உளவியல் பல நூற்றாண்டுக்கு முன்பிருந்தே பலரது கவனத்தையும் ஈர்த்த ஒரு சொல்லாகும். விசேடமாக இலங்கையில் 60 வருடங்களுக்கு முன்பிருந்து பலர் இச்சொல்லை கையாண்டுள்ளமை புலப்படுகின்றது. கிரேக்கத்திலிருந்தே உளவியலின் வரலாறு உளவியலின் வளர்ச்சியானது ஆரம்பமாகின்றது. அவ்வாறே தொடங்கி மெய்யியலிலிருந்து உடற்கூற்றியல், இயற்பியல் எனப் பல படிவங்களை கடந்து வந்துள்ளது. மருத்துவவியல்,
வரலாறு முழுவதும் மக்கள் உளவியல் பிரச்சினைகளுடன் தொடர்புபட்டு வருகின்றனர். உளவியல் வரலாறு குறித்துப் பேசுகின்ற நூல்கள் ஹிப்போக்ரட்டீஸ்னதும், பிளட்டோவினதும், அரிஸ்டோட்டினதும் கருத்துக்களாகிய கிரேக்க மெய்யியலாளர்களின் கருத்துக்களை ஆராய்கின்றது. அதிலும் குறிப்பாக தற்கால உளவியல் சார் உடலியல் ஆய்வின் முன்னோடியான கிரேக்க மருத்துவரான ஹிப்போக்கிரடிஸ் வைத்திய உளவியல் துறைகளில் காட்டிய அக்கறைகளில் உள்ளத்துக்கும் உடலுக்குமிடையிலான தொடர்பு குறித்த சிக்கல்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன.
பிளட்டோ "கருத்துக்களின் உலகம்" (World of Ideas) இருந்து வருவதாக கொடுத்த விளக்கம் உளவியல் சார்பானதாகும். இதனூடாக ஆத்மாக்களின் இருப்பிடமான தெய்வீக இடமொணறிருப்பதாக அவர் கூறினார். மனித பிறப்பிள் போது உடல் குறிப்பிட்ட ஆத்மாவை தனது பொறிக்குள் சிக்க வைத்துக் கொள்கின்றது. குறிப்பிட்ட ஒரு மனிதனின் ஆயுட்காலம் முழுவதும் ஆன்மா உடலில் நிறைந்திருக்கின்றது. அந்த மனிதன் மரணமடையும் போது அது மீண்டும் கருத்துக்களின் உலகத்தை சென்றடைகின்றது என்றார். இத்தகைய கருத்துக்களே உளவியலை ஆன்மா குறித்த அறிவியலாக வளர்ச்சியடைய உதவின.
அதே சமயம், அரிஸ்டோட்டில் "உடலின் செயற்பாடே உள்ளம்" என்றார். இவரின் கருத்துப்படி மனிதன் அவனுடைய அறிவு, அனுபலங்கள், நடத்தைகள் இவற்றை எல்லாம் ஆராய வேண்டும் என்ற முடிவு செய்வதாயின் அவள் ஆராய வேண்டிய ஆய்வு மூலம், ஆதாரப்பொருள் உடற் செயற்பாடாக இருந்தது. உளவியலானது அறிவியலாக வளர்வதற்கு இக்கருத்தும் முதற்படியாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.
