தேசிய குறிக்கோள்கள், அடிப்படைத் தேர்ச்சிகள் மற்றும் கல்விக்கொள்கைகளை இலக்காகக் கொண்டு பெற்றாரின் அபிலாஷைகள் மற்றும் சமூக வேண்டல்கள் என்பனவற்றை அடைந்து கொள்ளும் வகையில் பாடசாலையின் கலைத்திட்டத்தை முகாமைத்தவம் செய்தல் வேண்டும். மாணவர் தேர்ச்சி அடைவு மற்றும் அவர்களின் உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிக் கொணர்வதற்காக நடவடிக்கை எடுத்தல் என்பது கலைத்திட்ட முகாமைத்துவத்தினூடாக எதிர்பார்க்கப்படுகின்றது.

மாணவர்களின் அறிவு, திறன்கள்,மனப்பாங்குகள் மற்றும் தகைமைகளின் அபிவிருத்தியினூ டாக தேர்ச்சிகளைக் கட்டியெழுப்புதல் பாடசாலை உள்ளகத்தில் அல்லது வெளியில் ஆசிரியர் ஒருவருடன் அல்லது அவரின்றி நடைமுறைப்படுத்தக் கூடிய பாடசாலையினாலேயே திட்டமிட்டு முன்வைக்கப்படும் அனைத்து செயற்பாடுகளும் கலைத்திட்டத்திற்குரியதாகும்.


கலைத்திட்ட வகைப்படுத்தல் 

Curriculum classification


முறையான கலைத்திட்டம்

கற்றல் மற்றும் கற்பித்தல் வசதிகளை பாடசாலையில் ஏற்படுத்துவதற்காக குறிக்கோள்கள். நோக்கங்கள், உள்ளடக்கம், கற்பித்தல் மூலோபாயங்கள், மதிப்பீடு மற்றும் அத்தியாவசிய கற்றல் மூலங்கள் என்பனவற்றை வழங்குகின்ற ஒழுங்கமைக்கப்பட்ட அனுபவத் தொகுதியே முறையான கலைத்திட்டமாகும். இதனை அமுல்படுத்தும்போது பாடவிதானம். ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி நூல், பாடநூல்கள் மற்றும் சுற்றுநிருபங்களைப் போன்றே ஆசிரியரின் ஆக்கத்திறனையும் அனுபவங்களையும் பயன்படுத்துதல் அத்தியாவசியமாகின்றது.

முறையான கலைத்திட்டம் எனப்படுவது குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்களுக்காக முறையாக தயாரிக்கப்பட்டுள்ள உள்ளடக்கம், கற்றல் அனுபவங்கள், கற்றலுக்கான வளங்கள் மற்றும் கணிப்பீட்டுச் செயன்முறை செயற்பாடொன்றுடன் பாடசாலையினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டமிட்ட அடிப்படையிலான வேலைத்திட்டமொன்றாகும்.


முறையான கலைத்திட்டத்துடன் இணைந்த பிரதான பணிகள்.

  • தேசிய கல்விக் குறிக்கோள்கள் மற்றும் பொதுத் தேர்ச்சிகள் தொடர்பாக தெளிவான விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளுதல்.
  • காலத்துக்குக் காலம் வெளியிடப்படும் சுற்றுநிருப அறிவுறுத்தல்களுக்கு ஏற்புடையதாக செயற்படுதல்.
  • முறையான கலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக திட்டம் தயாரித்தல்.
  • உச்ச விளைதிறன் மற்றும் வினைத்திறனைப் பெற்றுக் கொள்ளும் வகையில் கால அட்டவணையைத் தயாரித்தல்.
  • கலைத்திட்டம் மற்றும் ஆசிரியர் அறிவுரைப்பு வழகாட்டிநூல் தொடர்பாக தெளிவான விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளுதல், கற்றல் கற்பித்தலுக்கான வளங்களை விளைதிறன்மிக்க வகையில் பயன்படுத்துதல்.
  • செயன்முறைச் செயற்பாடுகளுக்காக போதுமான அளவு சந்தர்ப்பங்களை ஏற்படுத்துதல்.
  • உரிய முறையில் கணிப்பீட்டுச் செயன்முறைச் செயற்படுகளை மேற்கொள்ளுதல் (மதிப்பீடு,ஒப்படைகள்.பரீட்சைகள்)
  • அடைவு மட்டத்தை பகுப்பாய்வு செய்து தேவையான பரிகாரச் செயற்பாடுகளை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துதல்.
  • கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் மாணவர்கள் கற்றுக் கொண்ட விடயங்களை மேலும் பிரயோக ரீதியில் அபிவிருத்திக்குரிய கற்றலை விரிவு படுத்தும் செயற்பாடுகள்/ வேலைத்திட்டங்கள்/ செயற்றிட்டங்கள் என்பனவற்றைத் திட்டமிடலும் நடைமுறைப்படுத்துதலும்.



