



செயலாளர்

செயலாளர் பதவியானது ஒவ்வொரு குழுவினதும் மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். எனவே செயலாளரின் செயற்பாடானது ஒரு அமைப்பின் வெற்றிக்கோ அல்லது தோல்விக்கோ நேரடியாக சம்பந்தப்பட்டதொன்றாகும். செயலாளர்கள் கூட்டங்களின் போது பெரும்பாலும் பல மௌனமாகி இருக்கிறார்கள் என்பது காணக்கூடியதாக உள்ளது ஆயினும் அது அவ்வாறு நிகழக்கூடாது தன்னுடைய கருத்தை அல்லது எண்ணத்தை முன் வைக்க வேண்டிய கடப்பாடு செயலாளருக்கு உண்டு.


செயலாளரின் பொறுப்புக்கள்

1. அங்கத்தவர்களின் பெயர்ப் பட்டியலைத் தாயாரித்தலும் அமைப்பின் அங்கத்துவத்தைப் பெறுவது என்பது ஒரு பராமரித்தலும் (Maintaining)

2. செயலாளர் முழு அங்கத்துவப் பணம் செலுத்தப்பட்ட அங்கத்துவம், தகுதிகாண் அங்கத்துவம் ஆகிய தகவல்களை உள்ளடக்கியதான அங்கத்தவர்களின் பட்டியலொன்றை வைத்திருக்க வேண்டும்.

3. அங்கத்தவர்களின் கூட்டம், பணிப்பாளர் சபைக்கூட்டம், வருடாந்தக் கூட்டம் ஆகிய கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்தலும் கூட்டங்களை ஒழுங்குபடுத்தலும்

4. தலைவருடன் கலந்துரையாடி திகதி மற்றும் நிகழ்ச்சி நிரல் என்பனவற்றைத் தீர்மானித்தல். கூட்டங்களைப் பற்றி அறிவித்தல் அங்கத்தவர்களையும் உத்தியோகத்தர்களையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து கூட்டங்களுக்கான பொறுப்புக்களை முந்திய கூட்டங்களின் அறிக்கைகளை வாசித்து அவற்றில் இருந்து தோன்றும் விடயங்களைப் பற்றியும் பிரச்சனைகளைப் பற்றியும் கலந்துரையாடலுக்குத் தயாராகுதல்.

5. இவ் அமைப்பினால் நடாத்தப்படும் அங்கத்தவர்களின் பணிப்பாளர் சபைக்கூட்டம் மற்றும் வருடாந்தக் கூட்டம் என்பன தொடர்பான அறிக்கைகளைத் தயார் செய்தல்.


பொருளாளர்

அமைப்பில் சிறந்த நிதி நிர்வாகம் எங்கள் அமைப்பின் வெற்றிப்பாதையின் மீது செல்வாக்குச் செலுத்துகிறது. அமைப்பின் நிதி முகாமைத்துவம், நிர்வாகம் என்பவற்றைப் பொருளாளரே மேற்கொள்கிறார். எனினும் பணம் பெறுவதும் அதனைப் பயன்படுத்துவதும் பொருளாளரால் அமைப்பின் வரவு செலவுப் பிரேரணைகளைத் தயாரித்து அதனைப் மட்டுமே மேற்கொள்ளப்படுவதாகக் கருதக்கூடாது.


பொருளாளரின் பொறுப்புக்கள்.

கடந்த வருடத்தின் வரவு செலவு திட்டத்திற்கமைவாக வரவு, செலவு தொடர்பான தெளிவைப் பெற வேண்டும். பின்பு 4U அமைப்பின் வருடாந்த வேண்டும். அமைப்பின் அங்கத்துவ நிதியம் மற்றும் பிரதான வேலைத்திட்டத்தைக்கமைவாக வரவு செலவைக் கணப்பீடு செய்ய பராமரிப்புக்களுக்கான செலவுகளையும் கவனத்திற்கொண்டு வரவு செலவுப் பிரேரணைகளைத் தயாரித்தல் வேண்டும்.

1. பணம் சம்பாதிக்கும் செயற்றிட்டங்கள், உதவிப்பணம், செலுத்தி அமைப்பின் வருமான வளர்ச்சிக்காகத் தேவையாகும் பெறுதல்

3. அமைப்பின் வரவு செலவுப் பிரேரணைகள் தொடர்பான அறிக்கையைப் பணிப்பாளர் சபைக்கும் பொதுச் சபைக்கும் முன்வைத்து அனுமதியைப்பெறல்.

4. ஒவ்வொரு செயற்றிட்டத்திலும் உள்ள நிதி நிலை பற்றிக் கவனம் செலுத்திப் பொருத்தமானதொரு நிதி நிர்வாகத்தை ஏற்படுத்தலும், நிதி அறிக்கையை அனுமதித்தலும்

5. குழுவின் அங்கத்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் அல்லது ஒரு செயற்றிட்டத்தின் வருமானத்தை அதிகரிக்காமல் செலவை மட்டும் அதிகரித்தலை எதிர்த்தல்.

5. எல்லா அங்கத்தவர் கூட்டத்திலும், வருடாந்தக் கூட்டத்திலும் ஒரு வரவு செலவு அறிக்கையை முன் வைத்து அனுமதியைப் பெறுதல்.

7. அமைப்பின் கட்டணங்களையும் வரவுகளையும் பற்றிய அறிக்கையொன்றினைத் தயாரித்தல்.

