ஆலோசனைக் கொள்கைகள் மனித நடத்தை மாற்றத்தை விளக்கும் உளவியல் கொள்கையுடன் சம்பந்தப்பட்டவை. ஆலோசனைக் கொள்கைகளை அவற்றின் ஆலோசனை அணுகுமுறையின் அடிப்படையில் Patterson என்பவர் அவற்றின் மையவிடயத்தை கருத்தில் கொண்டு புலக்காட்சி, இருப்பியல், பகுப்பாய்வு, நியாயித்தல், நடத்தை ஆகியன சார்ந்த 5 குழுக்களாக வகுத்துள்ளார். அவை.
1. புலக்காட்சி நிகழ்வுக் கொள்கை அணுகுமுறை Perceptual phenomenological Approach
2. இருப்பியல் கொள்கை அணுகுமுறை Existential Approach
3.உளப்பகுப்பாய்வுக் கொள்கை அணுகுமுறை Psycho Analytic Approach
4.நடத்தை மாற்றக் கொள்கை அணுகுமுறை Behavioral Approach
5.நியாயித்தல் எழுச்சிக் கொள்கை அணுகுமுறை Rational Emotive Approach
ஆலோசகர் தான் அறிந்த ஆலோசனை முறைகளின் அடிப்படையில் ஆலோசனை நாடியின் பிரச்சினைக்கு ஏற்ற ஆலோசனை அணுகுமுறைகளை தெரிவுசெய்வார். ஆலோசகர் உளவியல் ஆலோசனைக் கொள்கைகளைக் கற்று அவற்றின் அணுகுமுறை நுட்பங்களில் பயிற்றப்பட்ட பின்னரே ஆலோசனைச் சேவையில் ஈடுபடவேண்டும்.
புலக்காட்சி நிகழ்வு ஆலோசனைக் கொள்கை
Abraham Maslow. Carl Rogers ஆகியோர் இக்கொள்கையின் முன்னோடிகளாவர். புலக்காட்சி நிகழ்வுக் கொள்கையானது ஒவ்வொருவரும் தனது அனுபவங்களின் அடிப்படையில் தாழ் வாழும் உலகைப்பற்றிய விளக்கத்தைப் பெறுகின்றனர் என்பதை வலியுறுத்துகின்றது. 93 குறிப்பிட்ட நிகழ்ச்சியைப்பற்றி ஒவ்வொருவரும் அனுபவத்துக்கேற்ப வேறுபட்ட புலக்காட்சிகளைப் பெறுகின்றனர்.
புலக்காட்சியை பிழையான, குழப்பமான முறையில் பெறும் போது உளத்தாக்கத்துக்கும். பிரச்சினைகளுக்கும் உள்ளாகின்றனர். இப்பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்காக புலக்காட்சியை மாற்றியமைப்பதற்கு ஆலோசனை உதவி வழங்கப்படுகின்றது. இதற்கு பின்வரும் ஆலோசனை முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.
தனியாள் மைய ஆலோசனை முறை:
இது ஆலோசனை நாடியை மையமாக கொண்ட அலோசனை முறையாகும். இம்முறையில் பிரச்சினையை விட ஆளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. மாணவர்களின் சாதாரண பிரச்சினைக்கு இம்முறை உகந்தது. ஒருவரின் ஆளுமை அவரின் உயிரியல் தன்மை, புலக்காட்சிக் களம், சுய எண்ணக் கரு ஆகிய 3 விடயங்களிலும் தங்கியுள்ளது.
புலக்காட்சி உலகத்திற்கும் யதார்த்தமான உலகத்திற்கும் இடையில் ஒரு சமநிலை பேணப்படல் வேண்டும். அதே போல் ஒருவரன் சுய எண்ணக்கருவுக்கும், அவர் கொண்டிருக்கும் இலட்சியத்துகரும் இடையில் சமநிலை பேணப்படல் வேண்டும் என்பது Rogers யின் கருத்தாகும். சுய எண்ணக் கரு என்பது ஒருவர் தன்னைப்பற்றிக் கொண்டுள்ள உருவமைப்பும், தன்னைப்பற்றிய மதிப்பீடும் ஆகும்.