பாட கொள்கைகள்

தேசிய கல்விக் குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்காக முறையான சுலைத்திட்டத்துடன் பொருந்தும் வகையில் பாடசாலைக்கு உசிதமான பாட கொள்கையொன்றினை கட்டியெழுப்புதல் பாட- சாலையின் பணியாகும். மாணவர்களின் கற்றல் அடைவைப் போன்றே தேர்ச்சி விருத்திக்குரிய செயற்பாடுகளுக்காக இயன்றளவு கவனத்தை பாட கொள்கையினுள் உட்படுத்த வேண்டியுள்ளது.

பாட கொள்கை எனப்படுவது மாணவர்களின் தேர்ச்சி விருத்தியை இலக்காகக் கொண்ட, உரிய சுற்றுநிருபங்கள் மற்றும் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி நூல் என்பனவற்றின் எல்லைகளுக்குப் பொருந்தும் வகையில் அந்தந்த பாடசாலைக்கும் பாடங்களுக்கும் உசிதமான வகையில் சாலையினால் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படும் செயற்பாடுகளின் தொகுதியாகும் LTL-

உதா.-:- களப்பயணம், பாட தினங்களை நடாத்துதல், பரிகாரக் கற்பித்தல்....

பாட கொள்கைகளைத் தயாரிக்கும் போது கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொள்ளுதல் வேண்டும்.

  • தேசிய கல்விக் குறிக்கோள்களும் பொதுத் தேர்ச்சிகளும்,
  • பாடசாலையின் நோக்கங்கள்.
  • மாணவர் தேர்ச்சி விருத்த
  • தனிநபர் நடத்தை விருத்தி
  • சமூக அபிலாஷைகள் மற்றும் தொழிற் சந்தைக்குத் தேவையான வெளியீடுகள்.
  • கற்றலுக்கான வசதிகள்(பௌதீக மற்றும் மனித வளங்கள்,கற்றல் கற்பித்தலுக்கான
  • தொழில்நுட்ப முறையியல்கள்.
  • மாணவர் தேர்ச்சி விருத்திக்கான செயற்றிட்டங்கள்.
  • இணைக் கலைத்திட்டச் செயற்பாடுகள்.
  • கணிப்பீடும் பரிகார வேலைத்திட்டங்களும்.

பாட கொள்கையை நடைமுறைப்படுத்தும் போது கடைபிடிக்க வேண்டிய கீழ்க குறிப்பிடப்பட்டுள்ள படிமுறைகளின்பால் கவனஞ் செலுத்துதல் முக்கியமாகின்றது.
  • நடைமுறையிலுள்ள நிலைமையை ஆய்ந்தறிந்து கொள்ளுதல்.
  • உத்தேச இலக்குகளை உருவாக்கி கொள்ளுதல்
  • இலக்குகளின் அடைவுக்காக உபாய வழிமுறைகளை தயாரித்துக் கொள்ளுதல்,
  • செயற்றிட்டங்களைத் தயாரித்தல்,
  • அச் செயற்றிட்டங்களை விளைதிறன்மிக்க வகையில் நடைமுறைப்படுத்துதல்.
  • கண்காணித்தல்,


