student issues in tamil

மாணவர்களின் பாடசாலை வாழ்க்கை ஒரு பொற்காலம் என்றால் அது மிகையாகாது. பாடசாலையில் ஏற்படும் பலவகைப்பட்ட பிரச்சினைகளினால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்றது. பாடசாலையில் எழும் பகிடிவதை,வன்முறை,உடமைகளுக்கு சேதம் விளைவித்தல் பொன்ற பிரச்சினைகளுக்கு தற்காலிய தீர்வை விட நிரந்தர தீர்வே பயனுள்ளதாக அமையும். மாணவர்களது பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆசிரியர்களும் பெற்றாரும் முதலில் முன்வர வேண்டும். மாணர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை ஆரம்பத்தில் கண்டறிந்து அதற்கு தீர்வு காண்பதே சிறந்ததாகும்.

UTL ஆசியர்கள் அல்லது வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களை உன்னிப்பாக அவதானிப்பதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய அறிகுறிகளை முன்கூட்டியை அறிந்து கொள்ள முடியும். சில மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை வெற்றிகரமாக சமாளித்துக் கொள்வர். வேறு சிலர் சமாளிக்க முடியாதல் தவிப்பர். மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு காரணமான கருதப்படுவது அவர்களின் உடல், உளத் தேவைகள் குழந்தைப் பருவத்தில் திருப்திகரமாக நிறைவேற்றப்படாமையாகும் அத்துடன் தனது தேவையைப் பூர்த்தி செய்வதற்கு சமூக நிறுவனங்களை தடையாக அமைவது ஆகியவற்றையும் குறிப்பிடலாம்.


மாணவர்களின் பிரச்சினையை தீர்த்தல் அணுகுமுறை

பிரச்சினையை தீர்ப்பதற்கு விஞ்ஞான முறையிலான நுட்பங்களை பயன்படுத்தல் வேண்டும். பிரச்சினையை தீர்ப்பதற்கான படி முறைகள் வருமாறு

பிரச்சினையை இனம் காணல்: அவதானிப்பதன் மூலம் பிரச்சினையை இனம் காணலாம். பிரச்சினை ஏற்பட்ட குழல் சந்தர்ப்பம் என்பவற்றை ஆராய்ந்தால் பிரச்சினையை அளம் காணலாம்.

தரவுகளை சேகரித்தல் : பிரச்சினைக்குரிய பின்னனியை மேல்வாரியாக சேகரித்தல் வேண்டும். இத்தகவல்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள், நன்பர்கள் ஆகியோரிடம் இருந்து பெறலாம்.

கருதுகோள் உருவாக்கல் : பிரச்சினைகளை தீர்க்கும் உக்திகளை கருதுகோள்கள் மூலமே உருவாக்கலாம். சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கருதுகோள்களை அமைக்கப்படும்

முதல்தர தரவுகளை இனங்கண்டு அவற்றை சேகரித்தல் : நுண்மதிச் சேதனை, ஆளுமைச் சேதனை போன்ற உளவியல் சோதனை முறைகளினால் பிரச்சினைக்குரிய காரணிகளை இளம்கண்டு எடுகோள்கள் வாய்ப்பு பார்க்கப்படுகின்றன.

பிரச்சினை தீர்ப்பதற்குரிய உத்திகளை நடைமுறைப்படுத்தல் :பிரச்சினை குறித்து இனங்காணப்பட்ட காரணிகளை உறுதிப்படுத்தி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பொருத்தமான வழிகாட்டல் உபயோகித்தல்

தொடர்ந்து கண்காணித்தல் : தீர்க்கப்பட்ட பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாவாறு கண்காணித்தலும், ஏற்ற பாதுகாப்பு முறைகளை கையாளவும் வேண்டும்.


