private intelligence in tamil

உளவளத்துணையின் அடிப்படை அம்சமாக இருப்பது தனியாள் அபிவிருத்திக்கு கை கொடுப்பதாகும். இதில் பின்வரும் அடிப்படை நோக்கங்கள் காணப்படுகின்றன.

  • தனியாள் நலன்களை மேம்படுத்துதல்
  • மனிதனை மனிதனாக மதித்தல்
  • தனி நபர் கௌரவத்தினை அடிப்படையாக கொண்டிருத்தல்
  • உளவளத்துணை ஒன்றுன் ஒன்று தொடர்புபட்ட செயல் முறையாக இருத்தல்
  • உளவளத்துறை செயல் முறை இலக்கை நோக்கி செல்லல்.


அதிக சந்தர்ப்பங்களில் தமது வாழ்க்கை பற்றியும் பிரச்சினைகள் பற்றியும் அறிவு ரீதியான முறையில் நோக்குவதால் பல்வேறு பிரச்சினைகள், சச்சரவுகள் ஏற்பட இடமுண்டு. ஆனால் உளவளத்துணை நடவடிக்கைகளினூடக தனியாள் நலன்கள் கட்டாயமாக கவளிக்கப்படல் வேண்டும். அதும்டுமல்லாது ஒரு மனிதனை மனிதனாக மதித்தல் இங்கு நடைபெறுகின்றது. இங்கு கட்டணையிடல் என்னும் செயல் முறை நடைபெறக் கூடாது. பின்வரும் பண்புகள் உளவனத் துணையாளர்களிடம் காப்படல் வேண்டும்.

  • மோசடியற்ற, நேர்மையான ஒருவராக இருத்தல்
  • விரோத மனப்பான்மை அற்றவர்
  • நிபந்தனையற்ற சாதக எண்ணங்களையும். கண்காணிப்பையும் விருத்தி செய்து கொள்ளல்
  • மற்றவர்களின் உணரவை விளங்கிக் கொள்ளும் ஆற்றல் உடையவராக இருத்தல்
  • சுய அடைவிற்கு உள்ளாதல்
  • சேவை நாடியை கருத்துள்ள சுய ஆத்ம ஆராய்ச்சிக்கு விட்டு விடுதல்

கய அடைவு எனப்படுவது ஒருவர் மிக சிரமத்துடன் கட்டி எழுப்ப வேண்டிய நிலைமையாகும். ஆதை விருத்தி செய்வதற்கான வழிகள் வருமாறு.

1. பொறுமையின் அளவை அதிகரித்தல்

2. தாமும் தம்மை மற்றவர்களும் ஏற்றுக் கொள்ளும் தன்மையை அடைல்

3. நிர்மான சக்தியை விருத்தி செய்தல்

4. இரகசியத்தை பாதுகாக்கும் தன்மையை விருத்தி செய்து கொள்ளல்.

5. ஆளமான ஆளிடைத் தொடர்புகளை விருத்தி செய்து கொள்ளல்

6. மற்றவர்களக்காக நேர்மையான கவனிப்புடன் சேவை செய்யும் தன்மையை ஏற்படுத்திக் கொள்ளல்.

7. திருப்தியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திக் கொள்ளல்

8. இதயத்தாலும்,உளமனதாலும் வழிகாட்டம் ஒருவராதல்

9. தீர்மானம் எடுக்கும், நடவடிக்கை எடுக்கும் நிபுணத்துவத்தினை வளர்த்துக் கொள்ளல்.


ஒருவர் நேர்மையற்ற யதார்த்தமற்ற ஒருவராக இருந்தால் அவருக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம். ஒருவர் எப்பொழுதும் நேர்மமான (Positive) எண்ணங்கள் உடையவராக இருத்தல் வேண்டும். எதிர்ம (Negative) எண்ணம் இருக்கும் வரையும் தனியாள் விருத்தி ஏற்படாது. "எனக்கு ஒன்றுமே செய்ய முடியாது". "நான் யாரையும் நம்பாத ஒருவன்"."என்னால் ஒரு பிரயோசனமும் இல்லை" என்ற தாழ்வுச் சிக்கல் ஏற்பட்டால் இவனை சாத்தியமாக சிந்திக்கும் ஒருவராக மாற்றுவதற்குரிய அவகாசம் மிகக் குறைவாகும். ஒருவர் தன்னைப் பற்றி அதிக மதிப்பீடு செய்வதும், குறைவாக மதிப்பீடு செய்வதும் தவிர்க்கப்படல் வேண்டும். யதார்ததத்தை உணர்ந்த மதிப்பீடு செய்தல் வேண்டும். இதனூடே தனியாள அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொள்ளலாம்.குரோத மனப்பான்மையுடனும், ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடனும் இருப்பதென்பது இன்னொருவருக்குச் செய்யும் தீங்காகும். இதனூடாக மனிதர்களுக்கு பிரச்சினைகளையும், துன்பங்களையும் ஏற்படுத்தலாம். மனிதர்களை நேசம் வைக்கும், அன்பு செலுத்தும் உள மட்டத்தினையும் கனிவான இதயத்தினையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக மதச் சூழல்களும், தொழில் ஒழுங்காற்று விதிகளும் பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்றன. 