சுயதிறனில் நிறைவுத்தேவை ஒருவரில் ஊக்க சக்தியாகத் தொழிற்படுகின்றது. சுயதிறனில் நிறைவுத் தேவையானது ஒருவர் தன்னுள் மறைநிலையில் உள்ள சகல ஆற்றல்களையும் உச்சகட்டத்துக்கு விருத்தி செய்யத் தொழிற்படும் உந்தல் ஆகும். ஒருவருக்கு தன் சுய ஏண்ணக்கருவுக்கு ஒவ்வாத அனுபவங்கள் ஏற்படின் அமைதியின்மை, தடுமாற்றம், தகைப்பு, பதகளிப்பு போன்ற உளக்கிளர்ச்சிகள் தோன்றும்.இவருடைய எதிர்பார்ப்பக்கு அமைய அனுபவங்கள் ஏற்படாவிடின் உளநெருக்கடிக்கும். பிரச்சினைகளக்கும், பொருத்தப்பாட்டின்மைக்கும் உட்படுகின்றார். எனவே இதற்கான காரணம் ஒருவர் தனது அனுபவங்களைப் பிழையாகப் புலக்காட்சி காண்பதே காரணமாகும். ஆலோசனை வளங்குபவர் ஆலோசனை நாடிக்கு தனது சுய எண்ணக்கரு, புலக்காட்சி ஆகியவற்றை மாற்றி திருத்தமாக அமைத்து பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவுவார். புலக்காட்சிக்கும் மனவெழுச்சிக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே மனவெழுச்சி சார்பாகப் பிரச்சினைகள் ஆராயப்பட்டு தீர்வு காண்பதே நிரந்தரமானதாகும். ஒருவர் மற்றவர்களுடைய மனவெழுச்சிகளைப் புரிந்து கொண்டு அவர்களின் புலக்காட்சி மண்டலத்தை விளங்கிக்கொள்ளும் போது பிரச்சினைகள் இயல்பாகத் தீர்ந்துவிடும்.
குழலில் என்ன நடக்கிறது என்பதை விட அந்த நிகழ்ச்சிக்கு அவர் கொள்ளும் விளக்கமே பிரதானமானது ஆகும். எனவே நிகழ்ச்சிகளைப் பற்றி ஒருவர் கொள்ளும் புலக்காட்சியே முக்கியமானது என்பதை இக்கொள்கை வலியுறுத்துகின்றது. ஆலோசகர் பொறுமை, ஈடுபாடு, புரிந்துணர்வு, ஒத்துளைப்பு ஆகியவற்றுடன் ஆலோசனை நாடி சொல்வதை உன்னிப்பாக செவி மடுத்தல் முக்கியமாகும். அனுதாபத்துடன் செவிசாய்க்கும் போது ஒருவரின் உளச்சுமை நீங்கித் துன்பங்கள் பெருமளவு குறைகின்றது. இம்முறையில் செவி சாய்த்தல் ஒரு முழுமையான சிகிச்சை முறையாக அமைகின்றது.
ஆலோசனை நாடியிடம் ஆலோசகர் செவிமடுக்கும் போது 'பின்பு என்ன நடந்தது, 'அப்படியா' போன்ற சொற் தொடர்களை பயன்படுத்தி அவரின் உள்ளார்ந்த எண்ணங்களை ஊக்குவிப்பார். இதன் வெளிக்கொண்டுவரப்படும். உன்மையான முலம் பிரச்சினைக்குரிய பின் இதன் காரணங்கள் சில ஆலோசனைகள் ஆலோசகரால் முன்வைக்கப்படும். பின் இருவரும் சிறிது நாட்களுக்குப் பின் சந்தித்து அதன் முன்னேற்றங்கள் பற்றி கலந்துரையாடுவர்.