கல்வி சார்பான பிரச்சினைகள்

மாணவர்கள் கல்வியில் பிஸ்தங்கி இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக, 

  • விசேட உளத்திறன்கள் பெற்றிருந்த போதிலும் ஊக்க குறைவு, குறைவான முயற்சி காரணம்
  • சில மாணவர்கள் முயற்சித்த போதிலும் கல்வியில் கீழ் மட்டத்தில் உள்ளனர்.
  • சிலர் கணிதம், மொழி. விஞ்ஞானம் போன்ற பாடங்களில் கீழ்மட்டத்தில் இருக்கின்றனர்.

பின்வரும் காரணிகள் மாணவர்களின் தாழ்மட்ட அடைவுக்கு காரணமாகும்.

  • பாடசாலைக்கு ஒழுங்காக சமூகமளிக்கமை
  • வகுப்பறைக்குள் தாமதித்து வருதல்
  • பரீட்சையில் கலந்து கொள்ளாதிருத்தல்
  • பரீட்சையில் பார்த்தெழுதுதல்
  • ஒப்படைகள் செய்யாமை
  • குறைந்த நுண்மதி
  • உடற்குறைபாடுகள்
  • நோய்
  • குடும்பச் சூழல்


சமூக வாழ்க்கை ஆலோசனைகள்

மாணவர்களுடைய சமூகத் தேவைகள் நிறைவேறாத பட்சத்தில் சமூகப்பொருத்தப்பாடு அற்றவர்களாக காணப்படுவர். மாணவர்களை சமூகம், பாடசாலை, நண்பர்கள் ஆகியோர் பிழையான நெறியில் இட்டுச் செல்வதால் அவர்கள் பொருத்தப்பாடற்ற நடத்தைகளிலும் சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுவர், சமூகம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதற்கு இதுவே முக்கிய காரணமாகும். சூழல் காரணிகள்தான் ஒருத்தரின் நற்பண்புக்கு காரணமாக அமைகின்றன. சிறந்த பண்புகளை மாணவரிடையே ஏற்படுத்தும் போது அவர்களை சமூகத்துக்கு நற்பண்புள்ள பிரஜைகளாக ஆக்கலாம்.

பல சந்தர்ப்பங்களில் மாணவர்களின் பிரச்சினைகள் அவர்களின் வீட்டுச்சூழலுடன் தொடர்புடையதாக காணப்படுகின்றது. அவற்றைத் தீர்ப்பதற்கு தற்கு ஆசிரியர், அதிபர். ஆலோசகர் ஆகியோர் பெற்றோர்களுடன் தொடர்பு கொள்வது முக்கியம் மாணவர்களின் வகுப்பறைச் சூழல் பொருத்தமற்றதாக காணப்படின் அவர்களுக்கு தகைப்பு, பதகளிப்பு. கல்வியில் பிள்தங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

நெருங்கிப் பழகுபவர்களிடம் இருந்து அன்பு, ஆதரவு, மதிப்பு ஆகியவற்றை எதிர்பார்ப்பதன் மூலம் திருப்திகரமான தனியாள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். இவை கிடைக்கும் பட்சத்தில் சமூகத்துடன் சுமுகமாக உறவுகளைப் பேணலாம். மாணவ குழுக்களில் இணையாத அல்லது ஏற்றுக் கொள்ளப்படாத மாணவர்களிடத்தில் தனிமையுணர்வு, தன்னம்பிக்கையின்மை ஆகியவை ஏற்படலாம். இது தொடர்ந்து நீடித்தால் மாணவர்களுக்கு பதகளிப்பு ஏற்படும் மாணவர்கள் தமது உள்ளார்ந்த திறமைகள் பற்றிய உணர்வைப் பெற்று அவற்றைப் பரீட்சித்துப் பார்த்து செயற்பாடுகளில் ஈடுபட அவர்களில் ஒரு உந்து விசை ஏற்பட வேண்டும். அவற்றை சுயாதீனமாக விருத்தி செய்யும் பொது அவர்களுக்கு தாம் பெறுமதியுள்ளவர்கள் என்னும் சுய கணிப்பு ஏற்படுகின்றது. இதன் மூலம் தன்னம்பிக்கை, திருப்தி என்பன ஏற்படுகின்றது.


மாணவர்கள் எதிர்நோக்கும் சில சில சமூகம் சார் பிரச்சினைகள் வருமாறு.


