Social mobilization in tamil


சிவில் சமூகம் என்றால் என்ன?

• சிவில் சமூகம் என்பது, அரச, சந்தை மற்றும் பொதுவான வீட்டு அலகுகளுக்கிடையே பொதுவான இடப்பரப்பாவதுடன், மக்களுக்கு வாதப் பிரதிவாதங்களை மேற்கொள்வதற்கும் செயலாற்றுவதற்குமான இயலுமை

• ஏதேனுமொரு விசேட விடயத்திற்கமைய மாற்றமொன்றை அடைவதற்காக மக்கள் இயக்கங்களை ஒருங்கிணைக்கின்ற எந்தவொரு கூட்டான தொண்டர் செயற்பாடாகும்.


சமூக அணிதிரட்டல்

• சமூக அணிதிரட்டல் என்பது, பிரச்சினைகளிலிருந்தும் அனர்த்தங்களிலிருந்தும் மீள்நிலைக்கு வருவதற்கான சமூக அபிவிருத்தியின் முதற் படிமுறையாகும்.

• குறித்த நிலைமைகளிலிருந்து மீண்டு வருவதற்காக தமது ஆக்கத்திறன்களை பயன்படுத்தி செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்காகவும், அதற்கான தொடக்க முயற்சிகளை மேற்கொள்வதற்கு இடமளித்தல்.


சமூக அணிதிரட்டலின் நோக்கம்

• சுய விழிப்புணர்வு, சுய அபிவிருத்தி மற்றும் சுய புரிதலுக்கான இயலுமையைக் கட்டியெழுப்புதல் மூலம் சமூகத்திலுள்ள வறுமைப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரித்தல்.


சமூக அணிதிரட்டலின் பிரதான கூறுகள்

● நிறுவன அபிவிருத்தி

• சமுதாய மட்டத்திலான சேமிப்புக்கள் மூலம் அபிவிருத்திக்கான மூலதனத்தைக் கட்டியெழுப்புதல்
• மனிதவள அபிவிருத்திக்கான பயிற்சி
• சமூக பொருளாதார அபிவிருத்தி


சமூக அணிதிரட்டலுக்கான செயலாற்றுகைக் கருவிகள் என்ன?

• மக்களுடைய வாழ்க்கைச் சூழலில் (பௌதீக மற்றும் பௌதீமற்ற) மாற்றங்களைக் கொண்டு வரல்

• நடத்தை மாற்றம்

• இயலளவு விருத்தி

• தனிநபர் அல்லது சமுதாயம்ஃசமூக அபிவிருத்தியில் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகின்ற நம்பிக்கை முறைமைகளில் இயல்நிலை மாற்றம்.


பங்கேற்பு என்றால் என்ன?

• பொதுவாக (மற்றர்கள் அல்லது ஒவ்வொருவருடன்) பங்காளர்களாகவும், பங்குடமையாகவும், ஒத்துழைப்புடனும் கூட்டாக இலாபத்தைப் பகிர்ந்து கொள்ளல்

• சமூகத்தில் அல்லது அமைப்பொன்றின் அங்கத்தவர்கள் தமது வாழ்விலும் வேலைகளிலும் தாக்கம் செலுத்துகின்ற தலையிடல் தீர்மானங்களில் முனைப்பாகத்

• அபிவிருத்தி கொள்கைகள் மற்றும் மூலோபாயங்களைத் தயாரிக்கும் போதும், அபிவிருத்தி செயற்பாடுகள் பகுப்பாய்வு, திட்டமிடல், நடைமுறைப்படுத்தல், கண்காணிப்பு மற்றும் மதிப்பீடுகளுக்காக அனைத்துப் பங்கீடுபாட்டாளர்களின் சமமானதும் முனைப்பானதுமான செயன்முறையாகும்.

• நிலைபெறுதகு வாழ்வாதாரத்திற்காக ஒத்துழைப்பு வழங்குகின்ற பங்கீடுபாட்டாளர்களின் அணுகல் மற்றும் வளங்கள் கட்டுப்பாடு மற்றும் குறித்த தீர்மானங்கள் எடுப்பதை அதிகரிப்பதற்கு நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களில் திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொள்ளல்


பங்கேற்பு மட்டங்கள்

• செயலற்ற பங்கேற்பு கருத்திட்ட பயனாளிகள் பொதுவாக முன்மொழிவுகளை ஏற்றுக்கொண்டு ஒத்துழைப்பு வழங்குகின்றவர்கள், ஆனாலும் கருத்திட்ட முகாமைத்துவம் பற்றி பொதுவாக கவனமாக (மற்றும் சந்தேகமாக) இருப்பவர்கள்.

• அதிகரித்த பங்கேற்பு பயனாளிகள் கருத்திட்டத்தின் மீது அதிக நம்பிக்கையை விருத்தி செய்து கொள்வதற்கும், அதன் செயற்பாடுகள் மற்றும் பணியாளர்களுடன் அதிக தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு ஆரம்பிப்பர். அவர்கள் பொறுப்புக்களை வகிப்பதற்கு ஆரம்பிப்பர்.

