சமூகம், புலன்காட்சி என்பது நம்மைச் சுற்றியுள்ள மக்களைப் பற்றி புரிந்து கொள்ளும் செயற்பாங்காகும். நம்முடைய அன்றாட வாழ்வில் இது மிக அவசியமாகும். மற்றவர்களை நாம் புரிந்து கொள்ளும் போது அவர்களுடைய குணங்களையும், நோக்கங்களையம் புரிந்து கொள்கின்றோம். இத்தகைய சமூகப்புலன்காட்சி நமது நடத்தையைப் பாதிக்கின்றது. எனவே சமுகப்புலன் காட்சியைப் பற்றி அறிந்து கொள்ளல் சமூக உளவியல் வல்லுணர்களுக்கு மிக அவசியமாகும்.
நாம் மற்றவர்களுடன் பழகும் பொழுது அவர்களைப் பற்றி உளப்பதிவுகளை (Impression) ஏற்படுத்திக் கொள்கின்றோம். உதாரணமாக இரண்டு புதிய மாணவர்கள் ஒரு கல்லாரி விடுதியில் ஒரே அறையில் தங்க நேரிடும் பொழுது முதல் முறையாக சந்தித்துக் கொள்கிறார்கள். அவர்கள் இருவரும் ஒரு ஆண்டு முழுவதும் பலமணி நேரங்கள் ஒன்றாக கழிக்க வேண்டிய நிலை ஏற்படும் பொழுது ஒருவருடைய ஆளுமை மற்றவரை பாதிக்கலாம். இருவரும் சந்தித்த முதல் 5 நிமிடங்களில் ஒருவரைப்பற்றி மற்றவர் கருத்துக்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர். மற்றவர் எப்படிப் பழகக் கூடியவர்? ஏந்த வகையான இசையை விரும்புபவர்? இரவு காலங்களில் எவ்வளவு நேரம் கண் விழித்திருப்பார்? போன்றவற்றை தெரிந்து கொள்வதில் முனைகின்றனர். ஒருவரைப் பற்றி மற்றொருவர் எந்த அளவுக்கு புரிந்து கொள்ள முடியமோ அந்த அளவுக்கு புரிந்து கொள்கின்றனர்.
நாம் மற்றவர்களைப் பற்றி வெவ்வெறு விதங்களில் புரிந்து கொள்கின்றோம். ஒருவரின் புகைப்படத்தை பார்த்தோ அல்லது ஒருவருடைய பெயரைக் கொண்டோ அல்லது ஒருவர் தெருவில் நம்மைக் கடந்து செல்வதை கொண்டு நாம் அவர்களைப் பற்றிய கருத்தை ஏற்படுத்திக் கொள்கின்றோம். இருவர் ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் சந்திக்கும் போது ஒருவரைப்பற்றி மற்றவர் கருத்துக் கொள்கிறார். பின்னர் மேலும் மேலும் சந்திக்கும் போது ஒருவரைப் பற்றி மற்றவர் கருத்துக் கொள்கின்றனர். இதுவே அவர்கள் ஒருவரையொருவர் எந்த அளவு விரும்புகிறார்கள், எந்த அளவு ஒற்றுமையாக நடந்துகொள்கிறார்கள் என்பதை தீர்மானிக்கும்.
நாம் 2 வழிகளில் மற்றவர்களின் நடத்தையைப் புரிந்து கொள்கின்றோம். முதலாவதாக முகபாவங்கள், கண்தொடர்பு, உருவ அமைப்பு, தொடுதல் போன்ற மொழி அல்லாத குறிப்புக்கள் மூலமாக நாம் மற்றவரகளின் நடத்தையை புரிந்து கொள்கின்றோம். இத்தகைய மொழி அல்லாத குறிப்புகள் மனிதன் மறைக்க விரும்புகின்ற உணர்ச்சிகளையும். மனப்பாங்குகளையும் வெளிப்படுத்துகின்றன். ஆனால் மனிதர்கள் மற்றவர்களிடம் தன்னைப் பற்றிய நல்ல கருத்தை ஏற்படுத்துவதற்காக இத்தகைய மொழி அல்லாத குறிப்புகளை கட்டுப்படுத்திக் கொள்கின்றனர், நேர்முகை பரீட்சைக்கு செல்லும் போது இத்தகைய கட்டுப்பாட்டை செய்கின்றனர்.