8. அமைப்பின் வங்கிக் கணக்கொன்றைத் தொடங்கி அதனை முன்னெடுத்துச் செல்லல்

8. அங்கத்துவப் பணத்தைத் திரட்டலும் அது தொடர்பாக ஒரு அறிக்கையைத் தயாரித்தலும்.

9. அமைப்பில் பணச் சிக்கனம் முக்கியமானது. செலவைக் குறைத்தல் மற்றும் ஒழிவு மறைவு இன்றிச் செயற்படல் வேண்டும்.

10. வருட இறுதியில் ஒரு சந்தாப்பணம் அமைப்பிற்குச் சேரும்படியாக நிதிமுகாமைத்துவத்தை மேற்கொள்ளல்.


உப தலைவர்

15 இற்கு மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட 40 அமைப்பால் துணைத் தலைவரைத் தெரிவு செய்ய முடியும். தலைவர் இல்லாத சந்தர்ப்பங்களில் பதில் தலைவராகச் செயற்படுவதற்கு மேலதிகமாக இன்னும் சிறப்பான செயற்பாடுகள் அமைப்பொன்றின் துணைத்தலைவரால் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒருவர் உபதலைவர் பதவியை வகித்தல் என்பது எதிர்காலத்தில் தங்கள் அமைப்பின் தலைமைப் பொறுப்பைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு பயிற்சியாகும். எங்கள் அமைப்பின் பணிப்பாளர் சபைக்கும் சமுதாயத்திற்கும். இடையில் செயற்படுபவர் துணைத்தலைவர் ஆவார்.


உப தலைவரின் பொறுப்புக்கள்.

1. எங்கள் அமைப்பின் கட்டமைப்பு, அதிகாரம், யாப்பு, வருடாந்த வேலைத் திட்டம் மற்றும் வரவு செலவு பற்றிய அறிவினைப் பெறுதல்.

2. தலைவருடன் கலந்துரையாடித் தன்னுடைய பொறுப்புக்களின் வரையறை பற்றித் தெளிவடைதல்.

3. தன்னால் மேற்பார்வை செய்யப்படும் செயற்றிட்டங்களின் அங்கத்தவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் இலக்குகள், பொறுப்புக்கள். முன்னேற்றம் என்பவற்றை அறிக்கையிடும் முறை தொடர்பாக ஒரு உடன்பாட்டிற்கு வருதல்.

4. தலைவரிடமும் அறிக்கையிடுதல். பணிப்பாளர் சபையிடமும் முன்னேற்றத்தை பார்வையிடல்

5. அமைப்பின் அங்கத்தவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் திறமைகளையும் பலவீனங்களையும் புரிந்து கொண்டு தேவையான பயிற்சிகளை ஒழுங்குபடுத்துதல்,

6 அமைப்புக்குள் தலைமைத்துவப் பயிற்சி, திட்டவரைபு, போதைப் பொருள் எதிர்ப்பு போன்ற சமுதாய அபிவிருத்தி விரிவுரைகள் அமர்வுகளை ஒழுங்குபடுத்துதல்,

7. அமைப்புக்காகப் புதிய அங்கத்தவர்களைச் சேர்த்துக் கொள்ளளி மற்றும் அவர்களுக்குத் தேவையான அடிப்படைப் பயிற்சிமை வழங்குதல்,

8. அமைப்பிற்கும் சமுதாயத்திற்கும் இடையில் சிறந்தரோ தொடர்பை கட்டியமைப்பதற்கேற்ற முறையில் சந்தைப்படுத்தல் மற்றும் அமுலாக்குதல்.

9. சமுதாயத்திற்கு எங்கள் அமைப்பால் பங்களிப்பும் செய் சந்தர்ப்பங்களைப் பற்றி ஆராய்ந்து அவ்வாறான சந்தர்ப்பங்களைப் பற்றிய சிபார்சுகளை முன்வைத்தலும் சமுதாயத்திற்குள் செயற்றிட்ட வட்டத்தை அமுலாக்குதலும்,

10. அமைப்பின் வலய மற்றும் தேசிய மட்டத்தி செயற்றிட்டங்களுடன் இணைந்துகொள்ளல்.



சமூகமொன்றின் பணிப்பாளர் சபையின் பொறுப்புக்கள்.

அமைப்பொன்றின் அங்கத்தவர்களால் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்படுகின்றவர்கள் பணிப்பாளர்களாவார்கள். அவர்களின் பதவிக்காலம் ஒரு வருடம் ஆகும். ஒரு அங்கத்தவர் இவ்வாறு பதவியேற்கும் போது அவருடைய தொண்டர் நிலை இல்லாமல் போகிறதாகக் கருத முடியும். தொண்டர் நிலை என்பது விரு அடிப்படையில் செய்வதாகும். ஆயினும் ஒரு பதவியை ஏற்ற பின் விருப்பமில்லையென்று செய்யாமல் இருக்கமுடியாது.