• முனைப்பான பங்கேற்பு பயனாளிகள் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போதும், அபிவிருத்தி செய்யும் போது முனைப்பான பங்காளர்களின் வகிபாங்கை நிறைவேற்றுவதுடன் அதிகரிக்கின்ற பொறுப்புக்களையும் ஏற்றுக் கொள்வர்.

• உரிமம்/வலுவூட்டல் பயனாளிகளால் கருத்திட்டத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட தொடக்க முயற்சிகளை பேணிக்கொண்டு செல்வதற்கும், தொடர்ந்து அபிவிருத்தி செய்வதற்கும் விருப்பத்துடனும் திறம்பவும் ஈடுபடுவர்.


பங்கேற்பு அபிவிருத்தி என்றால் என்ன?

• "பங்கேற்பு அபிவிருத்தி என்பது, பிரஜைகள் முனைப்புடன் தமது வாழ்வில் தாக்கம் செலுத்துகின்ற அனைத்து தீர்மானங்களிலும் தலையிடுகின்ற செயன்முறையாகும்" முனைப்பாகத்

• பங்கேற்பு அபிவிருத்தி என்பது. செயற்பாட்டாளர்களிடையே அடிப்படையாகக் கொண்டு பல்வேறுபட்ட உரையாடலை கட்டியெழுப்பப்பட்டுள்ள பங்குடமையாகும். உள்ளுர் கருத்துக்கள் மற்றும் உள்ளுர் அறிவு ஆழ்ந்து ஆராய்ந்து மதிப்பளிப்பதாகும். ஆதற்கமைய,மக்கள் பயனாளிகளாக மாத்திரமல்ல செயற்பாட்டாளர்களாக இருப்பர்.

• அபிவிருத்தி வல்லுநர்கள் செயலற்றவர்களாகவோ அல்லது பழமைவாதிகளாகவோ உணர்தல் Vs. அபிவிருத்தி வல்லுநர்கள் அபிவிருத்தியின் மையமாகக் கருதுதல்


பங்கேற்பு அபிவிருத்தியின் முக்கியமான விளைவுகள்

• தீர்மானமெடுக்கும் போது, கருத்திட்டங்களை திட்டமிடல், நடைமுறைப்படுத்தல் மற்றும் மதிப்பீடு செய்யும் போது தனிநபர்களை பங்கேற்புச் செய்தல்.

• மக்கள் இச்செயன்முறை மூலமாக புதிய திறன்களைப் பெற்றுக்கொள்வர். (பெருமை, அர்ப்பணிப்பு மற்றும் உரித்து)

• அபிவிருத்திச் செயன்முறையில் பங்கீடுபாட்டாளர்களின் ஆலோசனைகள் மற்றும் பங்கேற்புடன் வறுமையொழிப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களில் வினைத்திறனை அதிகரிக்கும்.


பங்கேற்பு கிராமிய மதிப்பாய்வு (Participatory Rural Appraisal)

● பல்வேறு குழுக்காளல் அறிவை வலியுறுத்துக்கின்ற பங்கேற்பு அணுகுமுறைகள் மற்றும் முறைகளைப் பயன்படுத்தி சமூகத்தில் மேற்கொள்கின்ற ஒழுங்குமுறையானதும், ஆனால் கட்டமைக்கப்பட்ட கற்றல் அனுபவங்களாகும். 


PRA பயன்பாடு

• சாத்தியவளக் கற்கை
• தேவைப் பகுப்பாய்வு
. அபிவிருத்திக்கான முன்னுரிமைகளை அடையாளங் காணல்
• கருத்திட்டம் அல்லது வேலைத்திட்டங்களை மதிப்பீடு செய்தல்
• குறிப்பிட்ட ஒரு தலைப்புப் பற்றிப் பகுப்பாய்வு செய்தல்


PRA இன் முக்கிய கோட்பாடுகள்

பங்கேற்பு பிரதேச மக்களின் பங்களிப்பு

• நெகிழ்வுத்தன்மை - நேரம் மற்றும் வளங்கள்

குழுவேலை ஒரு சிறந்த சமநிலையான குழுவானது சமூகப் பொருளாதார, கலாச்சாரம், பால்நிலை மற்றும் பரம்பரையான பன்மைத்துலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும்

• தகுந்த அறியாமை - திறந்த மனதுடன் அணுகுதல்

• முறையானது -பண்புசார் முறையில் திரட்டப்பட்ட தரவு


அபிவிருத்தி சிந்தனையின் வரலாறு

• 1950 மீள்கட்டமைப்பு/மூலதன மாற்றம்/நவீனத்துவம்
1960 - தொழிநுட்ப மாற்றம், பொருளாதாரம் தேசியமயப்படுத்தப்பட்டது
• 1970- ஒருங்கிணைந்த கிராம அபிவிருத்தி/பங்கேற்பு அபிவிருத்தி (PRA)
• 1980 - பங்கேற்பு அணுகுமுறை/சமூக வலுவூட்டல்
• 1990 - நிலைபெறுதகு அபிவிருத்தி/மனித அபிவிருத்தி
2000 மக்கள் அபிவிருத்தியை நெறிப்படுத்தல்