கலைத்திட்ட முகாமைத்துவத் திட்டம்

பாடசாலையில் நடைமுறையிலுள்ள பௌதீக மற்றும் மனித வளங்களைப் போன்றே நேரத்தையும் விளைதிறன்மிக்க வகையில் பிரயோகித்து உத்தேச இலக்கை நோக்கி அண்மிப்பதற்கு வினைத்திறன்மிக்க நடவடிக்கைகளை ஏற்படுத்துவதற்காக கலைத்திட்ட முகாமைத்துவ திட்டம் தயாரிக்கப்படுகின்றது. அதனூடாக கீழ்க் காணப்படும் நோக்கங்கள் அடைந்து கொள்ளப்பட வேண்டும்.
  • கலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பாடங்களுக்கு இடையில் தொகுப்பினை உருவாக்குதல்.
  • மாணவர்களின் உச்சபட்ச பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளுதல்.
  • மாணவர்களை கற்றலுக்கு ஊக்கப்படுத்துதல் (ஊக்கல்)
  • ஆசிரியர் அபிவிருத்தியும் மதிப்பீடும்.
  • வளங்களைப் பகிர்ந்தளித்தல், அவற்றின் பயன்பாட்டையும் வினைத்திறனையும் உயர்த்துதல்.
  • இணைக் கலைத்திட்டச் செயற்பாடுகளை விளைதிறன்மிக்க வகையில் நடைமுறைப்படுத்துதல்.
  • பாடசாலையின் பண்புத்தரச் சுட்டியை உயர்த்திக் கொள்ளுதல்.


கலைத்திட்ட முகாமைத்துவத்தினால் பெற்றுக் கொள்ளப்படும் அனுகூலங்கள்
  • பாடசாலையின் கொள்கைகள் மற்றும் பாட கொள்கைகளுக்கிடையிலுள்ள தொடர்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள இயலுகின்றமை.
  • கலைத்திட்ட திட்டத்திற்கமைய உரிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இயலுகின்றமை.
  • மாணவர் அடைவு மற்றும் ஆளுமை விருத்திக்கென சாதகமாக அமையும் கற்றல் சூழல் ஸ்தாபிக்கப்படுகின்றமை.
  • நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக வளங்களையும் நேரத்தையும் முகாமைத்துவம் செய்து கொள்ள இயலுகின்றமை.
  • குறைவான சாதனையை வெளிக்காட்டும் மாணவர்களின் செயலாற்றுகையை உயர்த்துதல்.
  • விசேட தேவைகளுள்ள மாணவர்கள் தொடர்பாக விசேட கவனஞ் செலுத்தக் கூடியதாக உள்ளமையும் மீற்றிறன் மாணவர்களுக்கென கூடுதலான சந்தர்ப்பங்களை வாய்க்கச் செய்வதற்கு இயலுகின்றமையும்.
  • கண்காணிப்புப் பணிகளை வலுவுள்ளதாக்கிக் கொள்ள இயலுகின்றமை.
  • எதிர்கால வேலை உலகிற்கு ஏற்புடைய வெளியீட்டை பாடசாலையிலேயே உருவாக்குவதற்கு இயலுகின்றமை.
  • கலைத்திட்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக சமூகத்தின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளுதல்.
  • சிறுவர் பாதுகாப்பு மற்றும் கரிசனைகள் தொடர்பாக உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இயலுகின்றமை.