ஒரு பதவியை ஏற்கும் போது தனக்கு வழங்கப்படும் பொறுப்புக்களைப் பற்றியும் அதிகாரங்களைப் பற்றியும் பணிப்பாளர்சபை புரிந்துகொள்ள வேண்டும் ப பாளர் சபையானது ஒரு குழ என்ற வகையில் கூட்டாக இயங்கும். அதே நேரம் அங்கத்தவர்களுக்காகவும் சமுதாயத்திற்காகவும் கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டும் பணிப்பாளர் சபைக் கூட்டமொன்றில் ஒரு திமானம் பற்றி எதிர்ப்பும் தெரிவித்தாலும் பின்பு அவ்வாறு எதிர்த்தர்களும் அந்தத் தீர்மானத்தை மூலாக்குவதில் சுட்டுப் பொறுப்புக்கொண்டவர்களாகவே இருப்பார்கள்,


அமைப்பு அங்கத்தர்களின் பொறுப்புக்கள்

• பலவிதமான திட்டங்களை வகுத்து அழல்படுத்துதல். செயற்பாடுகளின் முன்னெற்றத்தை ஆராய்தல். கூட்டங்களின் போது அங்கத்தவர்களிடையே விடயங்களைத் தெரிவுபடுத்தலும் விவாதித்தலும். பற்றி அமைப்பின் முன்னேற்றம் பற்றி அங்கத்தவர்களுக்குத் தெரியப்படுத்தல்


பணிப்பாணி சபையின் பொறுப்புக்கள்.

  • பங்கு பங்குபற்றுபவர்களுக்கு உதவுதல்
  • தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு உதவுதல், கூட்டங்களில் ஆர்வமுடன் பங்குகொள்ளல், பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளல்.
  • பிரச்சினைகளைப் பற்றிக் கவனம் செலுத்தத் தூண்டுதல்.
  • செயற்றிட்டங்களை அமுலாக்குவதற்குப் அனுமதியை வழங்குதல்.
  • தேவைக்கேற்ப ஒன்றுகூடுதல்.


அங்கத்தவர்களின் பொறுப்புக்கள்

நீங்கள் ஒரு பதவியை வகிப்பவராக இருப்பின் அது அங்கத்தவர்களால், தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாகவே என்பதைத் தினமும் நினைவுபடுத்தல்.

அங்கத்தவர்களுக்குத் தேவையான பயிற்சியை வழங்குதல். அங்கத்தவர்களால் தலைமை வதிக்கவும் அனுபவங்களைப் பெறுவதற்கும் தேவையான சந்தர்ப்பங்களை வழங்குதல் அங்கத்தவர்களின் பங்குகொள்ளலை அதிகரிக்கத் தேவையான உற்சாகத்தை வழங்குதல் அமைப்பிற்குக் கிடைக்கும் நன்மைகளை உரிய முறையில் அங்கத்தவர்களிடம் சென்றடையச் செய்தல். அங்கத்தவர்களின் கருத்துக்களைப் பணிப்பாளர் சபையில் பிரதிநிதித்துவப்படுத்தல் அனைத்து அங்கத் தவர் களையும் போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து விடுதலை பெறச்செய்ய நடவடிக்கை எடுத்தல்,

தங்களுடைய குழுவின் அங்கத்தவர்களின் கீழ் வரும் விபரங்களை அறிக கொண்டிருத்தல் முக்கியமானது.

1. பெயர் (செல்லப் பெயர்)
2. வீட்டு முகவரி
3. குடும்பத்தின் விபரங்கள்
4. மனைவி மற்றும் பிள்ளைகளின் பெயர்கள்
5. பிறந்த திகதி
6. சமயம்
7. தொழிலும், அதன் முகவரியும்
8. பொழுது போக்கு
9. விருப்பமானது/ விருப்பமற்றது.
10. திறமைகளும் பலவீனங்களும்
11. நெருங்கிய நண்பர்கள் குழுவுக்குள்
12. அவருடைய இலக்குகள்
13. அவர் குழுவுடன் இணைந்தமைக்கான காரணம்
14. அவர் குழுவுடன் இணைந்ததில் உள்ள எதிர்பார்ப்புகள் அவரால் குழுவுக்காகச் செய்யக் கூடியவை
15. அவரிடம் உள்ள சிறப்பான நிபுணத்துவங்களும் திறமைகளும்


ஒரு தீர்மானத்தை எடுக்கும் போது பின்பற்றக்கூடிய வழிமுறைகள்

1. நோக்கத்தைப் பற்றி உறுதியான புரிதலைப் பெறுதல்.

தன்னுடைய குழுவின் நோக்கங்கள் இலட்சியங்கள் மற்றும் பணி பற்றிய தெளிவான புரிதல் இல்லாத பட்சத்தில் தீர்மானங்கள் எடுப்பது என்பது பெதம்பித நதையை அடையும். எனவே நோக்கங்கள் பற்றியும் இலட்சியங்களைப் பற்றியும் ஒரு தெளிவான திடமான நிலைமை ஏற்படுத்திக் கொள்ளல் அவசியமாகும். நாங்கள் தற்போது இருக்கின்ற இடம் எது, நாங்கள் செல்ல வேண்டிய இடம் எது. என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளத் திட்டங்களை வகுக்கும் போது கவமை செலுத்தத்தக்கது.


2. ஒரு தீர்மானத்தைச் சார்ந்த பிரச்சினையைச் சரியாக அடையாளங்காண்பதால் சரியானதொரு தீர்வைத் தெரிவு செய்து கொள்ள முடியும்.