விசித்திர நடத்தை: இவர்கள் தனிப்பட்ட நடத்தைக் கோலங்கள், பண்புகள், வளக்கங்கள் போன்றவற்றைக் கொண்டிருப்பர். தமது நடத்தை பற்றி அக்கறை காட்டமாட்டார்கள். மற்றவர்கள் எது வேண்டுமானாலும் நினைக்கட்டும் என எண்ணுவர். இவர்களில் தீவிர சார்பு எண்ணங்களும் காணப்படலாம்.

தாழ்வுச் சிக்கல்: தன்னைப்பற்றி மிகத் தாழ்வான சுய எண்ணக்கருக்களைக் கொண்டிருப்பர். தன்னுடைய திறன்களையும் குறைவாக மட்டிடுவர்.

மற்றவர்களில் தங்கியிருத்தல்: இவர்கள் பயமும், பாதுகாப்பற்ற உணர்வும் உடையவர்கள். தமது வேலைகளைச் செய்வதற்கு எப்பொழுதும் மற்றவர்களின் உதவியை நாடுவர். உடல் நடுக்கம், திக்கிப் பேசுதல், நகங் கடித்தல், தமது காதுகளை இழுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவர்

தனிமை நாடல்: மற்றவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்வதில் தோல்வி கண்டு தனிமையை நாடுவர். இவர்களுக்கு ஆரம்பத்தில் ஆலோசனை வளங்காவிடில் நாளடைவில் உளப்பாதிப்பு ஏற்படலாம்.

பாலியல் நடத்தை விலகல்: எதிர்பாலாரை கேலி செய்வதில் இன்பமடைவர். சமூகம் ஏற்றுக் கொள்ளாத விகாரமான பாலியல் நடத்தைகளில் ஈடுபடுவர்.

வன்முறை நடத்தல்: மனமுறிவு ஏற்படும் போது அவற்றை சமாளிப்பதற்காக ஒருவர் வன்செயலில் ஈடுபடலாம். Ex

  • பாடசாலை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் 
  • ஆசிரியர், அதிபர் ஆகியோருக்கு சவால் விடுத்தல் 
  • குழுச்சண்டையில் ஈடுபடல்,
  •  குழப்பம் விளைவித்தல்

அவநெறி தவர்தல்: களவு செய்தல், பொய் பேசுதல், தமது வாக்கைக் காப்பாற்றாமை, நம்பிக்கைத் துரோகம் ஆகிய பண்புகள் இவர்களில் காணப்படும்.

கவனம் தேடல் : அடிக்கடி தேவையற்ற வினாக்களை மாணவர்கள் வகுப்பில் கேட்டல் திடீரென சத்தம் போடுதல்,மேண்டுமென்றே பொருள்களை கீழே வீழ்ந்ததல் ஆகிய நடத்தைகளை இங்கு குறிப்பிடலாம்.

பகிடிவதை: பகிடிவதைக்கான ஆரம்பம் பாடசாலைகளிலேயே ஆரம்பமாகின்றது. பகிடி என்று ஆரம்பிக்கப்பட்ட விடயம் தற்போது உளவியல் பாதிப்பு, மூளைக் கோளாறு, உயிரிளப்பு என செல்கின்றது.

பரிதாபம் தேடுதல் : மற்றவர்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக தம் நிலையை உள்மைக்குப் புறம்பாக தாழ்த்திக் கூறி மற்றவர்களின் அனுதாபத்தைப் பெற்று அதில் சந்தோஷமடைதல்.

சமூக முதிர்ச்சி. மனிதாபிமான விழுமியங்கள், சார்பெண்ணங்களற்ற மனப்பாங்கு, சிறந்த வாழ்க்கைத் தத்துவங்கள் ஆகியவற்றை பாடசாலையில் இருந்தே ஊட்ட வேண்டும். கட்டிளமைப் பருவத்தில் ஏற்படும் சார்பெண்ணம் ஓர் எதிர்மறையான மனப்பாங்கு ஆகும்.





Post a Comment

Previous Post Next Post