கெஸ்டால்ட் பரிகார முறை:
இம்முறையில் சிந்தனை சார்ந்த காரணங்களை விட உணர்ச்சிகளுக்கு இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இங்கு உளத்தாக்கத்துக்குரிய காரணிகளை ஆராய்ந்து கொண்டிருக்காமல் அவற்றை உணர்வதன் மூலம் பிரச்சினை தீர்க்கப்படுகின்றது. இங்கு கடந்த, எதிர்கால நிகழ்வுகள் கருத்தில் கொள்ளப்படாது நிகழ்கால சம்பவங்களே கருத்தில் கொள்ளப்படும். இம்முறையில் பிரச்சினையைப் பற்றிய விழிப்பணர்வு பெறுவதால் ஒருவர் தனது பிரச்சினையைத் தானே தீர்த்துக்கொள்ளலாம். உள்ளத்தில் மறைக்கப்பட்டுள்ளவற்றை உணர்வு நிலைக்கு வெளிப்படுத்தி விழிப்புணர்வு பெற்று பொறுப்புணர்வு பெறுவதால் உளநலன் விருத்திக்கும் உளத்தாக்கங்களில் இருந்து பரிகாரம் பெறுவதற்கும் பயனுள்ளது. இந்த ஆக்கச் சக்தி ஒவ்வொருவரிலும் உண்டு என்பதால் ஒவ்வொருவரும் தானே தனது பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளலாம். இதணை ஊக்குவிப்பதே ஆலோசகரின் பணியாகும். இம்முறையின் முன்னோடி ஜேர்மனியைச் சேர்ந்த பேர்ஸ் என்பவராவார். அவரின் சில உளப்பரிகார முறை வருமாறு.
மிகைப்படுத்தல்: ஆலோசகர் ஆலோசனை நாடியின் சில வார்த்தைகளையும், செயல்களையும் மிகைப்படுத்தி சொல்வார். அதனால் ஆலோசனை நாடி விழிப்புணர்வு பெறலாம். இதனால் அவர் உளப்பரிகாரம் பெற வழி ஏற்படுகின்றது.
கனவு : ஒருவரின் கனவு அவனைப்பற்றிய சில செய்திகளை தாங்கி நிற்கின்றது. Ex. பல வேளைகளில் வருகின்ற ஒரே விதமான கனவு அவரின் முடிவடையாத, முடிக்க வேண்டிய காரியங்களை விழிப்புணர்வுக்கு கொண்டு வருகின்றது.
வெறும் கதிரை: இம்முறையில் ஆலோசனை நாடியின் அதிகார ஆளுமைக் கூறும் அடங்கிப் போகும் ஆளுமைக் கூறும் மாறி மாறி அவரை ஆட்டிப்படைக்கின்றன என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆலோசனை நாடி அமர்ந்திருக்கும் கதிரைக்கு முன் ஒரு வெறும் கதிரை போடப்பட்டிருக்கும். அவ்வெறும் கதிரையில் அவரின் ஆளுமைக் கூறுகளில் ஒன்று அமர்ந்திருப்பதாக கற்பனை செய்து கொண்டு, தன் உணர்ச்சிகளை பேச்சு மூலமும், சைகை மூலமும் வெளிப்படுத்துவார் இதன் மூலம் அவற்றைப் பற்றிய விழிப்புணர்வு பெற்று உளப்பரிகாரம் பெறுவார்.
எதிர்த்தல்: இம்முறையில் ஆலோசனை நாடியின் பொருத்தமற்ற செயல்களை ஆலோசகர் உறுதியாக சுட்டிக்காட்டுவார். இதனால் தனது செயல்களையும், உணர்வுகளையும் புரிந்து கொண்டு மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வார்.
இருப்பியல் கொள்கை ஆலோசனை அணுகுமுறை
இது ஒரு வாழ்வியல் தத்துவமாகும். மனிதன் மனச்சாட்சி உள்ளவன், சுதந்திரமாக வாழக் கூடியவன் இத்தன்மைகள் மனிதனை மிருகங்களில் இருந்து வேறுபடுத்துகின்றது. இக்கோட்பாட்டில் ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் இருந்து சிந்தனை, உணர்ச்சி, செயல் ஆகிய எல்லாவற்றிலும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. சூழ்நிலை, Guidance and Counseling என்பது தெளிவாக பெற்றவர்கள் கல்வி. அனுபவங்கள் ஆகியவற்றுக்கேற்ப உருவாகும் சுய விழிப்புணர்வு அவனை தன்னைத்தானே உணர்வதற்கு இட்டுச்செல்கின்றது. இக்கொள்கையின் கருத்துக்கள் வருமாறு.