ஆயினும் பெரும்பாலும் மேலோட்டமாகத் தெரிவது போல் உண்மையான பிரச்சினையல்ல. பிரச்சினை காரணமாகத் தோன்றிய பலவகையான பண்புகளாகும். எனவே தோன்றியுள்ள நோய், பண்புகளில் இருந்து உண்மையான பிரச்சினையைப் புரிந்து கொள்ளல் வேண்டும். ஏன் இவ்வாறு நிகழ்ந்தது என்ற கேள்வி நிலவும் நிலமையில் இருந்து பின்நோக்கிக் கேட்கும் போது பெரும்பாலும் உண்மையான பிரச்சினையைக் கண்டுகொள்ள முடியும். இவ்வாறு உண்மையான பிரச்சினையுடன் தான் செயற்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதை உறுதியாக்கிக் கொண்ட பின்பு அந்தப் பிரச்சினை தோன்றுவதற்கான காரணத்தைப் பற்றியும் ஆராய்வது முக்கியமானது. 


3. பிரச்சினையைப் புரிந்து கொள்ளல்.

பிரச்சினையைப் புரிந்து கொள்வதற்குப் பிரச்சினை மீது செல்வாக்குச் செலுத்தும் பலவகையான காரணிகளைத் தேடிக்கொள்ளல் வேண்டும் அந்தக் காரணிகளைப் பட்டியலிடுதல் சிறந்தது பின்பு அந்தக் காரணிகளை நன்றாகப் பகுப்பாய்வுக்கும் விமர்சனத்திற்கும் உட்படுத்தி பிரதான காரணிகளை தொடர்புடைய அடையாளங் கண்டு பிரச்சினையுடன் ஒட்டுமொத்தக் காட்சியை அல்லது புரிந்துகொள்ளல் வேண்டும். அதற்காக இயலுமானளவு தகவல்களை படத்தை திரட்டிக் கொள்ளல் முக்கியமானது. இந்தத் தகவல்களைத் தேடி கொள்ளவும் அவற்றினை விசாரணை செய்யவும் காலத்திற்குப் பிரச்சினையின் இயல்பும் மாற்றமடையலாம்.


4. தீர்வுக்கான வழிகளைத் தேடுதல்.

பிரச்சனைக்குப் பல தீர்வுகள் இருக்கலாம். தீர்மானங்கள் எடுப்பது என்பது மிகவும் பொருத்தமான செயற்பாட்டைத் தெரிவு செய்தலாகும். ஒரு எனவே தலைவரால் குழுவின் உதவியுடன் பிரச்சினையுடன் சார்ந்த மாற்று வழிகளைப் பற்றி இயலுமான அளவில் தேடுதலில் ஈடுபட வேண்டும். நபர்களின் அறிவும் புரிதலும் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருக்கும் காரணத்தால் சில நேரம் பலவகையான தீர்வு வழிகள் தெரியாமல் போகலாம். ஆயினும் தீர்வு வழிகள் அதிகளவில் இருக்கும் போது மிகவும் சிறந்தொரு தீர்வைத் தெரிவு செய்துகொள்ள முடியும் என்ற காரணத்தால் பலவகைக் கோணங்களில் யோசித்து இயலுமான அளவில் பொருத்தமானதாகும். தீர்வு வழிகளைக் குறிப்பெடுத்தல்


5. தீர்வு வழிகளின் விளைவுகளைப் பற்றி ஆராய்தல்.

இதன் போது முன்வைக்கப்பட்ட தீர்வு வழிகளின் நன்மையான மற்றும் தீமையான விளைவுகளைப் பற்றி அளவெடுக்க முடியும். இதன் போது வருங்காலத்தில் ஏற்படக்கூடிய சமூக அரசியல், கலாச்சார, மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் மாற்றங்களைப் பற்றியும் கவனத்தைச் செலுத்தி பாரபட்சமற்ற தீர்மானங்களை அடைவது சிறந்தது.


6. மாற்று வழிகளில் இருந்து ஒன்றினைத் தெரிவு செய்தல்.

ஏனைய எல்லா மாற்று வழிகளையும் நிராகரித்து விட்டு ஒன்றினை மட்டும் தெரிவு செய்தல் தீர்மானம் எடுத்தல் என்று குறிப்பிடலாம். அவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி பின்பு ஒரு உறுதியான வழிமுறையின் வேண்டும். படி வேலைகளைத் திட்டமிட்டுச் செயற்படுதல்


கூட்டத்தின் போது அங்கத்தவர்களின் கடமைகள்

1. உரிய நேரத்திற்கு கூட்டத்திற்கு சமூகமளித்தல்.
2. பேசுவதற்கு முன்பு தலைமைத்துவத்திலிருந்து அனுமதியைப் பெறல்
 3. தனிப்பட்ட காரணங்கள் இல்லாமல் விவாதத்தில் பங்கு கொள்ளல். 
4. சந்தேகத்துக்குரிய இடங்களை விசாரித்துத் தெளிவுபடுத்திக் கொள்ளல்
. 5. குறிப்பிட வேண்டிய ஒரு விடயம் இருப்பின் மட்டுமே விவாதத்தில் பங்கு கொள்ளல்.
6. இயலுமான அளவு சுருக்கமாக விடயம் சார்ந்ததாகப் பேசுதல்.
7.கூட்டத்தில் வழங்கப்படும் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளல்.
8. விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மௌனமாக இருந்துவிட்டுக் கூட்டத்திற்குப் பின்பு வெளியில் விமர்சிப்பதைத் தவிர்த்தல்.
9.சபை ஒழுங்குகள் சார்ந்த தன்னுடைய அறிவை/அனுபவத்தினைத் தவறான விதத்தில் பயன்படுத்திக் கொண்டு கூட்டத்திற்கு இடையூறுகள் விளைவித்தலைத் தவிர்த்தல்,