கிரேக்கர்களின் பின் கத்தோலிக்க, இஸ்லாமிய மெய்யியலாளர்களும், சிந்தனையாளர்களும் உளவியல் குறித்து பல முன்னேற்றக்கருத்துக்களை முன் வைத்தனர்.பிளட்டோவிற்கு இணையான வகையில் மெய்யியல் உளவியல் வரலாற்றில் டேக்கார்ட் "ஏளைய இயந்திரங்கள், பொறியியல் சாதனங்கள் போல ஆய்வு செய்யப்படக் கூடிய இயந்திரங்களே விலங்குகள்" என கொள்கை வகுப்பதன் மூலமாக இவர் உளவியல் மீது ஒரு முத்திரை பதித்தார். அதாவது மனித உடல் ஒரு சிக்கலான பொறிமுறை என்றும் அது ஒலி, ஒளி உட்பட ஏனைய தாண்டல்களின் செயற்பாட்டுக்குட்பட்டது என்றும் குறிப்பிட்டார். இந்த அடிப்படையிலேயே மனிதனுக்கு ஆன்மா உண்டு என்றும் அது அவனிடம் உள்ள இயந்திரவியல் அமைப்பிலும் தொடர்பிலும் சார்ந்திருப்பது என்றும் கூறினார். டேக்கார்ட்டின் இவ்வகைக் கருத்துக்கள் உளவியலில் முக்கியமான இடத்தைப்பிடித்து விட்டன.
உளவியலைக் குறிக்கும் Psychology என்ற ஆங்கிலச் சொல் சைக்கி (Psyche). லோகோஸ் (Logos) என்ற இரண்டு கிரேக்க சொற்களிலிருந்து பிறந்தது. "Psyche" என்பதற்கு ஆன்மா, உயிர் (Soul) என்று பொருள். "Logos” என்பதற்கு ஆய்வு (study) என்று பொருள். ஆகவேதான் உளவியலை ஆன்மா குறித்த ஆய்வு என்பர்.
சமூக உளவியல்
சமூக உளவியல் என்பது சமூகத்தில் வாழும் தனிமனிதனின் நடத்தையை கற்பதாகும். பிறப்பு முதல் இறப்பு வரையிலும் மனிதர்கள் சமூக சூழ்நிலைகளில் பங்கு பெற்று வாழ்கின்றனர். மற்றும் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்கின்றனர். மனிதனை குழ்நிலைக்கு இயைந்து செல்லும் தன்மையை கொண்டு புறத்தூண்டுதல்களுக்கு இயைந்த உயிர்பொருள் என்றே கூற வேண்டும். அவன் இவ்வுலகில் பிறக்கும் போது அவனின் இயல்பு அவ்வாறுதான் இருக்க வேண்டும் எனக் கூறமுடியாது. பிறர் உதவியினால் மட்டுமே வாழும் தன்மையைக் கொண்டவனாகவே பல மாதங்கள் அவன் காணப்படுகின்றான். உணவுக்காகவும், அரவணைப்பிற்காகவும் குளந்தை தன் தாயை சார்ந்துள்ளது. அது வளர வளர உறவு கொள்ளும் பரப்பும் விரிந்து கொண்டே போகின்றது.
அவன் குடும்பத்தில் உள்ள வயது முதிர்ந்தவர்களும் இளைஞர்களும் வயது வேறுபாடின்றி அவன் குழுவில் ஐக்கியமாகி விடுகின்றனர். ஆண்டுகள் உருண்டோடும் போது அவனின் அகிலம் விரிந்து கொண்டே போகின்றது. அவனின் தோழர்கள், ஆசிரியர்கள் என்ற குழுவின் தன்மை விரிகின்றது. பருவம் வந்ததும் திருமணமாகி துணை என்றும் குழந்தைகள் என்றும் அண்டை அயலார்கள் என்றும் பலரும் அவனது அகிலத்தில் ஐக்கியமாகி விடுகின்றனர். இத்தகையோர்களுடன் அவன் நேரடியாக முகத்துடன் முகம் என்ற நிலையில் தொடர்பு கொள்கிறான்.