1. மனிதன் சுதந்திரமாகச் செயற்படும் தன்மையும் பொறுப்பாற்றலும் உடையவன்.
2. அவன் வாழ்க்கையின் அர்த்தத்தை தேடுகின்றான். ( மதம் சம்பந்தமாக அல்லது வேறு விடயங்கள்...)
3.மனிதன் சுய விழிப்பணர்வு உடையவன் சுய விழிப்புணர்வை அடையும் ஆற்றல் பெற்றவன்.
4. மனிதன் பிறரோடு உறவு கொண்ட போதிலும் தனது தனித்துவத்தன்மையை விரும்புகின்றான்.
5.பதகளிப்பு இல்லாத மனிதர் இல்லை. சாதாரண பதகளிப்பு ஒடுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. அது நலமாற்றத்தையும், விருத்தியையும் ஏற்படுத்துகின்றது.
6.மனிதன் இறப்பைப்பற்றி விழிப்புணர்வு கொண்டுள்ளான். இறப்பைப்பற்றிய பயமும், வாழ்வைப்பற்றிய பயமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையன.
இக்கொள்கையின் அடிப்படையில் மனிதனுக்கு 3 பரிமானங்கள் உண்டு. அது உயிரியல் உலகம், உளவியல் உலகம், ஆன்மீக உலகம் ஆகியவற்றில் வாழ்ந்து வருகின்றான். மனிதன் தன்னைத்தானே விளங்குவதற்கு இம்மூன்று உலகங்களையும் ஒன்றினைந்து புலக்காட்சி காணவேண்டும்.
நியாயித்தல் எழுச்சிப் பரிகார முறை:
இம்முறை RET எனப்படும். அதாவது R-Rational (நியாயித்தல்). E-Emotive (எழுச்சிசார்). T-Therapy (பரிகாரம்). இது மாணவர்களுக்கு பொருத்தமானது. ஒருவர் தனக்கு ஏற்படும் துன்பச் செயல்களுக்குத் தர்க்க ரீதியான அறிவுசார் முறையில் நியாயங்கண்டு பரிகாரம் பெற இவ்வாலோசனை உதவுகின்றது. Ex பரீட்சைக்கு முன் மாணவர்களுக்குப் பதட்டம். பதகளிப்பு, பரீட்சையில் சித்தியடையமாட்டேளோ என்ற பயம், என்பன ஏற்படலாம். இதற்கு காரணம் தன்னைத்தானே இழிவுபடுத்தும் தன்னம்பிக்கையற்ற சிந்தனையாகும். இதற்கு ஆலோசகர் அம்மாணவனின் சிந்தனைக் கோலத்தை மாற்றியமைக்க தூண்டலாம் அது
- நான் பதட்டப்படத் தேவையில்லை
- பரீட்சை எனக்கு மட்டுமா கடினம் எல்லோருக்கும் அப்படித்தான்
- மற்ற மாணவர்களிலம் பார்க்க நான் பரீட்சைக்கு ஆயத்தப்படுத்தியுள்ளேன்
- நான் நிச்சயமாக சித்தியடைவேள்
திட்டமிடப்பட்ட நடத்தைத் திருத்தம் : இன்னுட்பம் இன்று அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது. கற்றல் சார்பாகவும், வேறு பிரச்சினைகள் சார்பாகவும் எழும் நடத்தைகளை இம்முறையினால் சீரமைக்கலாம். இதில் பின்வரும் நுட்பங்கள் பயன்படுத்தப்படும்.