கூட்டத்திற்குப் பின்பு

1. எல்லா அங்கத்தவருடனும் சற்று நேரமாவது நட்பாக உரையாடல் வேண்டும்.
2. கூட்டத்திற்காக உதவி செய்தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்தல்..
3. கூட்டத்தை நடாத்தி இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் அறிக்கையைத் தயாரித்தல்.
4. கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு குழுக் கூட்டங்களை நடாத்துதல்.
5. புதிய அங்கத்தவர்களைப் பணிகளுக்கு அமர்த்தல்.


சபை ஒழுங்குகள்

1. ஒரு சபையில் ஒரு நேரத்தில் ஒரு பிரதான விடயத்தைப் பற்றி மட்டுமே கலந்துரையாட முடியும்.

2. ஒரு விடயத்தைப் பற்றிச் சுதந்திரமாக விவாதத்தில் ஈடுபடக் கூடிய உரிமை எல்லா அங்கத்தவருக்கும் உண்டு.

3. பெரும்பான்மையினரின் விருப்பத்தின் படி தீர்மானங்கள் எடுக்கும் அதே நேரம் சிறுபான்மையினருக்கும் தங்களுடைய தீர்மானங்களை முன்வைக்க உரிமை உண்டு.

4. எல்லா அங்கத்தவரும் சமவுரிமை கொண்டவராகவே உள்ளனர்.

5.தன்னுடைய அமைப்பின் வளர்ச்சிக்காகவும் நலனுக்காகவும் எல்லா அங்கத்தவருடனும் செயற்பட வேண்டும்.

6. ஒரு பிரேரணையைப் பற்றி பேசுவதை முழுமையாக நிறுத்துவதற்கு அதாவது வாக்கெடுப்பு அவசியமாகும்.


பிரேரணைகள்

1.சகல விடயங்களையும் சபைக்கு முன்வைக்க வேண்டும்
2. எல்லா பிரேரணையும் தெளிவாக இருக்க வேண்டும்.
3. பிரேரணைகளுக்கு வழிமொழிதல் அவசியமாகும்.
4.உரிய முறையில் ஒரு பிரேரணையை முன்வைத்துள்ள போது தலைமைத்துவத்தால் அதனைத் தெளிவாகச் சபைக்கு முன் வைக்க வேண்டும்.
5. அடுத்ததாக பிரேரணை மீதான விவாதம் நடைபெறும்.
6. தலைமைத்துவத்தால் மீண்டும் ஒரு முறை தெளிவாகப் பிரேரணை சபைக்கு முன்வைக்கப்படுகிறது.
7. அடுத்ததாக வாக்கெடுப்பு இடம்பெறும். இறுதியில் தலைமைத்துவத்தால் வாக்கெடுப்பின் பெறுபேறுகள் அறிவிக்கப்படுகிறது.


கூட்டங்களின் போது முன்வைக்கப்படும் ஏனைய சில பிரேரணைகள்

1. அடுத்த கூட்டத்திற்காகத் திகதியை முடிவுசெய்தல்.
2. ஒரு கூட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருதல்.
3. ஒரு கூட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தல்
4. ஒரு ஒழுங்கை தற்காலிகமாக இடைநிறுத்தல்
5. ஒரு பிரேரணை பற்றி கவனம் செலுத்துவதை எதிர்த்தால்
6. தலைமைத்துவத்தின் தீர்மானத்திற்கு எதிராக முறையீடு செய்தல்,
7. ஒத்திவைத்த ஒரு விடயத்தை மீண்டும் சபையில் கலந்துரையாடல்


The structure and functioning of the management committees in tamil


திட்டமிடுதலின் முக்கியத்துவம்.

வளங்களிலிருந்து ஆகக் கூடியளவிலான பயனைப் பெறக்கூடியமை. செயற்பாடுகளை நிறைவேற்றிக்கொள்வதில் மேற்கொள்ளவேண்டிய செயற்பாட்டினையும், கட்டங்களையும் பற்றித் தெளிவு ஏற்படுத்தும் சந்தர்ப்பம் கிடைக்கின்றமை.

 ஒவ்வொரு பற்றியும், கூடியதாக பொறுப்புக்களைப் பற்றியும் புரிந்து கொள்ளக் நபரினதும் செயற்பாடுகளைப் உள்ளமை. நேரத்தில் இருந்தும், உழைப்பில் இருந்தும் ஆகக் கூடிய பயனைப் பெறக்கூடியதாக உள்ளமை. இறுதி விளைவுகளின் பயனுள்ள தன்மையைப் பற்றி முடிவு எடுப்பதிலுள்ள இலகுவான தன்மை. 7.செயற்படுதல், மேற்பார்வை மற்றும் முன்னேற்றம் என்பனவற்றினை நிர்வகித்தல். கடினமான நிலைமைகளைப் பற்றி ஏற்கனவே அறிந்து கொண்டு அவற்றிற்காக முகங்கொடுக்கக்கூடிய சூழலை உருவாக்கல்.