பாரிய பொறுமையின் அளவு ஒவ்வொரு தனி நபருக்கும் ஏதாவது ஒரு அமைப்பில் இயல்பாகவே அமைந்து இருந்தாலம் அதிக சந்தர்ப்பங்களில் அது போதியதாக அமையாமையினால் பாரிய பிரசசினைகள் ஏற்பட இடமுண்டு. ஆகையினால் பொறுமையின் அளவை விருத்தி செய்து கொள்வது அவசியமாகின்றது. இதற்காக அறிவு, அனுபவம் மற்றும் ஆத்மீகம் போன்ற அம்சங்களை விருத்தி செய்வதன் மூலம் இந்த நிலமைக்கு சமீபமாகலாம். சுய அடைவின் அடிப்படை குணாம்சமாக தாமம், பிறரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைவதைக் குறிப்பிடலாம். முதலாவதாக தம்மை விளங்கிக் கொள்ள வேண்டும் இதனூடாக தாம் யார் என்பதை தான் புரிந்து கொள்ள வேண்டும். யதார்த்தமாக தம்மை ஏற்றுக் கொள்வதன் மூலம் இந்த நிலையை அடைய முடியும்.

அது மட்டுமல்ல எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவதானிப்பு, பகுப்பாய்வு, புரிந்துணர்வு மூலம் மற்றவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். வெற்றி பெறும் ஒவ்வொருவருக்கும் பின்னாலும் நிர்மானத்திறன் இருக்க வேண்டும். 'நிர்மானத்திறன்' என்பது ஒருவர் புதியவைகளை தேடுவதற்கு உற்சாகம் எடுப்பதாகும். அல்லது புதியவைகளை சிந்திப்பதற்கு பழுகுவதாகும். புதியவைகளை சிந்திப்பதற்கு பழுகுவதன் மூலம் பதியவைகளை செய்வதற்கு சந்தர்ப்பம் இயல்பாபவே கிடைக்கின்றது. தர்க்கம், புத்தி, அறிவு என்பன ஒன்றாவதன் மூலம் மேலும் இதனை விருத்தி செய்யலாம்.

'காள்ரோஜஸ்' இன் கருத்துப்படி உளவளத்துணையாளரிடம் இருக்க வேண்டிய பாரிய பொருப்பு பற்றி வலியுறுத்துகின்றார். அதுமட்டுமல்ல ஒரு மனிதனின் பூரணமான அபிவிருத்திக்கு அதி விசேடமான அம்சங்கள் சிலதை முன்வைத்துள்ளார். இதன்படி முழு மனிதனாவதற்கு அவசியமான பிரதானமான மூன்று காரணிகளை அவர் காட்டித் தந்துள்ளார்.

1.ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய திறந்த மனப்பான்மை
2. தான் நம்பிக்கைக்குரிய ஒருவராதல்.
3. தொடர்ச்சியான விருத்திக்கு தான் தயாராக இருத்தல்


மேற்குறிப்பிட்ட காரணிகளை அடைந்து கொள்வதன் மூலம் ஒரு ஆளுக்கு முழுமைத் தன்மையை அடைய முடியும். திறந்த மனப்பான்மை எல்லா மனிதர்களுக்கும் இருக்க வேண்டிய ஒன்றாகும். இதைத்தவிர விருத்தி செய்யப்பட வேண்டிய ஆளுமைப் பண்புகளை ரோஜஸ் என்னும் அறிஞர் பின்வருமாறு கூறியுள்ளார்.

  • சிகிச்சை அளிப்பவர் தனது கடமைகளை அறிந்து கொள்ளல்
  • சிகிச்சை அளிப்பவரின் நல்ல மனப்பாங்கு
  • நபருக்குள்ள நன்னடத்தை அமைப்பு
  • நல்லதொரு உளவளத்துனைத் தொழிற் தொடர்பு

ஒருவருடைய ஆளுமை வளர்ச்சி அவருடைய நடத்தையில் பிரதிபலிக்கும். உதாரணமாக குறைந்த ஆளுமையுடைய ஒருவர் சிலர் முன்னினையில் செல்வதற்கோ, அவர்களிடம் கமூகமாக உரையாடுவதற்கோ முன்வரமாட்டான்.

ஆளுமை என்பதை தலைமைத்துவ பண்பொன்றாக ரோஜர் கூறியுள்ளார். இதன்படி சிகிச்சையளிப்பவர் முதலில் தன கடமையை அறிந்து கொள்ளுதல் வேண்டும். உளவளத்துணை நடவடிக்கைகளுக்கு முன் உளவளத்துணையாளர் தமது அந்தஸ்து கடமைகளைச் சரியாக உணர்ந்திருத்தல் வேண்டும். அது மாத்திரமல்லாது சிகிச்சை அளிப்பவர் நல்ல மனப்பாங்குடன் இருப்பது அவரது கடமைகளை சரியாக செய்வதற்கு உதவியாக அமையும்.