படிப்படியாக நுண்ணுணர்வை அகற்றல் (Systematic Desensitization)
பொருத்தமற்ற தூண்டிகளால் ஏற்படும் பொருத்தமற்ற நுண்ணுணர்வுத் துலங்கல்களை படிப்படியாக திட்டமிட்டு அகற்றுவதற்கு இந்நுட்பம் பயன்படுத்தப்படும். இது
- ஆழமான தசைநார்த் தளர்ச்சிப் பயிற்சி
- பதகளிப்பை ஏற்படுத்தும் தூண்டியை இளங்கண்டு அதனை படிமுறை ஏறுவரிசை ஒழுங்கில நிரற்படுத்தல்
- தளர்ச்சிப் பயிற்சியைப் பதகளிப்பை ஏற்படுத்தும் தூண்டிகளின் ஏறுவரிசைப் படிகளுடன் சோடியமைத்தல்
- அறிகை ஒத்திகை
இம்முறையின் படிமுறை பிவ்வருமாறு அமையும்
- அலோசகர், ஆலோசனை நாடியில் நுண்ணுணர்வை ஏற்படுத்தும் காரணிகளை கண்டறிவார் (அவரிடமும் கேட்கலாம்)
- இவ்நுட்ப முறையை ஆலோசகருக்கு தெரியப்படுத்தி அவரின் ஒத்துளைப்பை பெறுதல்
- இருவரும் கலந்துரையாடி அவரது உள்ளத்தில் ஏற்படும் பதகளிப்புத் தன்மையை அறிந்து பதகளிப்பை ஏற்படுத்தும் தூண்டியை 0 100 வரை ஒழுங்கமைப்பார்
- இவை குறைந்த பதகளிப்பை ஏற்படுத்தும் காரணிகளில் இருந்து கூடியவையாக நிரல்படுத்தப்படும். இவை யதார்த்தமான சந்தர்ப்பங்களாக அமைய வேண்டும்
ஆலோசனையின் போது ஆலோசனை நாடி ஏற்ற ஒரு ஆசனத்தில் தளர்ச்சியான நிலையின் அமர்ந்து கண்களை மூடி மெதுவாக ஆழமாக மூச்சுவிடம்படி அலோசகர் அவரைக் கேட்டுக்கொண்டு படிப்படியாக தளர்ச்சி அப்பியாசங்களில் ஈடுபடுத்துவார்.
நேர்மீள வலியறுத்தல் நுட்பம்
இதில் ஒருவரின் நடத்தையை விரம்பியவாறு உருவாக்கலாம் அல்லது மாற்றியமைக்கலாம். இது மாணவர்களின் கற்றல்சார் நடத்தையை மேம்படுத்த ஆசிரியர்களால் பெருமளவில் பயன்படத்தப்படும் நுட்பமாகும். ஒரு மாணவன் பாடச்செயற்பாட்டில் சிரத்தை எடுக்காமல் எப்பொதும் தாமதமாக செயற்படும் நடத்தையை மாற்ற அடையாள பொருளாதார (Token Economic) முறையைப் பயன்படுத்தலாம்.
மாணவர் பாடவேலைகளை நேரத்துடன் செய்து முடிக்கும் போது அவனுக்கு ஒரு அடையாளக்கட்டை வளங்கப்படுகின்றது. இவ்வடத்தை நிகழும் போது எல்லாம் அடையாளக்கட்டை வளங்கப்படுகின்றது. இவ்வாறு சில கட்டைகளை சேகரித்ததும் அடையாளக் கட்டையின் எண்ணிக்கைக்கு ஏற்ப சில பரிசுகள் வளங்கப்படுகின்றன. இதனால் அம்மாணவனின் கல்விச் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படும். இம்முறையினால் விரும்பத்தகுந்த, விரும்பத்தகாத நடத்தைகளையும் மாற்றியமைக்கலாம்.