அமைப்பின் ஒட்டுமொத்தச் செயற்பாட்டினைத் திட்டமிடும்போது

எங்கள் பார்வையில் பார்க்கப்படுவது எப்படி? நன்றாகப் புரிந்து கொள்ளல். இதனை தெளிவுபடுத்திக் கொள்வதற்கு "நாங்கள் செல்ல வேண்டிய திசை எது?" என்ற கேள்வியை எழுப்பலாம். இது ஒரு அகன்ற பார்வையொன்றைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

1. அமைப்பின் இலட்சியத்தை (Vision / Mission) அதாவது பணியை புரிந்துகொள்ளல். இதனைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு "ஏன் இந்த இடத்தில்/நாம் எங்கே நிற்கின்றோம்? என்ற கேள்வியை எழுப்பலாம். ஒரு அமைப்பின் இலட்சியத்தை ஒரு சிறிய வாக்கியத்தால் குறிப்பிடுவது நடைமுறை முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது.

பின்பு அமைப்பின் தற்போதைய நிலைமை பற்றிய ஒரு மதிப்பீட்டினை கீழ்வரும் முறையில் மேற்கொள்ளலாம். (SWOT Analysis)

  • அமைப்பின் பலம் மற்றும் சக்திகள் எவை?
  • அமைப்பின் பலவீனங்கள் எவை?
  • ஒரு அமைப்பின் வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்களும் வாய்ப்புக்களும் எவை?
  • அமைப்பின்மீதான அச்சுறுத்தல்களும் தடைகளும் எவை?

தற்போதைய காலத்திலும் வருங்காலத்திலும் ஏற்படக்கூடிய அரசியல், பொருளாதார மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் மாற்றங்கள் அமைப்பு மீது எவ்வாறு பாதிக்கும்

2. இவ்வாறு அமைப்பின் தற்போதைய நிலைமையை விபரித்த பின்பு அமைப்பின் இவ்வருடத்திற்கான நோக்கங்களையும் இலக்குகளையும் தீர்மானிக்க வேண்டும்.?

3. நோக்கங்களைச் சுருக்கமானதாகவும், அடையக்கூடியதாகவும் அளவிடக்கூடியதாகவும் விபரிக்க வேண்டும். நோக்கங்களையும் இலக்குகளையும் முடிவு செய்த பின்பு அந்த நோக்கங்களையும் இலக்குகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கு வருடாந்த வேலை திட்டமொன்றினையும் அந்த வேலைத்திட்டதின் செயற்றிட்டங்களையும் தனித்தனியாகத் திட்டமிடல் வேண்டும்.

ஒரு அமைப்பால் ஒரு வருட காலத்திற்குள் மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்பார்க்கும் நிகழ்ச்சிகளை/வேலைத்திட்டங்களை மிகவும் முறையாக திட்டமிடல் என்பது அந்த அமைப்பின் எதிர்கால அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான முதலாவது கட்டமாக அமையும். அவ்வாறு வருடாந்த வேலைத்திட்டத்தை ஏற்கனவே திட்டமிடல் என்பது அங்கத்தவர்களுக்கு தங்களுடைய வசதிகளுக்கு ஏற்பவும் விருப்பத்தின் படியும் பங்கு கொள்ளக் கூடிய செயற்றிட்டங்களைத் தெரிவு செய்து கொள்ளவும் வசதியாக அமையும் என்பதுடன் அதன் வழியால் வருடத்தின் முழுவதுமாக பரம்பலடைந்த ஒரு வேலைத்திட்டத்தை அமுல்படுத்தக் கூடியதாக இருக்கும். இவ்வாறு ஒரு வருட வேலைத்திட்டத்தைத் தயாரித்தல் என்பது பல கட்டங்களைக் கொண்டதாக இருக்கும்.


1. எங்கள் அமைப்பின் நோக்கங்களையும் குறிக்கோள்களையும். அங்கத்தவர்களின் விருப்பங்களையும் தேவைகளையும், சமுதாயத்தின் தேவைகளையும் பற்றி ஆராய்தல்.

2. அந்தத் தகவல்களின் படி அனைவரினதும் பங்களிப்புடன் வருடாந்த வேலைத்திட்டத்தைத் தயாரித்தலும் அனுமதியைப் பெறுவதும்.

3. வேலைத்திட்டத்தின் செயற்படுத்துவதற்காக அங்கத்தவர்களையும் ஒவ்வொரு செயற்றிட்டத்தையும் செயற்றிட்டத் தலைவர்களையும். செயற்றிட்டங்களை நியமித்து அமுலாக்குதல் தொடர்பான காலத்தினைத் திகதிகளுடன் தயாரித்தல்.


ஒரு 3 மாத காலத்திற்குள் செயல்படுத்த வேண்டியதாக உள்ள எங்கள் அமைப்பின் தேவைகள்.

1. புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளல்
2. புதிய உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்தல்.
3. உத்தியோகத்தர்களுக்கும் அங்கத்தவர்களுக்கும் பயிற்சியை வழங்குதல்.
4. முறையாகத் திட்டமிட்டு நடாத்தப்படும் பொதுச் கூட்டங்கள்.
5. வருமானத்தினைச் சம்பாதிக்கும் செயற்றிட்டங்கள்.
6. சமூக சேவை மற்றும் அபிவிருத்தித் செயற்றிட்டங்கள்.
7. சிறந்த மக்கள் உறவை ஏற்படுத்தும் செயற்றிட்டங்கள்.
8. அங்கத்தவர்களின் திறமைகளை வளர்ச்சியடையச் செயற்றிட்டங்கள்.
9. கல்வி மற்றும் ஏனைய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள். 10.வேறு அதிகார சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தல்.