இரண்டாவதாக மற்றவர்களுடைய நடத்தைக்கான காரணத்தைப்பற்றிய அறிவானது கற்பித்துக்கூறுதல் என்ற ஒரு சிக்கலான செயற்பாட்டின் மூலமாக பெறப்படுகின்றது. இத்தகைய சமூக புலன்காட்சி பகுதியில் நாம் மற்றவர்களுடைய நிலையான குணங்கள். நோக்கங்கள், உட்கருத்துக்கள் ஆகியவற்றை அவர்களுடைய வெளிப்படையான செயல்களை முறையாக உற்று நோக்குதலின் மூலமாக அறிந்து கொள்கின்றோம். மொழியல்லாத தொடர்பும் (Non verbal communication), கற்பித்துக் கூறுதல் (Attribution) என்ற செயற்பாங்கும் மற்றவர்களைப் பற்றி நமக்கு வெவ்வேறு தகவல்களை அளிப்பதால் அவற்றை தனித்தனியாக பகுத்தாய்வது மிகவும் அவசியமாகும்.
Non Verbal Communication ( மொழி அல்லாத தொடர்பு )
மனித நடத்தையானது மாறுகின்ற மனப்பாங்கு, எளிதில் மறைந்து போகின்ற மனக்கிளர்ச்சிகள்,களைப்பு மற்றும் பல்வெறு போதைப் பொருட்களினால் பல்வேறு சூழ்நிலைகளில் பாதிக்கப்படுகின்றன. உதாரணமாக பல மனிதலர்கள் ஒரு துன்பகரமான மளப்பாங்கை விட மகிழ்ச்சிகரமான மனப்பாங்கில் இருக்கும் போது மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கின்றார்கள். ஒருவர் மகிழ்ச்சியாக உள்ளாரா என்பதை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? பேசும் வார்த்தைகளுடன் இணைந்துள்ள வாய்மொழி அல்லாத குறிப்புகள் மூலமாக நாம் மனப்பாங்கினை அறிந்து கொள்ளலாம். பின்வருவன வாய்மொழி அல்லாத தொடர்புகளாகும்.
அடிப்படை வழிமுறைகள் அல்லாத தொடர்பு.
பல்லாண்டுகளாக செய்யப்பட்ட ஆராய்ச்சி முறைகள்
1. முகபாவங்கள்
2. கண்தொடர்பு
3. உடல் மொழி அல்லது தோற்றம்
4.தொடுதல்
ஆகியவற்றை வாய்மொழி அடையாளப்படுத்தலாம். அல்லாத தொடர்புகளின் அடிப்படை வழிகளாக
Facial Expression ( முக பாவம் )
மனித வளர்ச்சிகளும், மனக்கிளர்ச்சிகளும் மனிதனுடைய முகத்தில் பிரதிபலிக்கின்றன. ரோமன் அரேடர் சிசரோ (Roman Orrator Cicero) என்பவர் முகம் ஆண்மாவின் எதிர்ப்படிவம் எனக்குறிப்பிடுகின்றார். மகிழ்ச்சி. துக்கம், அதிர்ச்சி, பயம், கோபம், அருவருப்பு ஆகிய 6 அடிப்படை மனித உணர்ச்சிகளும் முகத்தில் வெளிப்படுத்தப்படுகின்றன. ஒருவர் கோபத்துடன் பயத்தையும், மகிழ்ச்சியுடன் அதிர்ச்சியையும், கோபத்துடன் அருவருப்பையும் வெளிப்படுத்தலாம். அவற்றின் அழுத்தமும் வேறுபடுகின்றது. முகபாவங்கள் அனைத்தும் உலகளாவிய ஒரே தன்மையைக் கொண்டவை. உலகில் வாழும் அனைத்து மக்களும் ஒரே மாதிரியான மனக்கிளர்ச்சியை மனக்க தூண்டும் சூழ்நிலையில் ஒரே மாதிரியான முகபாவங்களையே வெளிப்படுத்துகின்றனர். எனவே முகத்தின் மொழியை புரிந்து கொள்ள வாய்மொழியை புரிந்து கொள்வது போன்று விளக்கமளிப்பவர் தெவையில்லை.