வேறொரு பரந்த உலகத்துடனும் அவனுக்கு மறைமுகமான முறையில் தொடர்பு ஏற்படுகின்றது. செய்தித்நாள்,தொலைக்காட்சி, திரைப்படம் போன்ற தொடர்பு சாதனக் கருவிகள் மூலம் அவனுக்கு வெளியுலகத்துடன் தொடர்பு ஏற்படுகின்றது. வரலாறு, இலக்கியம், கலை ஆகியவற்றுடன் தொடர்பு கொள்வதன் மூலம் கடந்த காலத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கின்றான். அவனைச்சுற்றி இருப்பவர்களும் இலக்கிய கதாபாத்திரங்களும் அவனைப் பாதிக்கின்றன அதனை 'பண்பாட்டுச் சூழல்' எனக்கூறப்படும். இந்தச் சூழல் தொட்டு உணர முடியாத போதும் ஒருவன் தன்னை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பான சூழல் என்பதால் வலிமை வாய்ந்தது என்று கருத வேண்டும்.
சமூகத்தில் பிறந்து சமூகத்தில் வாழும் ஒருவனின் வாழ்க்கை முழுவதும் சமூக ஊடாட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது. ஒருவன் இந்த உலகில் பிறக்கும் பொழுது ஏர் உடல் அமைப்பையும் ஒரு வகை அறிவுத் தன்மையையும், உணர்வுத் தன்மையையும் தன்னகத்தே கொண்டுள்ளான். ஒரு குழந்தையின் முதல் அழுகையை பிறரின் கவனத்தை கவருவதற்காக எழுப்பப்படும் ஒலியாகும். இந்த உபாயத்தை அவன் வாழ்க்கை முழுவதும் கடைப்பிடித்து வாழ்நாள் முழுவதும் பல்வேறு கட்டங்களிலும் பிறரின் கவனம் தன்மீது படவேண்டும் என்றே நடந்து கொள்கின்றான். பிறறைத் தட்டி எழுப்பி அவர்கள் இவனின் குரலுக்கு செவிசாய்க்குமாறு பார்த்துக் கொள்கின்றான். இதனைப் போன்றே பிறரின் குரலுக்கும் இவன் செவிசாய்த்துக் கொள்கின்றான். இது 'கொடுக்கல் வாங்கல் முறையிலான பாதிப்பு என்று கூறவேண்டும். ஒருவனின் உளவியல் தன்மைகளும் நடத்தை முறைகளும் இந்த 'கொடுக்கல்-வாங்கல்' முறையில் பாதிக்கப்படுகின்றது.
பிறருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள ஒருவன் விளையும் போதும், பொருட்களை அடைந்து கொள்ள விரும்பும் போதும் ஒருவன் அதனால் தான் தேர்வுசெய்யும் உத்தியைக் கைக்கொள்கிறான். சிலரை அல்லது சிலவற்றை ஏற்றுக் கொள்கின்றான். இதற்கெல்லாம் அவனின் விருப்பார்வங்களும் மதிப்பீடுகளும் தான் காரணமாகும். இவை அவனின் சமூகச் சூழலினால் பாதிக்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அவனின் பல நம்பிக்கைகள் அவனின் இளமை காலத்திலேயே அவனின் உள்ளத்தில் பதிந்தவையாகும். அவனின் கருத்துக்கள் பலவும் பிறர் கொண்டிருக்கும் கருத்துக்களின் பாதிப்பு கொண்டவையாகவும் இருக்கும் அவன் எடுத்துக் கொள்ளும் முடிவுகள் அவனின் தான் என்னும் முனைப்பின் அடிப்படையில் ஏற்பட்டவை தான் என்றாலும் இந்த 'தான்' என்ற எண்ணம் அவனின் சமூகத்தின் உருவாக்கம் என்று கூற வேண்டும்.
