Sex ( பால் ) : இயற்கையில் அமைய பெற்ற "விசேடமாக" ஆண், பெண் மற்றும் (இடைநிலை பால்) சார்ந்த உயிரியல் ரீதியிலான வேறுபாடுகள்

Gender ( பாலினம் ) : உயிரியல் ரீதியான பால் வித்தியாசங்களுக்கு மாறாக சமூக ரீதியாக கட்டமைக்கப்பட்ட பெண்களுக்கும் ஆண்களுக்கும்  இடைநிலை பால் இடையிலான வித்தியாசங்கள் அல்லது அவர்களுக்கு சமூகத்தில் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் வரப்பிரசாதங்கள் உரிமைகள் பால் நிலை எனப்படும்.



பாலின பொதுமைப்படுத்தல் என்றால் என்ன?

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்க வேண்டியது எனக் கருதப்படும் பண்புகள், குணாதிசயங்களை அல்லது ஆண்களாலும் பெண்களாலும் ஆற்றப்பட வேண்டியது எனக் கருதப்படும் சில கருமங்களை பொதுமைப்படுத்தல் அல்லது முற்கற்பிதம் செய்தல் பால்நிலைப் பொதுமைப்படுத்தல் ஆகும்.

இவ்பாறான பொறுப்படுத்தல்கள் ஆண்களும் பெண்களும் தமது தனிப்பட்ட ஆற்றல்களை விருந்தி செய்வதையும் தமது தொழில் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதையும் தமது வாழ்க்கைத் திட்டங்கள் பற்றிய விருப்பத் தேர்வுகளை மேற்கொள்வதையும் மட்டுப்படுத்துவதால் இவை பால்நிலைச் சமந்துவதற்குக் கேடானவை.

பாதகமான பொதுமைப்படுதலோ சாதகமான பொதுமைப்படுத்தலோ இரண்டுமே அபத்தானவை. உதாரணமாக பிள்ளை வளர்ப்பதில் பெண்களே வல்லவர்கள் எனும் பொதுமைப்படுத்தல்கள் அவர்கள் மேல் பிள்ளை வளக்கும் பொறுப்புகளை மேலும் மேலும் சுமத்துகிறது. பொதுமைப்படுத்தல்கள் மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களை மீறும் போது அவை தவறானவையாகின்றன.


பாலின பொதுமைப்படுத்தல்கள் ஆண்களை எவ்வாறு மட்டுப்படுத்துகின்றன?

குடும்பத்துக்காக உழைக்கும் தனியொரு நபராக மன உளைச்சல் மற்றும் அழுத்தத்துக்கும் உள்ளாக்குவர். குறிப்பாக அந்த நபர் ஏழையாகவும் வேலை தேட முடியாதவராக இருக்கும் பொருட்டு இது மேலும் மன உளைச்சலை தருகிறது. மள உளைச்சல் உடல் நோய்களுக்கும் ஆபத்தான நடத்தைகளும் இட்டு செல்லும். உணர்வுகளை வெளிக்காட்டுவதட்கு ஆண்களும் கற்றுக்கொடுக்காமையினால் உணர்வுகளை வெளிக்காட்டுவதை ஏற்றுக் கொள்ளாமையினால் அவர்களுக்கு தமது தமது உணர்வுகளை வெளிக்காட்டுவதட்கான வழி கிடைப்பதில்லை. அவர்கள் துன்பப்படும் போது தம்மை வலிமையானவர்களாக காட்டிக்கொள்ள வேண்டி உள்ளது. உதாரணமாக தன்று மனைவியின் அல்லது குடும்ப உறுப்பினின் ஆண்கள் தமது சமூகத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இருக்க வேண்டும் என் நினைப்பதால் தாம் வன்முறையாக நடந்து கொள்ளவிரும்பாத தருணங்களிலும் அவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் போல உணரக்கூடும் பால்நிலைப் பொதுமைப்படுத்தல் ஆண் ஒருவரின் குடும்பவகிபாகங்களை மட்டுப்படுத்தக்கூடும் அல்லது அவர் அனுபலிப்பதைத் தடுக்கும். குடும்ப தலைவர் என்ற வகிபாகம் சிலவேளைகளில் ஆண்கவன்முறையாளர்களாக அல்லது உணர்வு உணர்வுகளை வெளிக்காட்டாதவர்களாக மாற்றுகிறது.