அமைப்பொன்றின் செயற்றிட்டங்களைத் திட்டமிடல்.

செயற்றிட்டம் என்பது இலகுவான மொழியில் கூறுவதாக இருப்பின் அது ஒரு வேலையைக் குறிக்கிறது. அது ஒரு சிரமதானம் கருத்தரங்கு, கண்காட்சி, விழா, வள நிலையத்தினை சீரமைத்தல், நீர் வசதிகளை ஏற்பாடு செய்தல் என்பதாக இருக்கலாம். செயற்றிட்டங்கள் இயல்பிலும் அளவிலும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருந்தாலும் அவற்றை அமுல்படுத்தும்போது எடுக்கவேண்டிய அடிப்படைக் கட்டங்கள் பெரும்பாலும் ஒத்தவையாகும். ஒரு செயற்றிட்டத்தை அமுல்படுத்த தெரிவு செய்துகொள்வதற்கு முன்பு கீழ்வரும் விடயங்களைப் பற்றிக் கவனம் செலுத்த வேண்டும். செயற்றிட்டத்திற்கான தெளிவான தேவையொன்று உள்ளதா?

செயற்றிட்டமானது அமைப்பின் நோக்கங்களுக்கும் அங்கத்தவர்களின் விருப்பங்களுடனும் பொருந்துவதாக உள்ளதா? உள்ள தேவைகளை இந்த செயற்றிட்டத்தால் பூர்த்தி முடியுமா? செயற்றிட்டம் தொடர்பான தகவல்களையும், தரவுகளையும் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளார்களா? இத்துடன் ஒத்த செயற்றிட்டமொன்றினைச் சமுதாயத்தின் வேறொரு அலகால் ஒழுங்கமைப்பு செய்து கொண்டுள்ளதா? இதற்கு முன்பு இவ்வாறான செயற்றிட்டமொன்றை அமுல்படுத்தியுள்ளதா? அதன் வெற்றி அல்லது தோல்விகள் செயற்றிட்டத்தை அமுல்படுத்துவதற்கு போதியளவு மனித வளம் இருக்கின்றதா? செயற்றிட்டத்திற்காக வெளிப்புற அனுசரணையாளர்கள் தேவையாக உள்ளதா? அவர்களை எவ்வாறு தேடிக் கொள்ளலாம்? செயற்றிட்டத்திற்காக விசேட தொழில்சார்ந்த அறிவு தேவையாக உள்ளதா? அதனை எவ்வாறு பெறுவது? செயற்றிட்டத்திற்காக எவ்வளவு பணம் தேவையாக உள்ளது? அது படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் எவ்வாறு பெறுவது? சோர்வடையாத செயற்றிட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியுமா?

உரிய தேவையைப் பூர்த்தி செய்வதற்கு இதனையும் விட சிறந்ததொரு செயற்றிட்டமொன்றினைத் தெரிவு செய்ய முடிகிறதா? மேலே குறிப்பிட்ட தகவல்களைத் திரட்டிப் பகுப்பாய்வு செய்த பின்பு செயற்றிட்ட பிரேரணையொன்று அதாவது எழுத்து வடிவத்திலான திட்டமொன்றினை தயாரித்தல் வேண்டும்.


ஒரு செயற்றிட்டத்தில் உள்ளடக்க வேண்டிய அம்சங்கள் கீழ்வருமாறு.

1. செயற்றிட்டத்தின் குறிக்கோள் : செயற்றிட்டத்தால் எதிர்பார்க்கப்படும் இறுதிப் பலனை செயற்றிட்டத்தின் குறிக்கோள் என்று கூற முடியும். அதனைத் தெளிவாகவும் எளிமையான மொழியிலும் சுருக்கமாகவும் குறிப்பிட வேண்டும். ஒரு செயற்றிட்டத்தின் குறிக்கோளினைக் குறிப்பிடும் போது உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். கீழ்வரும் அம்சங்களை இருத்தல். அது நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய யதார்த்தமான ஒன்றாக உறுதியானதும் நிலையானதுமாக இருத்தல்.

2. செயற்பாட்டுத் திட்டம் : குறிக்கோளை எழுதிக் காட்டிய பின்பு அதனுடன் சார்ந்த தற்போதைய நிலைமையை விபரித்து இருக்க வேண்டிய நிலைமை நோக்கிச் செல்ல எடுக்க வேண்டிய நடவடிக்கைகளின் சட்டங்களைக் குறிப்பிடல் வேண்டும்.

3.நேர அட்டவணை : அந்தந்த செயற்பாட்டினை மேற்கொள்ள வேண்டிய திகதியை முடிவு செய்து அது தொடர்பாக ஒரு உறுதிப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

4. செயற்றிட்டத்தின் அமைப்புக் குறிப்பு : செயற்திட்டத்தின் செயற்பாடுளுடன் பொறுப்பாக உள்ளவர்கள் யார் என்பதைப் பற்றித் தீர்மானித்து அந்தப் பொறுப்புக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுடன் பொறுப்புக்களைப் பகிர்ந்தளிக்கப்படும் முறையை ஒரு அட்டவணையில் குறிப்பிடலாம். அல்லது மேலுள்ள இலக்கம் 2,3 மற்றும் 4 என்பதைப் போல குறிப்பிடலாம்.