கலைத்திட்டத்தை அமுல்படுத்தும்போது அதிபரின் பணிகள்
  • கலைத்திட்டம் தொடர்பான தெளிவினைப் பெற்றுக் கொள்ளுதலும் ஏனையோருக்குத் தெளிவுப் படுத்துதலும்.
  • கலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான திட்டத்தைத் தயாரிப்பதற்கு தலைமைத்துவத்தை வழங்குதல்.
  • கால அட்டவணையைத் தயாரித்து உரிய காலத்தில் பகிர்ந்தளித்தல்.
  • மாணவர்களின் கற்றல் திறன்களை மேம்படுத்துதலும் உயர் செயலாற்றுகையைப் பெற்றுக் கொள்ள ஈடுபடச் செய்தலும்.
  • கலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கென இடைநிலை முகாமையாளர்களின் உதவியைப் பெற்றுக் கொள்ளுதல்,
  • உத்தேச கற்றல் பேற்று அடைவினை இலக்காகக் கொண்ட கற்றல்-கற்பித்தல் சூழலை உருவாக்குதல்.
  • உத்தேச இலக்கை அடைந்து கொள்வதற்காக தேவையான வசதிகளை ஆசிரியர்களுக்கு வழங்குதல்.
  • கற்றல்-கற்பித்தலுக்கான வசதிகளை வழங்குதல் மற்றும் அவற்றை உரிய முறையில் பயன்படுத்துவதற்கு ஊக்குவித்தல்.
  • அடைவு மட்ட பகுப்பாய்வுக்கு இணங்க பாட முன்னேற்றத்திற்காக ஆசிரியர்களை ஈடுபடுத்துதல்.
  • ஆசிரியர்களை தமது தொழில் அபிவிருத்திக்கும் நவீன சிறப்பான செயற்பாடுகளின் பயன்பாட்டுக்கும் ஊக்கப்படுத்துதல்.
  • கலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக சமூகத்தின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வதற்கு தலைமைத்துவத்தை வழங்குதல்.
  • ஆசிரியர்களின் பணிகளை மேற்பார்வை செய்தலும் செயலாற்றுகையை மதிப்பீட்டுக்கு உட்படுத்துதலும்.
  • கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அனைத்து மாணவரையும் பங்குபடுத்திக் கொள்வதற்கு உசிதமான உபாயங்களை பயன்படுத்துவதற்கு ஆசிரியர்களை ஊக்குவித்தல்,
  • தொடர்ச்சியான கற்றலுக்காக ஒவ்வொரு மாணவனதும் அடைவு மட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தற்காலப்படுத்தப்பட்ட தகவல் முறைமையொன்றினை பேணுவதற்கு ஆசிரியர்களை உட்படுத்துதல்.
  • பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட ஆசிரியர் தொழில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக தேவையான தலைமைத்துவத்தை வழங்குதல்.
  • பாட அபிவிருத்திக்குரிய தரவட்டங்களை நடாத்துதல்
  • கலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கலைத்திட்டம், ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிநூல் மற்றும் பாடநூல்களின் தேவையை பூரத்தி செய்து கொள்ளுதலும் உரிய காலத்தினுள் பகிர்ந்தளித்தலும்




ஆரம்பக் கல்வியில் முறையான கலைத்திட்டம்.

இலங்கையில் ஆரம்பக் கல்வியானது 3 முதன்மை நிலைகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

  • முதன்மை நிலை ஒன்று (தரம் 1 மற்றும் தரம் 2)
  •  முதன்மை நிலை இரண்டு (தரம் 3 மற்றும் தரம் 4)
  • முதன்மை நிலை மூன்று (தரம் 5)

ஆரம்பக் கல்வியில் தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்டதும் செயற்பாட்டு அடிப்படையிலானதுமான கலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் அதே வேளை ஆரம்ப முதன்மை நிலைகளின் இறுதியில் அடைந்து கொள்ள வேண்டிய தேர்ச்சிகள் அடங்கிய தொகுதிகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அத் தேர்ச்சிகள் கீழ்க் குறிப்பிட்டுள்ளவாறு பெயரிடப்பட்டுள்ளன.

  • அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள் (Essential Learning Competencies)
  • (விரும்பிய கற்றல் திறன்கள்)

ஒவ்வொரு முதன்மை நிலையையும் நிறைவு செய்யும் போதும் கட்டாயமாக பாண்டித்தியத்தை எய்த வேண்டிய தேர்ச்சிகளாவன அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள் எனப்படுகின்றன. இத் தேர்ச்சிகளாவன எண்ணிக்கை அடிப்படையில் வெவ்வேறாக காட்டப்பட்டுள்ளன.

ஒவ்வொரு முதன்மை நிலையிலும் உரிய அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகளில் பாண்டித்தியத்தை எய்து கொள்ளுதல் எனக் கருதப்படுவது அடுத்த முதன் நிலைக்குப் பிரவேசிப்பதற்கான தகைமையைப் பெற்றுக் கொள்ளுதல் என்பதாகும்.