பாலின் பொதுமைப்படுத்தல்கள் பெண்களை எவ்வாறு பாதிக்கின்றது?

பெண்களுக்கள் கீழ்ப்படிவானவர்களாக நடக்கக் கற்பிக்கப்படுவதால் அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் எண்ணற்ற இன்னல்களை ஏற்படுத்துகின்றன. வன்முறையால் பாதிக்கப்பட்டவராக இருத்தல் எங்கு, எப்படி, எப்பொழுது உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தொடாபில் பேசமுடியாது இருத்தல், உவிருப்பாற்ற உடலுறவு முயற்சிகளை / உடலுறவை 'வேண்டாம்' என்று கூறுவதற்கு இயலாது இருத்தல் உடலுறவுக்கு இணங்கவைக்கப்படுதல் முடிவெடுக்கும் செயற்பாடுகளில் பங்குபற்றாது இருத்தல் மற்றும் தமது மனதிலுள்ளவற்றைக் கூறாது தவிர்த்தல் வலிதரும், அவமானத்தை ஏற்படுத்தும் அல்லது அநீதியானவை எனக் கருதும். செயற்பாடுகளையும் தனது 'கடமை என்ற காரணத்தால் செய்தல் பெண்களைக் கல்வியறிவு பெற்றுக்கொள்ளாது தடுக்க முடியும் தொழில் தேடாதே என் அழுத்தம் தரமுடியும். அவ்வாறு தொழில் ஒன்றைப் பெற்றுக்கொண்டாலும் தொழிலை விடுத்துக்குடும்பத்தில் கவனம் செலுத்துமாறு கூறப்படுகிறது. தன்னை விடப்பிறருக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கற்பிக்கப்படுவதால் அவர்களால் தமது ஆளுமைகளைப் பயன்படுத்த முடிவதில்லை. அனைத்து வீட்டுவேலைகளும்பிள்ளைவளர்ப்பும் பெண்கள்மீதுசுமத்தப்படுவதால்,அவர்களின்வேலைநாட்கள்நீண்டவையாகவும் கடினமானவையாகவும் காணப்படுகின்றன. திருமணம் செய்யாத, பிள்ளைகளைப் பெறாத பெண்கள் வாழ்க்கையில் தோற்றவர்களாகப் பார்க்கப்படுகின்றனர்.


பாலின சமத்துவமும் ஒப்புரவும்

பாலின சமத்துவம் என்பது பாலினத்தைப் பொருட்படுத்தாமல் சிறுமி சிறுவன், பெண். ஆண் மற்றும் பல்வேறுபட்ட பால் நிலையினர் அனைவருக்கும் சமவாய்ப்புகள், உரிமைகள் மற்றும் என் பொறுப்புகளை வழங்குதலாகும். அதாவது அனைத்து பால்நிலையினரும் தங்களது தனிப்பட்ட திறனை உணரவும். தங்கள் நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கவும், சமூக பங்கேற்பின் மூலம் சமமாகப் பயனடையவும் சமவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். அனைத்துப் பால் நிலையும் ஒரே மாதிரியானவை என்பது இதன் பொருளல்ல. வாய்ப்புகளையும் வாழ்க்கை மாற்றங்களையும் அடையும் வழிபாலினத்தைப் பொறுத்ததோ அல்லது அதனால் கட்டுப்படுத்தக்கூடியதோ அல்ல என்பதாகும்.