Eye Contact (கண் தொடர்பு)
கண் தொடர்பு என்பது வெவ்வேறு சமூக ஊடாட்டங்களில் ஏற்படுகின்ற வாய்மொழி அல்லாத தொடர்பின் முக்கியமான ஒரு அம்சமாகும். "என் கண்ணைப் பார்த்துச் சொல்", "கண்ணோடு கண் நோக்கினான்" என்ற வாய்மொழிகள் நாம் கண்பார்வைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை வலியுறுத்துகின்றன. கண்கள் ஆண்மாவின் சன்னல் என்றழைக்கப்படுகின்றன. உரு மனிதனின் மனதில் உள்ள உண்மைகளை வெளிக்கொணர்வது கண்களேயாகும்.
அன்பு கூர்ந்த பார்வை நட்பைக் குறிக்கின்றது. கண் தொடர்பை துண்டித்தல் என்பது நட்பைத் துண்டித்தலின் அறிகுறியாகும். தொடர்ந்து ஒருவரை கூர்ந்து பார்க்கும் பொழுது அது முறைக்கின்ற பார்வை என குறிப்பிடப்படுகின்றது. இது விரோதம், கோபத்தின் அறிகுறியாக கருதப்படுகின்றது. ஒருவர் மற்றொருவரை கோபத்துடன் முறைத்து பார்க்கும் போது மற்றவர் பயந்து நடுங்கும் நிலை ஏற்படுகின்றது. ஆசிரியர்களும், மேலாளர்களும் கண்தொடர்பின் நுட்பத்தைப் பயன்படுத்தி அவர்களுடைய தொழிலில் சிறந் விளங்க முடியும். தன்னுறுதியுன் செயல்படுகின்றவர்கள் கண் தொடர்பை அதிகம் பயன்படுத்துவார்கள்.
Body Language (உடல் மொழி)
நமது மனப்பாங்கு, உணர்ச்சி ஆகியவை உடல் அமைப்பு. நிலை மற்றும் இயக்கம் ஆகியவற்றில் பிரதிபலிக்கின்றன. முகபாவங்களுடன் மேற்கை, மற்றும் உடல் சைகைகள் மூலமாகவும் நாம் சொல்வதை வலியுறுத்திச் சொல்கின்றோம். சில சமயங்களில் இதனை நாம் நம்மை அறியாமலேயை செய்கின்றோம்.
சமூக ஊடாட்டத்தின் போது மக்கள் தங்களுடைய உடல் இயக்கங்களை ஒருங்கினைக்கின்றனர். நாம் பிறர் சொல்வதைக் கேட்கும் போது தலையசைக்கின்றோம். அதே வேகத்தில் நாம் அவர்களுக்கு பதில் சொல்கின்றோம். இது போன்ற ஒருங்கினைந்த செயல்களை மொழி அல்லாத ஒழுங்கு நிகழ்வு எனக்குறிப்பிடுகின்றோம்.
முகத்தை திருப்பிக்கொள்ளுதல், தோளைக் குலுக்குதல் போன்ற உடல் இயக்கங்கள் வெவ்வேறு உணர்ச்சிகளை வெளிக்கொணர்கின்ற எல்லா மனித சமுகத்திலும் வாழ்த்தவும், புறப்படுவதற்கும் வரவேற்கவும் வெவ்வேறு சைகைகள் உள்ளன. பசி, தாகம்,களைப்பு போன்றவற்றை வெளிப்படுத்தவும் சைகைகள் உள்ளன. உதாரணமாக உதட்டின் மேல் விரலை வைத்தால் 'அமைதியாக இரு' எனக் குறிக்கிறது. அதே சமயத்தில் ஆட்காட்டி விரலை மூக்கின் மேல் வைக்கும் போது ஆச்சரியத்தை வெளிப்படுத்துகின்றது.