தொழிநுட்ப முறைகள்

  1. கிராம நடை
  2. கால வரையறை
  3. சமூக வரைபடமாக்கல்
  4. பருவகால வரைபடமாக்கல்
  5. Venn வரைபடம்
  6. Matrix தரப்படுத்தல்
  7. சோடிகளாக தரப்படுத்தல்
  8. Well being தரப்படுத்தல்


PRA இன் அம்சங்கள்

  • மனிதர்களின் அறிவுக்கு மதிப்பளித்தல் மற்றும் அவர்களிடம் கற்றுக்கொள்ளல்
  • ஏழைகளுக்கு செவிமடுத்தல்
  • ஏங்களுக்குத் தேவையற்ற தரவுகளைத் திரட்ட வேண்டாம்
  • நெகிழ்வுத்தன்மை : PRA நிலையான திட்டத்துடன் இருப்பதில்லை
  • பார்க்கத்தக்க : மக்களிடம் சேகரித்த அனைத்து தரவுகளும் அவர்கள் பார்க்கக் கூடியதாயிருத்தல்
  • முப்பரிமாணம் -Triangulation
  • • அதற்கு ஒருசில தினங்கள் சமூகத்தவருடன் இயங்குகின்ற மக்கள் குழுக்கள் உள்ளடங்கும்
  • பகுப்பாய்வு களநிலையில் மேற்கொள்ளப்படும்
  • மக்களுக்கு பொறுப்பளிக்கப்படும்


பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு

• மதிப்பாய்வு (Appraisal) - கிராமத்தின் பிரச்சினைகள், தேவைகள் மற்றும் ஆற்றல்வளங்கள் தொடர்பான தகவல்களைக் கண்டறிதல். அது எந்தவொரு கருத்திட்டத்திலும் முதற்கட்டமாகும்

• பங்கேற்பு (Participatory )- நபர்கள் செயன்முறையில் கலந்து கொள்வர். கருத்திட்ட பணியாளர்கள் சிறந்த தொடர்பாடல் மற்றும் திறன்கள் தேவையான "கீழிருந்து" அணுகுமுறை

• கிராமிய (Rural) - நகர அல்லது கிராமிய மட்டத்தில் எந்தவொரு நிலைமையிலும், அறிவுடைய அல்லது அறிவின்மையானவர்களுடன் தொழிநுட்ப முறைகளைப் பயன்படுத்தலாம்.


மேலிருந்து கீழ்நோக்கிய அணுகுமுறை

• முகாமைத்துவத்தின் மேலிருந்து கீழ்நோக்கிய அணுகுமுறை என்பது தீர்மானமெடுக்கும் செயன்முறையில் உயர்மட்டத்தில் மேற்கொள்ளப்படுவதுடன், பின்னர் குழுவில் ஏனைய அங்கத்தவர்களுக்கு தொடர்பாடலை ஏற்படுத்தும் மூலோபாயமாகும்.

  • உலக வங்கி போன்றவற்றில் கடன் வாங்குவதால் நாடு கடனில் சிக்குகிறது
  • இந்தப் பகுதிகள் வளரும்போது புறப் பகுதிகளிலிருந்து வளங்களை எடுத்துச் செல்கின்றன
  • HEP போன்ற மலிவான எரிபொருட்களைப் பயன்படுத்துவதால் பெரும்பாலும் சுற்றுச்சூழலுக்கு பயனுள்ளதாக இருக்கும்
  • வெளிப்புற இணைப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தை நம்பியுள்ளது
  • கடன்களுக்கு அடிக்கடி நிபந்தனைகள் இணைக்கப்பட்டுள்ளன
  • நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான டேம் போன்றவை பிரவீட் ஆற்றல்
  • உள்ளூர் மக்களுக்கு ஜாப் வழங்குவதை விட இயந்திரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துகிறது


கீழிருந்து மேல்நோக்கிய அணுகுமுறை

• செயன்முறையிலும் தீர்மானம் எடுப்பதிலும் பிரதேச மக்கள் முழமையாகக் கலந்து கொள்வர்


சமூக அபிவிருத்தி

• சமூக அங்கத்தவர்களின் முக்கிய பிரச்சினைகளை அடையாளங் கண்டு கூட்டுச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு முகவர் நிறுவனங்களால் ஒத்துழைப்பு வழங்குகின்ற செயன்முறையாகும்.

• சமூக அபிவிருத்தியானது, சமூக அங்கத்தவர்களை வலுவூட்டுவதுடன், பலம்வாய்ந்ததும் இடைத்தொடர்புகள் அதிகமாகவுள்ள சமூகமொன்றை உருவாக்குவதாகும்.

Post a Comment

Previous Post Next Post