ஒருவன் எவ்வாறு தோன்றுகின்றானோ அவ்வாறு தோன்றுவதற்கு, அவன் வளர்க்கப்பட்ட முறையும் அவன் பிறரைப் பார்த்து இவ்வாறு தானும் நடந்து கொள்ள வேண்டும் என்ற முன்மாதிரியாக சிலரை ஏற்படுத்திக் கொண்டதும் காரணங்களாகும். அவன் தன்னைப்பற்றி ஏற்படுத்திக் கொள்ளும் அபிப்பிராயங்கள் பிறர் அவனைப்பற்றி ஏற்படுத்திக் கொள்ளும் அபிப்பிராயங்களையும் அடிப்படையாகக் கொண்டது. அவனின் உள்ளுணர்வுகள் எல்லாம் பிறரைப் பார்த்து ஏற்படுத்திக் கொண்டவையாகும். அவன் தன்னை நேசிக்கிறான் அல்லது வெறுக்கிறான் என்ற நிலை ஏற்படுகின்றது. ஏன்னென்றால் இதற்கு காரணம் பிறர் அவனை நேசிக்கிறார்கள் அல்லது வெறுக்கிறார்கள் என்பதை அவன் அறிந்து கொண்டது தான் என்று கூறவேண்டும்.
ஒருவளின் வெளிநடத்தையைப் பொறுத்தும் சமூக பாதிப்பு இல்லாத நடத்தை இருக்குமா என்று கூறுவது கடினமாகும். அவன் தான் பயிற்றுவிக்கப்பட்ட முறையிலும் நடந்து கொள்கின்றான். இதன் உன்மை என்னவென்றால் ஒருவர் அங்கமாக இருக்கும் குடும்பம், சமுதாயம், சமயக்குழு, நாடு ஆகியவை அவரை இவ்வாறு தான் நடந்துகொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றது. சமூகத்தினால், நீரமானிக்கப்பட்ட முறையில் தான் ஒருவர் நடந்துகொள்கின்றார். அவரின் நடத்தை முறை பொதுமக்கள் அபிப்பிராயத்தினாலும் பிரச்சாரத்தினாலும் கட்டுப்படுத்தப்படுகின்றது. சமூக சூழ்நிலை அடிப்படையில் ஒருவரின் ஆளுமையையும் நடத்தை முறையையும் கற்பதுதான் சமூக உளவியலின் நோக்கமாகும்.
சமூக உளவியல் வரையறை
சமூக உளவியல் என்பது தனிமனித நடத்தையின் தன்மையையும் அதன் காரணங்களையும் சமூக சூழலில் புரிந்துகொள்ள உதவுகின்ற ஒரு அறிவியல் பாடமாகும். Gimball Young யின் கூற்றுப்படி சமூக உளவியலை கீழ்காணும் வகையில் இலக்கணப்படுத்தலாம்.
"தனி மனிதனின் ஊடாத்தையும் அதன் மூலம் தனிமனிதர்களுக்குள் ஏற்படும் சிந்தனைகள் உணர்வுகள், பழக்கங்கள் ஆகியவற்றையும் கற்பது சமூக உளவியாகும்".
சமுக உளவியலின் வரலாறு
சமூக உளவியல் அதிகார புர்வமாக தோன்றிய காலத்தை குறிப்பிடுவது மிகவும் கடினம். 1908 ஆம் ஆண்டில் இருந்து 1924 ஆம் ஆண்டிறகும் இடைப்பட்ட காலத்தில் சமூக உளவியல் ஒரு தனிப்பட்ட அறிவியலாக உருவெடுத்தது எனக்கூறலாம். Willian Me Dougall யினால் எழுதப்பட்ட 'சமூக உளவியல்" என்ற நூல் 1908 யில் வெளிவந்தது. William சமூக நடத்தைகள் இயல்புணர்ச்சிகளினால் உண்டாகின்றது எனக் குறிப்பிடுகின்றார். இக்கருத்தை நவீன உளவியலாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பின் F.HAllport என்பவர் சமூக உளவியலின் இரண்டாம் பதிப்பை 1924 யில் வெளியிட்டார். இதன் பின் சமூகவியல் வேகமாக வளர்ச்சியடையத் தொடங்கியது. குறிப்பாக முஸாபர் சரீப் கர்ட்லுணர் ஆகிய இருவர்களுடைய பணிகளும் சமுக உளவியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்கவை.
Post a Comment