ஒட்டுமொத்த ஆரம்பக் கல்வி முதன்மை நிலைகளில் மாணவர் ஒருவர் பாண்டித்தியத்தை எய்து கொள்வதற்கான அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகளை அபிவிருத்தி செய்து அம் மாணவர் கனிஷ்ட இடைநிலைப் பிரிவுக்கு பிரவேசிப்பதற்குத் தேவையான அடிப்படைத் தேர்ச்சிகள் பூரணப்படுத்தப்படுகின்றன.

எதிர்பார்க்கும் கற்றல் தேர்ச்சிகள் எனப்படுவது அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகளுக்கு மேலதிகமாக கலைத்திட்ட உள்ளடக்கத்தில் காணப்படும் உயர் மட்டத்திலான தேர்ச்சிகளின் தொகுதியாகும்.

அனைத்து மாணவர்களையும் அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகளில் பாண்டித்தியத்தை எய்தச் செய்வதும் ஆரம்பப் பிரிவு ஆசிரியரின் பொறுப்பாகும்.





ஆரம்பக் கல்வியில் முறையான கலைத்திட்டத்தை அமுல்படுத்துதல்.

ஒட்டுமொத்த கலைத்திட்டத்தையும் அமுல்படுத்தும்போது கற்றல் அனுபவங்களை வழங்குவதற்கு கீழ்க் காணப்படும் முறையியல்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

1. திட்டமிட்ட அடிப்படையிலான விளையாட்டு மற்றும் விளையாட்டு வினோதச் செயற்பாடுகள்,
2. செயற்பாடுகள்.
3. எழுத்து வேலைகள்,

மேல் குறிப்பிடப்பட்ட முறையியல்களைப் பின்பற்றி கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக கவனஞ் செலுத்தப்பட வேண்டும்.

  • தரம் ஒன்றில் உள்வாங்கப்படும் மாணவர்களை அறிந்து கொள்வதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி மாணவர்களின் நுழைவுத் தேர்ச்சிகளை இனங் காணுதலும் அதற்கிணங்க கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துதலும்.
  • மூன்றாம் மற்றும் ஐந்தாந் தரங்களில் மாணவர்களின் நுழைவுத் தேர்ச்சிகளை இனங் காணும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்,
  • ஒரு முதன்மை நிலைக்கென ஒரு ஆசிரியரை ஈடுபடுத்துதல்.
  • ஆரம்பக் கல்வி நிலைகளில் மாணவர்களுக்குப் பொருந்தக் கூடிய கற்றல் சூழலையும் சுற்றலுக்கான சூழ்நிலையையும் (Learning Environment and Learning Climate) உருவாக்குதல்.
  • ஆரம்பப் பிரிவில் பௌதீக வளங்களை விளைதிறன் மிக்க வகையில் பயன்படுத்தி விளை- திறன்மிக்க கற்றல் கற்பித்தலுக்கான சூழலை வடிவமைத்துக் கொள்ளுதல்
  • ஆரம்பக் கல்வி நிலைகளில் பிள்ளைகள் சுற்றாடலில் பல்வேறு அனுபவங்களைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்பதால் அதற்கென பொருத்தமான வகையில் பாடசாலைச் சூழலொன்றினை உருவாக்கிக் கொள்ளுதல்,
  • ஆரம்பக் கல்வி நிலைகளில் மாணவர் மத்தியில் ஆளுமை விருத்திக்கான வலுவான அடித்தளமொன்றை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துதல்.
  • கவர்ச்சிகரமான, முறையானதும் நேர்த்தியானதுமான வகுப்பறையையும் பாடசாலைச் சுற்றுச் சூழலையும் பேணுவதற்கு நடவடிக்கை எடுத்தல்,
  • மாணவர்களில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல். சமூகமய திறன்களை அபிவிருத்தி செய்வதை இலக்காகக் கொண்ட பல்வேறு செயற்பாடுகளுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல். அதன்போது பாடசாலைச் சுற்றுச் சூழலில் விளையாட்டு முற்றம் அடங்கலாக மாணவர்களுக்கான செயற்பாட்டு இடங்கள்(உதா: கிராமிய வீடு, பண்ணை, கடையொன்று.....) தயாரிக்கப்பட்டுள்ளமை.