5.வரவு செலவு : செயற்றிட்டத்தின் செயற்பாடுகளுடன் தேவையான பொருட்களுக்கான செலவுகளின் விபரத்தையும் குறிப்பிடுதல் அவசியம் அதற்கான பணத்தை பெறுவதற்காக எதிர்பார்க்கப்படும் வழிகளையும் குறித்து உத்தேச வரவு செலவுத் திட்டமொன்றினைத் தயாரிக்க வேண்டும்.


மேலே குறிப்பிட்ட விடயங்களையும் உள்ளடக்கியதாகக் கீழ்வரும் தலைப்புக்களின் படி செயற்றிட்ட முன்மொழிவுப் பத்திரமொன்றினைத் தயாரிக்க முடியும்,

1. அமைப்பும் அதன் செயற்பாடு தொடர்பான ஒரு விபரிப்பு.
2. செயற்றிட்டத்தின் பெயர்.
3. செயற்றிட்டத்தின் குறிக்கோள். (Objective)
4. செயற்றிட்டத்தின் தேவையும் எதிர்பார்க்கப்படும் பலன்களும்.
5. செயற்றிட்டத்தை வழிமுறைகள் அமுலாக்கும்
6. தேவைப்படும் சிறப்பான பொருட்கள்
7. பிரச்சாரம் மற்றும் வளர்ச்சி செயற்பாடுகள்.
8. அமைப்பு சார்ந்த வளங்கள். 
9. வரவு செலவு விபரங்கள்.
10. செயற்றிட்ட அமைப்புக் குவிபரிப்பு
11. செயற்றிட்டத்தின் கால அட்டவணை 12. மேற்பார்வையும் மதிப்பீடு முறைமை
13. முன்னேற்றத்தை அறிக்கையிடும் முறை. (Reporting)


செயற்றிட்டத்தை செயல்படுத்தும் போது கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள்.

1. சரியானதைச் செய்வதையும் சரியாகச் செய்யவும்.

2. வேகம், சரியான தன்மை மற்றும் வளங்களைப் பயன்படுத்தல் என்பவற்றை உரிய முறையில் மேற்கொண்டு செயற்றிறனை உயர்மட்டத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

3. இலக்குகளைப் பயன்படுத்திக் குழுவிற்கு ஒரு துண்டுதலை ஏற்படுத்த வேண்டும்.

4. அடிக்கடி முன்னேற்றத்தை ஆராய்ந்து உரிய கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

5. முன்னேற்றத்தை அறிவித்தல் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் என்பனவற்றினூடாக ஒரு சிறந்த தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.


மதிப்பிடுதல் (Evaluation)

ஒரு செயற்றிட்டம் அமுல்படுத்தலில் இருக்கும் போது அதன் இறுதியில் மதிப்பிடுதல் அவசியம். அந்த மதிப்பிடுதலை கீழ்வருமாறு மேற்கொள்ள முடியும்.

1. செயற்றிட்டத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள இலக்குகள் எவை?

2. செயற்றிட்டத்தை அமுல்படுத்தும் போது ஏற்பட்ட பிரச்சினைகள் எவை?

3. இறுதி இலக்கை அடையக் கூடியதாக இருந்ததா?

4. செயற்றிட்டத்தில் வெற்றிகரமாக நடந்தவை காரணம்? எவை? அதற்கு

5. செயற்றிட்டத்தில் தோல்வியடைந்தவை எவை? அதற்குக் காரணம்?

6. செயற்றிட்டத்தின் இறுதிப் பலாபலன் எது?

7. செயற்றிட்டத்தில் வளங்களைப் பயன்படுத்திக் கொண்ட முறை?

8. செயற்றிட்டத்தின் இறுதிப்பலாபலன் அமைப்பு மீது அங்கத்தவர்கள் மீது மற்றும் சமுதாயத்தின் மீது எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது? இவ்வாறான கேள்விகளின் கலந்துரையாடும் போது செயற்றிட்டத்தைப் பற்றிக் ஒவ்வொரு அங்கத்தவருக்கும் தன்னுடைய பலவீனங்கள், திறமைகள், இதுவரை யோசிக்காத செயற்றிடங்கள் மற்றும் வருங்கால செயற்றிட்டங்களின் விடயங்கள் என்பனவற்றினைக் போது கவனம் செலுத்தவேண்டிய கலந்துரையாடுவது என்பது வைத்தல் விருப்பமற்றதாக அமையலாம். ஆயினும் இது ஒரு படிப்பினைக்கான (Learning) செயற்பாடாகும் என்பதை குழுவிடம் உணர முக்கியமானது. இவ்வாறான மதிப்பீடுகள் தொடர்பான கலந்துரையாடலின் போது விமர்சனத்திற்கு/பாதிப்புக்குட்பட்ட அங்கத்தவர்களுக்குக் கலந்துரையாடலின் பின்பு மீண்டும் புகழ்த்தி/உற்சாகப்படுத்தி அவர்களை தைரியப்படுத்தல் என்பது தலைவரின் கடமையாகும்.



Post a Comment

Previous Post Next Post