பாலின சமத்துவம் என்பது அபிவிருத்திக்கான குறிக்கோளாகும் என்பதோடு மனித உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு முக்கியமானதாகும் பெண்கள். ஆண்கள் மற்றும் பல்வேறுபட்ட பால் நிலையினருக்கு சமமான வாய்ப்புகள், வளங்கள் மற்றும் வாழ்வதற்கான வாய்ப்புகளை வழங்காமல் எந்தவொரு சமூகமும் வெற்றிகரமாக வளர்ச்சியடைவதில்லை. பெண்கள், ஆண்கள் மற்றும் பல்வேறுபட்டபால் நிலையினருக்கு ஒப்பீட்டளவில் சமத்துவம் பெறுவார்களாயின் பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியடையும். குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் ஊழல். குடும்ப வன்முறைகள் குறைவடையும். பெண்கள். சிறுகள் மற்றும் பல்வேறுபட்ட பால்நிலையினர் என்போரைக் குறைத்து மதிப்பிடப்பட்டுட காட்டும் சமூகத்தில் வன்முறைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பாலின ஒப்புரவு என்பது பெண்கள், பல்வேறுபட்ட பால் நிலைகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆண்கள் ஆகியோரிடத்து நியாயமாக நடந்து கொள்ளும் செயன்முறையாகும். பெண்கள், பல்வேறுபட்ட பால் நிலைகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆண்களை அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப நியாயமான முறையில் நடத்துவதை இது குறிக்கின்றது. பெண்கள், பல்வேறுபட்ட பால் நிலைகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆண்கள் ஆகியோரைச் சமமாக நடத்துவது நியாயமானதல்ல இந்நிலைமை மேலும் பாதகத்தை உருவாக்கக் கூடும் என்பது இதன் பொருளாகலாம். ஒரு சமூகம் அல்லது கலாசாரம் ஒரு பால் நிலையினர் மீது அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பால் நிலையினர் மீது திணிக்கக்கூடிய உள்ளார்ந்த தீமையைக் குறைப்பதற்கு பால் நிலை ஒப்புரவு நடவடிக்கைகள் பெரிதும் உதவுகின்றன. பாலின் ஒப்புரவு பால் நிலைச் சமத்துவத்திற்கு வழிவகுக்கிறது.


பாலின பாகுபாடு

நபர் ஒருவருக்கான வாய்ப்புகள் பாலின அடிப்படையில் மாத்திரம் மறுக்கப்படும் அல்லது தவறாக மதிப்பிடப்படும் எந்தவொரு நிலைமையும் பாலினப் பாகுபாடாகும். நடைமுறையில் சமூகத்திலும் குடும்பத்திலும் பெண்கள் பாகுபாடு, புறக்கணிப்பு மற்றும் அநீதியை எதிர்கொள்கிறார்கள்.

பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை இவ்வாறு வரையறுக்கிறது. பெண்கள், அவர்கள் திருமணமானவர்களானாலும் சரி திருமணமாகாதவர்களானாலும் சரி, ஆண்-பெண் சமத்துவத்தின் அடிப்படையிலும் அரசியல், பொருளாதாரம், சமூகம், கலாசாரம், சிவில் முதலான துறைகளில் அல்லது வேறு எந்தத் துறையிலும் உள்ள மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் அனுபவித்துவரும் அங்கீகாரம், மகிழ்ச்சி அல்லது செயற்பாடு ஆகியவற்றைப் பாதிக்கும் அல்லது இல்லாது செய்யும் தாக்கத்தை அல்லது நோக்கத்தை கொண்டுள்ள பாலியல் அடிப்படையிலான எந்தவொரு வேறுபாடும், புறக்கணிப்பும் அல்லது கட்டுப்பாடும் பெண்களுக்கு எதிரான பாகுபாடாகும்"


பாலின பாகுபாட்டுக்குச் சில எடுத்துக்காட்டுகள்

உணவில் பாகுபாடு கல்வியில் பாகுபாடு நடமாட்டத்தில் பாகுபாடு (வீட்டிலிருந்து எந்நேரத்திலும் எவ்விடத்திற்கும் வெளியே செல்லுதல்

  • வீட்டு வேலைகளில் பாகுபாடு
  • தீர்மானமெடுப்பதில் பாகுபாடு
  • வேலைவாய்ப்பில் பாகுபாடு
  • அரசியலில் பாகுபாடு