'ரோபரட் காகுப்' என்ற உளவியலாளரின் கருத்துப்படி உளவியலாளரிடம் காணப்பட வேண்டிய பெறுமதிமிக்க பண்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

1. மற்றவர்களின் வேதனையைப் புரிந்து கொள்ளும் தன்மை
2. தம்மிடம் வரும் சேவை நாடியை நல்ல முறையில் வரவேற்றல்
3. நேரடித் தன்மை
4. போலியற்ற தன்மை
5.கருத்துக்களை முழுமையாக வெளிப்படுத்த இடம் கொடுத்தல்.
6. எதிர் வாதத்தின் உருவாக்கம்
7. நடவடிக்கைகளை தாமதிக்காமல் செய்தல்


மற்றவர்களின் வேதனையை உணர்வது ஒத்துணர்வு எனப்படுகின்றது. அதாவது சேவை நாடி ஒருவர் தமது பிரச்சினையை உளவளத்தணையாளருக்கு முன்வைக்கும் போது அந்த பிரச்சினையின் தன்மையை சரியாக உளவளத்துணையாளர் விளங்கிக்கொண்டார் என்பதை சேவைநாடி புரிந்துகொள்வதாகும். உளவளத்துணையின் போது ஒத்துணர்வு மிகவும் பெறுமதி வாய்ந்த ஒன்றாகும்.


தனியாள், குடும்பம். குழு என்ற அடிப்படையில் நிகழும் உளவளத்துணை நடவடிக்கையினுள் பொதுவாக தரப்பட்டுள்ளன. அவை கவனிக்க வேண்டிய சிறப்பம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

  • நல்லதொரு குழலை தெரிவு செய்து கொள்ளல்
  • துணைநாடியை நல்ல முறையில் விளித்தல்
  • ஏற்றுக் கொள்ளப்பட்ட மொழிநடைப் பிரயோகம்
  • 'தொணி', 'உச்சரிப்பு பற்றி கவனமாக இருந்தல்
  • தேவைப்படின் ஓய்வு எடுத்துக் கொள்ளல்.
  • சரியான முறையில் கருத்துக்கள் செய்திகளை பெற்றுக் கொடுத்தல்
  • பின்னூட்டல் பற்றி கரிசனை கொள்ளல்

சேவை நாடி உளவளத்துணையாளரின் முகத்துக்கு முகம் நோக்கி உரையாடுவதற்கு ஏற்பாடு செய்யும்போது சேவை நாடியின் முன்னால் யன்னல், கதவு இருந்தால் அந்தப் பக்கத்துக்கு வரும் சில விடயங்கள் சேவை நாடியின் மனதை ஒரு நிலைப்படுத்த முடியாது போகும். இதன் காரணமாக ஏற்ற ஒரு குழல் உருவாக்கப்படல் வேண்டும். அது மட்டுமல்லாது அங்கு தொங்க வைக்கப்பட்டிருக்கும் படங்களையும் அகற்றல் வேண்டும் இருவரும் அமர்ந்து கொள்வதில் இரு முறைகளை ஆக்கிக் கொள்ளலாம்.

1. மேசையின் இருபக்கத்திலும் முகத்திற்கு முகம் நோக்கிய அமைப்பில் கலந்துரையாடலில் ஈடுபடல்

2. மேசையின் இடது பக்கத்திற்கோ அல்லது வலது பக்கத்திற்கோ நாற்காலியை வைத்து முகத்திற்கு முகம் நொக்காதபடி கலந்துரையாடலில் ஈடுபடல்.


கிராமிய பறங்களில் வாழும் பாமர சேவை நாடிகளுக்கு முன்னிலையில் புரியாத ஆங்கிலச் சொற்களை பயன்படுத்துதல் மற்றும் கடுமையான சொற்களைப் பிரயோகிப்பது கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்.

உமது தகப்பன் என்ன செய்கின்றார்? இவ்வாறு கேட்கும் போது சேவை நாடி மிகவும் துக்கமான சாயலில் உளவளத்துணையாளரை பார்த்துக்கொண்டிருந்து பின்னர் மிகவும் மோசமான முறையில் அழுவதற்கு தொடங்கும் சந்தர்ப்பத்தில் 'தகப்பன் என்ன செய்கின்றார்?' 'உயிருடன் இல்லையா?" போன்ற வினாக்களைத் தொடுத்து மென்மேலும் சேவை நாடியை சிரமத்துக்குள்ளாக்குதல் கூடாது. இதன்பின்னர் சேவை நாடியின்  உணர்ச்சி. ஆவேசம் ஆகியவற்றை குறைக்குமுகமாக தலைப்பை வேறு திசையில் திருப்புதல் வேண்டும்.







Post a Comment

Previous Post Next Post