வெறுப்பின் மூலம் நிபந்தனைப்படுத்தல்
தண்டனை, உடலில் வலியை ஏற்படுத்துதல் போன்ற துன்பத்தை விளைவிக்கும் வெறுக்கப்படும் தூண்டிகளைப் மாற்றியமைக்கப்படுகின்றன. Ex. நடத்தைக் பயன்படுத்தி கோலங்கள் குடிப்பழக்கத்தை நீக்குவதற்கு -மதுபானத்தோடு கடுமையான வாந்தியை ஏற்படுத்தும் மருந்து கலந்து கொடுக்கப்படுகின்றது. அதனை அருந்தும் போது வாத்தி ஏற்படுவதால் மதுபானத்தில் வெறுப்ப ஏற்படுகின்றது. இவ்வாறு சில தடவைகள் ஏற்பட்ட பின் மதுபானத்தை காணும் போதெல்லாம் வெறுப்பு ஏற்படுவதால் அப்பழக்கத்தில் இருந்து விடுபடுகின்றார். அதன் பின்பு தூய மதுசாரத்தை காணும் போது கூட அதனை வெறுப்பார்.
படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை நீக்க படுக்கை சிறுநீரால் நனைந்ததும் மின்சார மணியை ஒலிக்கச் செய்ய வேண்டும். இதனால் நித்திரை குழம்புவதனால் மணியொசையை அவன் வெறுக்கின்றான். சில நாட்களின் பின் தனது சிறுநீர்ப்பை நிறைந்ததும் தானாகவே துயில் எழுந்து கொள்கின்றான். மலசல கூடத்துக்குச் செல்லப்பழகிக்
பேர்மக் மீளவலியுறுத்தல் கோட்பாடு
இக்கோட்பாடு கற்றல் செயல்பாட்டை மேம்படுத்த அல்லது திருத்தியமைக்க பயன்படுத்தப்படலாம். முக்கியமாக மிகக் குறைவான ஊக்கமுள்ள மாணவர்களின் கற்றலை ஊக்குவிக்க பயன்படுத்தப்படுகின்றது. Ex வீட்டு வேலையை நேரத்துக்கு முடித்தால்தான் விளையாட போகலாம் என பெற்றோர் கூறல்
சுயகட்டுப்பாட்டு ஆய்வு அணுகுமுறை
ஒருவர் தன் சிந்தனை, மனவெளுச்சி, செயல்சார் நடத்தைகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு வழிகாட்டுவதே இம்முறையின் முக்கிய நோக்கம் இதில் 3 அச்சங்கள் காணப்படுகின்றன.
- ஆலோசனை நாடி சூழலில் ஏற்படும் சம்பவங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளல்
- குழலை தனக்குச் சாதகமான முறையில் வயப்படுத்தித் தன்னைத்தான் விருத்தி Grügy Carebone
- பொருத்தப்பாடற்ற பிரச்சினைக்குரிய நடத்தைக் கோலங்களை மாற்றி புதிய நடத்தைக் கோலங்களை பிரதியீடு செய்தல்
போலச் செய்தல் முறை (Modeling)
பிள்ளைகள் பெரும்பாலும் ஒருவரைப் பார்த்து அவரைப் போல பாவனை செய்து கற்றுக் கொள்கின்றன. ஆகவே போலச் செய்தல் மூலம் நடத்தை மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் நன்னடத்தை உடைய பெற்றோர், ஆசிரியர், நன்பர்கள் ஆகியோர் எடுத்துக்காட்டாக அவருக்கு முன்மாதிரியாக செயற்படுதல் அவசியமாகின்றது. இம்முறையில் குறியீட்டு மாதிரிகளாக ஒலி நாடாக்கள், படங்கள், சிறந்த நூல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
நடத்தைக் கொள்கை அணுகுமுறை
நடத்தைகள் யாவும் சுற்றலின் விளைவாக ஏற்படுகின்றது. கற்றல் தூண்டி, துலங்கள் இணைப்பினால் ஏற்படுகின்றது. ஒருவரின் நடத்தையை கற்றல் மூலம் விரும்பியவாறு உருவாக்கலாம் என இக்கொள்கை கூறுகின்றது. மனிதனின் சூழலே முற்றாக அவனது நடத்தைக்கு காரணமாக அமைகின்றது என இக்கொள்கை விளக்குகின்றது.
Post a Comment