சகல பிள்ளைகளும் தனியார் வேறுபாடுகள் அல்லது பண்புகளை கருத்திற் கொள்ளாமல் பாடசாலையில் உள்ளடக்கப்படல். சகல பிள்ளைகளும் பாடசாலை உள்ளடக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி சம அடிப்படையில் கற்றல் செயலொழுங்கிலும் உள்ளடக்கப்படல்.
உள்ளடக்கல் கல்வி என்றால் என்ன?
உட்படுத்தல் கல்வியானது சமவாய்ப்பு என்ற அடிப்படையில் ஒவ்வொரு பிள்ளையும் கல்வியில் பங்குபற்றவதற்கான உரிமையினையும் சகல மாணவர்களும் கற்கவும் கல்வியில் நன்மை பெறவும் உறுதி செய்கின்றது. ஆகவே உட்படுத்தல் கல்வி எண்ணக்கரு சாதாரண பாடசாலைகளில் குறைபாடுடைய பிள்ளைகளை உள்வாங்குவதுடன் தொடர்புபட்ட போதிலும் பரந்த நோக்கில் கல்வியுரிமை மறுக்கப்பட்டவர்களும் கல்வியின் பிரதான நீரோட்டத்திலிருந்து ஒதுக்கப்படும் ஆபத்தில் உள்ளோருக்கும் வழிகாட்டலை வழங்குகிறது.
உட்படுத்தல் கல்வி என்ற எண்ணக்கருவானது சகல பிள்ளைகளையும் பிரதான பாடசாலை நீரோட்டத்தினுள் கொண்டு வருவதைக் குறிக்கும். உட்படுத்தல் என்பது பாடசாலைகளில் பங்குபற்றுவதற்கான சிறுவரது உரிமை பற்றியதாகும்.
சிறந்த பல நலனோம்பல்களுடன் இலவசக் கல்வி அளிக்கப்பட்ட போதிலும் தற்போது பலவீனமான குழுக்கள் இடம்பெறுவதில் எல்லோருக்கும் கட்டாயக் கல்வி என்ற இலக்கு அடிப்படையில் உள்ளது. இத்தகையோர் பின்வரும் பிரிவுகளுள் அடங்குவர்.
- பொருளாதார ரீதியாக பின் தங்கிய சிறுவர்கள்
- உடற்குறைபாடுடைய சிறுவர்கள்
- இடம்பெயர்ந்த சிறுவர்கள்
- பெருந்தோட்டத் துறையில் உள்ள சிறுவர்கள்
- தெருவோரச் சிறுவர்கள்
- நிறுவன பராமரிப்பிலுள்ள சிறுவர்கள்
மாணவரது இயளலவு, பால்நிலை, மொழி, அந்தஸ்து, குடும்ப வருமானம், அங்கவீனம், நிறம், மதம் அல்லது இனம் போன்ற எக்காரணம் கொண்டும் பாடசாலையிலிருந்து பிள்ளைகளை ஒதுக்கி வைப்பதனை இது நிராகரிக்கின்றது.
உட்படுத்தல் கல்வி
- உட்படுத்தற்கல்வி என்பது விசேட கல்வி என்பதற்கான மற்றுமொரு பெயரல்ல.
- பிள்ளைகளின் கற்றலுக்குத் தடை ஏற்படுத்தும் காரணிகளை இனங்காணல்,
- அவற்றை இயன்றளவு குறைத்தல்,
- பிள்ளைகளது பங்கேற்பையும் கற்றலையும் உயர்மட்டமாக்கல்,
- "வளங்களை பயனுறுதிமிக்கதாக உபயோகித்தல்
- ஆகிய அனைத்து விடயங்களையும் உறுதிசெய்யும் ஒரு புதிய கல்வி எண்ணக்கருவாகும்.
யார் தவிர்க்கப்பட்டுள்ளனர்.
- அங்கவீனப் பிள்ளைகள் (மாற்றுத்திறனாளிகள்)
- தொழில் புரியும் பிள்ளைகள்
- தெருவோரச் சிறார்கள்
- கற்றலில் இடர்பாடுகள் உடையவர்கள்
- மிக வறிய பிள்ளைகள்
- பின்தங்கிய பிரதேசங்களைச் சார்ந்தோர்
- மொழி ரீதியாக, இன அல்லது பண்பாட்டு ரீதியான சிறுபான்மையினர்.
- அவமானமான தொழில்களைப் புரிவோர் எனக் கருதப்படுகின்ற
- பெற்றோர்களது பிள்ளைகள்
- எச.ஐ.வி தொற்றுள்ள பிள்ளைகள் அல்லது தொற்றுடைய
- பெற்றோரது பிள்ளைகள்
- பிணக்கு அல்லது இயற்கை அனர்த்தங்களினால் இடம்பெயர்ந்த பிள்ளைகள்
- பாடசாலையில் உள்ள ஆனால் பாடசாலையில் அடைவினை அடையாதவர்கள்
- இடை விலகியோர்.