ஆரம்பக் கல்விப் பிரிவில் கால அட்டவணையைத் தயாரித்தல்.

ஆரம்ப நிலைகளில் பயன்படுத்தப்படுவது நெகிழ்வுத் தன்மையான கால அட்டவணையாகும். கால அட்டவணையைத் தயாரிக்கும் போது ஒவ்வொரு பாடத்திற்காகவும் ஒரு வாரத்தில் ஒதுக்கப்பட்டுள்ள மணித்தியாலங்களின் எண்ணிக்கைத் தொடர்பாக கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். வகுப்பாசிரியர் அனைத்து பாடங்களையும் கற்பிக்கும் அதே வேளை தரம் (03) மூன்றிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் ஆங்கில மொழி பாடத்திற்கென ஆங்கில மொழி பாட ஆசிரியர் ஒருவர் ஈடுபடுத்தப்படுதல் வேண்டும். இதற்கு மேலதிகமாக முதலாந் தரத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் வாய் மொழி மூல ஆங்கிலத்தை விருத்தி செய்வதற்காக ஆங்கில மொழி ஆசிரியரின் உதவியைப் பெற்றுக் கொள்ளுதல் பொருத்தமாக அமையும். சுற்றுநிருப விதிகளுக்கு அமைவாக செயற்பட்டு மகிழ்வோம் வேலைத்திட்டம், விருப்புக் கலைத்திட்டம் மற்றும் இணைக்கலைத்திட்ட வேலைத்திட்டங்களுக்காக கால அட்டவணையில் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.



ஆரம்பக் கல்விப் பிரிவில் இணைக் கலைத்திட்ட வேலைத்திட்டங்கள்

அழகியல்சார் வேலைத்திட்டங்கள், சுற்றாடல் வேலைத்திட்டங்கள். ஆக்கச் செயற்பாடுகள், விளையாட்டுகள், சமய மற்றும் விழுமிய வேலைத்திட்டங்கள், சங்கங்கள் கழகங்கள் போன்ற செயற்பாடுகள் பல இணைக்கலைத்திட்டச் செயற்பாடுகளாக ஆரம்பப் பிரிவின் கலை லத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ளது. கலைத்திட்டத்திற்கமைவாக ஆசிரியர்கள் அச் செயற்பாடுகளை முன்னெடுத்தல் வேண்டும்.


 ஆரம்பக் கல்விப் பிரிவில் கலைத்திட்டத்தைக் கணிப்பீடு செய்தல்.
  • முதன்மை நிலை ஒன்றில் முறைசாரா கணிப்பீட்டு முறையியல்களின்பால் (வாய்மொழி மூல.அவதானித்தல்....) கூடுதலான கவனஞ் செலுத்தப்படுதல்.
  • இரண்டாம் மற்றும் மூன்றாம் முதன்மை நிலைகளுக்கென பொருத்தமான கணிப்பீட்டு முை றயியல்களைப் பயன்படுத்துதல்.
  • செயற்பட்டு மகிழ்வோம் வேலைத்திட்டத்திற்கமைவாக 4 மற்றும் 5 ஆந் தரங்களில் மாணவர்களின் உடல் தகுதியை பரீட்சித்தல்.
  • கணிப்பீட்டு அறிக்கைகள், மாணவர் செயலாற்றுகைக் கோவை, சுருக்கக் குறிப்புகளை பேணுதல் மற்றும் அடுத்த முதன்மை நிலைக்கு அவற்றை வழங்குதல்.
  • இது தொடர்பாக மேலும் தெளிவுப்படுத்திக் கொள்வதற்கு ஆரம்பக் கல்வி ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சி நூல் மற்றும் சுற்றுநிருபங்களினூ டாக ஏற்படுத்திக் கொள்ளலாம்.






Post a Comment

Previous Post Next Post