பால்நிலை அடிப்படையிலான வன்முறை(GBV)

ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமூகத்தால் வழங்கப்பட்டுள்ள அடையாளத்தை அடிப்படையாக கொண்ட வன்முறையாகும். இவ்வடையாளத்தை அடிப்படையாக கொண்ட பல்வேறு வகிபாகங்கள், பொறுப்பு,மற்றும் எதிர்ப்பார்ப்புக்கள் உள்ளன. வேறு வன்முறைகளை விட சிக்கலானது. ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக தாக்கங்களை ஏற்படுத்தும். பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்தும். இயலாமை ஏற்படும். அதிகாரம் மற்றும் உரிமை தொடர்பான உணர்வு கொண்டது.

Gender Based Violence


இரண்டு பிள்ளைகளின் அம்மா. மூத்த பிள்ளை பெண் பிள்ளை 7 வயது இளையவர் ஆண் 5 வயது. அப்பா மகனுக்கு 3 வயதாக இருக்கும் போதே பிரிந்து சென்று விட்டார். குடும்பத்தை காப்பாற்ற தூரம் சென்று வேலை செய்ய முடியாத காரணத்தினால் அம்மர் அடுத்த வீட்டில் கயிறு திரிக்கும் வேலைக்கு செல்கிறாள். ஒரு நாள் மகள் தனக்கு சுகயீனம் காரணமாக பாடசாலை போக முடியாது என்று கூறுகிறாள். ஆகவே அம்மா அவளை வீட்டில் இருக்குமாறும் சமைத்த உணவை ஊன்று விட்டு வீட்டிடகுள்ளே தாழ்பாள் போட்டுக் கொண்டு இருக்குமாறும்  என்றாள். டிவி போட்டு பார்க்குமாறும் கூறினாள் மகனை வெளியில் அக்காவுக்கு பாதுகாப்பாக நாயுடன் விளையாடிக் கொண்டிருக்குமாறு கூறினாள். பின்னர் அடுத்த வீட்டிக்கு வேலைக்கு சென்றால். அந்த நேரத்தில் வீட்டிட்கு வந்து சித்தப்பா (தந்தையின் தம்பி) மகளை பாலியல் பலாத்காரம் புரிந்து விட்டு தப்பி சென்று விட்டார்.

இந்தக் கதையில் முதல் குற்றவாளி யார் ?.
• அம்மா
• அப்பா
• மகள்
• மகன்
• சித்தப்பா
• நாய்
• அடுத்த வீட்டுக் காரர்


வன்முறைச் செயற்பாடுகள்

• வாய்மொழி
• உளவியல் ரீதியில்
• உடல் ரீதியில்
• பாலியல் ரீதியில்
• பொருளாதார ரீதியில்
• இலத்திரனியல் மூலம்


வன்முறைக்குட்படும் நபருக்கு

சிறு அல்லது பாரதுரமான உடல் ரீதியிலான காயம், மரணம, குறுகிய கால, நீண்டகால தாக்கம், நிலையான அங்கவீனம், கருக்கலைதல், எதிர்பார கர்ப்பம், பாலியல் நோய்கள், பயம் மற்றும் பதற்றம், முழமையடைய முயற்சித்தல், அளவுக் கதிகமான அடக்கம், சுய அபிமானம், கௌரவம் இல்லாது போதல் நித்திரை மற்றும் உணவு உண்ணலில் பிரச்சினை, விரக்தி, தன்னை தானே காயப்படுத்திக் கொள்ளல், தற்கொலை செய்து கொள்ளல்

கூறும் வகையில் இது இவ்வளவு பாரதுாரம் என்றால் மக்கள் ஏன் குறைந்த அளவில் அறிக்கையிடுகின்றனர்?

  • குறைத்து மதிப்பிடல்
  • அகௌரவம்
  • சமூக கலாச்சார மற்றும் பொருளாதார முரன்பாடுகள்
  • போதுமான சேவைகள்
  • இது தொடர்பான உணர்வு பூர்வமின்மை




Post a Comment

Previous Post Next Post