உள்ளடக்கல் கல்வி குறிப்பாக பின்வருவோரின் குறியிலக்காகக் கொள்கிறது.
பாடசாலையில் சேர்க்கப்பட்டுள்ள ஆனால் கற்றலில் இருந்து தவிர்க்கப்பட்டோர்."பாடசாலையில் சேர்க்கப்படாதோர் ஆனால் அவர்களது துலங்கல்களில் மிகுந்த நெகிழ்வுடையதாக பாடசாலைகள் இருந்திருப்பின் பாடசாலையில் பங்குப்பற்றக்கூடியவர்கள். மேலதிக சில ஒத்துழைப்பினை வேண்டுகின்ற கடுமையான பலவீனமான தன்மைகளை கொண்டுள்ள குறைந்த எண்ணிக்கையுடைய பிள்ளைக் குழுக்கள்.
- சகல பிள்ளைகளையும் வேறுபாடின்றி ஏற்றுக் கொள்ளும் இடமே உட்படுத்தல் பாடசாலையாகும்.
- சகல பிள்ளைகளுக்கும் வேறுபாடு காட்டாத வகையில் பாடசாலை ஒழுங்கமைப்பினை உருவாக்கி கொள்ளும் ஒரு செயன்முறை உட்படுத்தலாகும்
சகல பிள்ளைகளையும் என்பதனால் கருதுவது யாது?
தற்போது இயலாமையுள்ள பிள்ளைகளுக்கு பாடசாலைக் கல்வியைப் பெற்றுக் கொடுக்காமை. பாடசாலை அனுமதி மறுக்கப்படல் ஆகிய காரணங்களால் இவர்கள் சமூக நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கி நிறுவனமயப்படுத்தப்படல், சமூகத்தால் நிராகரிக்கப்படல். Санано வாய்ப்பின்மை, நிரந்தரமாக பிறசில் தங்கி வாழ நேரிடல் போன்ற பாதக விளைவுகள் தலையெடுத்துள்ளன. இலங்கைப் பாடசாலைகளில் இயலாமையுள்ள மாணவர்களில் பெரும்பாலானோர் முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களும், மாணவர்களும் இவர்கள் தொடர்பாக கொண்டுள்ள எதிர்மாறான மனப்பாங்குகள், பிள்ளைகளின் வாய்மொழி மற்றும் உடல் சார்ந்த பிறழ்வான் நடத்தைகள், தேவையான வளப்பற்றாக்குறை, நெகிழ்வற்ற கலைத்திட்டம் பொருத்தமற்ற மதிப்பீட்டு முறைகள், முறையான கட்டட நிர்மாண திட்டமின்மை போன்ற பல்வேறு காரணங்களினால் இயலாமையுள்ள பிள்ளைகளை நாங்கள் முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ ஒதுக்கி வைக்க வேண்டுமா என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
உட்படுத்தல் கல்வி என்பது விசேட கல்வி என்பதற்கான மற்றுமொரு பெயரல்ல.
பிள்ளைகளின் கற்றலுக்கு தடை ஏற்படுத்தும் காரணிகளை இனங்காணல், அவற்றை இயன்றளவு குறைத்தல்.
பிள்ளைகளது பங்கேற்பையும் கற்றலையும் உயர் மட்டமாக்கல் வளங்களைப் பயனுறுதி மிக்கதாக உபயோகித்தல் ஆகிய அனைத்து விடயங்களையும் உறுதி செய்யும் ஒரு கல்வி எண்ணக்கருவாகும்.
இயலாமைகள், திறமைகள் என்ற அடிப்படையில் பிள்ளைகளிடையே பரஸ்பரம் காணப்படும். தனியாள் வேறுபாடுகளுக்கு பொருத்தமான வகையில் பாடசாலை கட்டமைப்பால் உடன்பாடான துலங்கல்களைக் காட்டும் ஒரு வரிவான திட்டமெனவும் உட்படுத்தல் கல்வியை பகுப்பாய்வு செய்யலாம்.
உட்படுத்தல் (Inclusive) என்றால் என்ன?
சகல மாணவர்களதும், அவர்களது சுய இருப்பிடத்தில் தரமான கல்வியை பெறுவதற்கான உரிமையை ஏற்றுக் கொள்ளல்
•சகல மாணவர்களதும் கற்றல் மற்றும் பங்குபற்றுமைக்கான தடைகளை குறைத்தல்
இருப்பிடங்களில் உள்ள சகல மாணவர்களதும் பல்வகைத் தன்மைனக்கு துலங்குவதற்கு பாடசாலைகளின் பண்பாடு. கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை மீள் கட்டமைத்தல்.
•அவர்களது சுய பாடசாலை விருத்தியில் பங்கு பெறுவதற்குரியவர்களாகவும் சமமாகவும் சகல மாணவர்களையும் ஆசிரியர்களையும் பெறுமதியளித்தல்
Post a Comment