உடல் மொழி என்பது மற்றவர்களுடைய உதிர்செயல்களை வெளிப்படுத்துகின்றன. சில உடல் இயக்கங்கள் விருப்பத்தையும், விருப்பமின்மையையும் குறிக்கின்றது. உதாரணமாக நாம் ஒருவரிடம் பேசும் போது நாம் சொல்வதற்கெல்லாம் அவர் தலையாட்டினால் அவர் நாம் சொல்வதை ஏற்றுக் கொண்டுள்ளார் என்கின்றோம்.
Touching (தொடுதல்)
ஒருவர் எதிர்ப்பு அல்லாத முறையில் மற்றவரை தொடும் போது நேர்மறை செயல் உண்டாகின்றது. யார் யாரை எந்த முறையில், எந்த சூழலில் தொடுகிறார் என்பதை பொறுத்தே இது தீர்மானிக்கப்படுகின்றது. பாசம், பாலியல், ஆர்வம், பகைமை, மேலோங்குதல் ஆகியவை தொடுதல் மூலமாக தூண்டப்படுகின்றது.
மொழி அல்லாத குறிப்பும் சமூக ஊடாட்டமும்
ஒவ்வொருவரும் எல்லா நேரங்களிலும் முதன் முதலாக மற்றவர்களை சந்திக்கும் போது நல்ல ஒரு கருத்துப்பதிவு ஏற்படுத்த விரும்புகின்றார்கள். இதற்காக சில குழுச்சிகளை கையாள்கின்றார்கள். சிலர் மற்றவர்களை அளவுக்கு மீறி புகழ்ந்து பேசுகின்றார்கள் அல்லது மற்றவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். இவர்கள் தன்னை பற்றி ஒரு நல்ல முற்பதிவை மற்றவர்களிடம் ஏற்படுத்திக் கொள்ள மேலும் இவர்கள் முகபாவம், கண் தொடர்பு, உடல் இயக்கம் ஆகியவற்றையும் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.
Attribution (கற்பித்தல் கூறுகள்)
மக்கள் மற்றவர்களுடைய நடத்தைகளை எவ்வாறு உற்றுநோக்குகிறார்கள் மற்றும் அந்நடத்தைகளுக்கான காரணத்த ஊகித்துக் கொள்கிறார்கள் என்பதைப் பற்றி ஆராய்வோம். மற்றவர்களுடைய நடத்தைகளுக்கான காரணத்தை தனிமனிதன் புரிந்து கொள்ளும் செயற்பாங்கை கற்பித்துக் கூறல் (attribution) என அழைக்கப்படுகின்றது. இது பல வழிகளில் நிகழ்கின்றது.
மற்றவர்களுடைய செயலிலிருந்து அவர்களைப் பற்றி அறிதல்.
மற்றவர்களுடைய நடத்தையைப் பற்றி புரிந்து கொள்ள நாம் உற்று நோக்கும் முறையைப் பயன்படுத்துகின்றோம். மற்றவர்களுடைய நடத்தையானது நமக்கு அதிக ஆதாரங்களை அளிக்கின்றன. Jones, David போன்ற அறிஞர்கள் 3 வகையான செயற்பாடுகளிலேயை ஒரு மனிதன் கவனம் செலுத்துகின்றான் என குறிப்பிடுகின்றனர்.
மற்றவர்களுடைய துண்டுதல் இல்லாமல் தன்னிச்சையாக உண்டாகின்ற செயல்கள். பொது அல்லாத சிறப்பான விளைவுகளை உண்டாக்குகின்ற செயல்கள். சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்களை விட சமூக விருப்பங்கள் குறைவாக உள்ள செயல், மேற் கூறிய செயல்களை மட்டுமே மனிதனுடைய நடத்தையின் உன்மையான காரணங்களை அளிக்கின்றது. உ+ம்: ஒரு அரச ஊழியர் ஒரு வயதான பெரிய மனிதருக்கு உதவும் பொழுது அவருடைய நடத்தை பற்றி எமக்கு எமக்கு அறிந்து கொள்ள முடியாது ஏனெனில் அது அரச ஊழியர்களின் கடமையாகும். ஆனால் அவர் அப்பெரியவருக்கு உதவ மறுக்கும் பொழுது அவருடைய குணமும் மனநிலையும் வெளிப்படுகின்றது.
Post a Comment