Post Traumatic Stress Disoder in tamil

வாழ்க்கையில் திடீர் என ஏற்படக்கூடிய விபரீதமான, கொடூரமான, விபத்துக்கள், அனர்த்தங்கள் ஆகியன அனேக மக்களில் உளப்பாதிப்பை உருவாக்குகின்றன. இதன் விளைவாக ஏற்படும் உள்ககோளாறுகள் PTSD எனப்படும். Ex அண்மையில் ஏற்பட்ட சுனாமி.

சுனாமி, பூகம்பம், சூராவளி போன்ற இயற்கை அனர்த்தங்கள் மற்றும் யுத்தம், கலவரம், விபத்து, சித்திரவதை போன்ற செயற்கை நிகழ்வுகள் என்பவுைம் உளவடுவை ஏற்படுத்தக் கூடியது. இவ்வாறான சம்பவங்களுக்கு முகம் கொடுக்கும் மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் PTSD க்கு ஆளாகின்றனர்.


ஒருவர் PTSD க்கு உட்பட்டுள்ளாரா என்பதை அவரின் உடலிலும், உள்ளத்திலும் வெளிப்படும் குணங்குறிகளைக் கொண்டு இளங்கண்டு கொள்ளலாம். ஆரம்ப நிலையில் அதிர்ச்சியினால் உள்ளமும், உடலும் அசந்த செயலற்று காணப்படுவதுடன் மயக்க நிலையும் ஏற்படலாம், அல்லது நிகழ்ந்தவற்றை முற்றாக மறுத்தல் அதன் தாக்கத்தை மிகக் குறைத்துக் கணித்தல் எனப்படும் 'உண்மை மறுத்தல்' ஏற்படலாம். அதிர்ச்சியும், உண்மை மறத்தலும் உளவியல் தற்காப்பு பொறி முறைகள் எனப்படும். இதில் பின்வரும் அறிகுறிகள் காணப்படும்.

  • அதிர்ச்சி, கடுமையான தொடர்ச்சியான பதகளிப்பு
  • உணர்ச்சி மறுத்து போன நிலை 
  • . நிகழ்ந்த சம்பவத்தின் ஒரு முக்கிய பகுதியை முற்றாக மறந்து போதல் (Dissociative Amnesia)
  • சம்பவம் நடந்த வருடாந்த திகதிகள், அனுஷ்டானங்கள் என்பவற்றில் உணர்வுகள் மீண்டும் தூண்டப்படலாம்.
  • ஆத்திரம், கோபம், வெறுப்பு, சிடுசிடுப்பு பேன்றவை ஏற்படல்.
  • நடந்து போன நிகழ்வுகளை எவ்வளவு முயன்ற போதும் மறக்க முடியாமை.
  • அதீத விழிப்புணர்வு, சிறு சத்தத்துக்குக் கூட பயப்பட்டு திடுக்கிடுதல்
  • ஏக்கம்,அச்சம்,பாதுகாப்பற்ற உணர்வு
  • வாழ்க்கையில் விருப்பமும். ஆர்வமும் அற்ற தன்மை. கடும் உளச்சோர்வு தற்கொலைக்கு இட்டுச் செல்லும்.
  •  பயங்கர கனவுகள் வெளிப்படல்


பாதிக்கப்பட்டவரின் LOSH எழுச்சி சீர்குலைவதால் சமூக பிரச்சினைகளை அவதாளிக்கலாம். உறவுகளில் பின்வரும்

  • போதைப்பொருள் பாவனை
  • சமூகத்தில் இருந்து ஒதுங்கல்.
  • அவமான உணர்வு
  • நிகழ்வுகள் போன்ற விடயங்களில் ஈடுபடாது தவிர்ந்திருத்தல்
  • கோபம், பகைமை, முரண்படுதல், தர்க்கித்தல் ஆகிய உறவுச் சிக்கல்களை ஏற்படுத்தும் நடத்தைகளை கொண்டிருத்தல்


மேற்கூறிய விடயங்கள் அவர்களின் செய்களில் தாக்கத்தை ஏற்படுத்துபவ ஆகும். கீழ்வரும் பிரச்சினைகள் உடல் ரீதியாக ஏற்படுகின்றது.

  • நித்திரையின்மை அல்லது அளவுக்கு அதிகமான நித்திரை
  • உயர் குருதியமுக்கம், நெஞ்சுவலி, சீரற்ற இதயத்துடிப்பு
  • களைப்பு, சோம்பல், சக்தி குறைதல் ஆகியன
  • மூச்சுத் திணறல்
  • கைகால் விறைப்பு, மூட்டுவலி
  • பசியின்மை, குடற்புண், எரிவு


பிள்ளைகளிலும் அவர்களின் வயதுக்கு ஏற்ப சில குணங்குறிகளை வெளிப்படுத்தலாம். சிறுவர்களில் ஏற்படும் பாதிப்புக்கள் உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் கட்டிளமைப்பருவத்தில் இவை தூண்டப்பட்டு உளநோய், நடத்தைச் சீர்கேடு என்பன ஏற்படலாம். பின்வரும் குணங்குறிகளை பிள்ளைகளிடம் அவதானிக்கலாம்.

  • எப்போதும் பெற்றோரை நிழல்போல் பின்தொடரல் அதாவது மற்றவர்களில் முழுமையாக தங்கியிருத்தல்
  • பாடசாலைக்குச் செல்ல மறுத்தல், கல்வியில் ஆர்வமற்ற தன்மை
  • புதிதாக வன்முறை நடத்தை, ஆக்கிரமிப்பு போன்றவை தோன்றல்.
  • நடந்த பாதிப்பை மறைக்க கதையை திசை திருப்பல், சிரிப்பூட்டல் போன்றவற்றில் ஈடுபடல்
  • உணர்ச்சிகளை வரைபடங்கள், கதை, விளையாட்டு போன்றவற்றில் வெளிக்காட்டல்


பிள்ளைகளில் ஏற்படும் இப்பாதிப்புக்களுக்கு பின்வரும் முறைகளில் அளிக்கப்படுகின்றது. 

  • அரசு, பொது அமைப்பு போன்றவற்றின் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியை ஏற்படுத்திக் கொடுத்தல்
  • பாதிக்கப்பட்டவர்களின் புணர்வாழ்க்கு உதவி செய்து அவர்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தல்
  • பொழுது போக்கு, விளையாட்டு போன்றவற்றை ஏற்படுத்தி சமூக தொடர்பை கட்டியெழுப்பல்.
  • பாடசாலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒரு சிறந்த சூழலை ஏற்படுத்துதல்.
  • சிறுபிள்ளைகளுடன் உரையாடும் போது அவர்களை அரவணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும்.
  • ஆன்மீக பயிற்சியில் ஈடுபடச்செய்தல்





Post a Comment

Previous Post Next Post