ஒரு நகரத்தின் வீதி ஓரத்தில் ஒரு பெண் தனது வயிற்றுப் பசிக்காக பிச்சை எடுக்கிறாள். தினமும் கடை வீதியில் கையேந்தி திரியும் அவள் கடை உரிமையாளர்களிடம் அடிவாங்கி தன் பசியை ஆற்றிக் கொள்கிறாள். இவ்வாறு நாட்களை கழித்து வரும் அவளது வாழ்க்கையில் திடீர் திருப்பமாக ஒரு நாள் அமைந்தது வழக்கம் போலவே வீதி ஓரத்தில் அமர்திருக்கும் அவள் அமைந்திருக்கும் அருகே உள்ள வீட்டில் காதல் வசப்பட்ட இரு தம்பதிகளுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையினால் கணவன் மனைவிக்கு அளித்த ஆடையை தூக்கி ஏறிகின்றாள். அந்த பிச்சை எடுக்கும் பெண்ணுக்கே செய்தது போல கட்ச்சிதமானது. அதனை உடுத்துகிறாள்.
அன்று இரவு நேரங்களில் அப்பிரதேசமே போலீஸ் அதிகாரிகள் நடையும் வாகளங்கள் சத்தமும் இட்டுகொண்டிருக்கிறது காரணம் ஒரு திருடன் வீட்டை கொள்ளை அடித்து தப்பித்து ஓடுகிறான். இனி தப்பிக்க வழி இல்லை என அறிந்த அவன் தன்னிடம் உள்ள பணத்தை அந்த பெண்ணிடம் விட்டு செல்கிறாள்.
இவ்வாறு பணத்தை கைப்பற்றிய அவள் சிறிது நேரம் சிந்தித்து மறுநாள் தனது நிலையை மாற்றி சிறந்த பெண்ணாக உடையிலும் நடத்தையிலும் மாற்றத்தை காட்டினாள் ஆனால் விதி என்னவோ,
இரவு அவள் வீதியில் உறங்கிக் கொண்டிருக்கும் போது அதி வேகமாக வந்த வாகனம் யாரோ ஒரு தாய் மகள் என இருவர் மீது மோதி விட்டு செல்ல மகள் உயிருக்காக துடிக்கிறான் அந்த தாய் தன் மகனின் நினைவில் துடிக்கிறாள்.
எந்த சிந்தனையும் கொள்ளாத இந்த பிச்சை ஏந்தும் பெண் தாயும் மகனும் மருத்துவமனை சேர்த்து அவன் உயிரை காக்க தனக்கு கிடைத்த அனைத்து செல்வத்தையும் செலவு செய்கிறாள்.சல நாட்களில் தாயும் மகனும் நல்ல உடல் ஆரோக்கியம் பெறுகின்றனர் ஆனால் இந்த பெண் தன் நிலையை மறந்து அவள் தனது பழைய நிலைக்கு வீதிக்கே செல்கிறாள்.
ஆம் இப்போதுதான் புரிகிறது அவன் இவ்வாறு வீதியில் கிடப்பதற்கு இப்படியான நிகழ்வே காரணம் என அவள் மகனுக்காக பிராத்தனை செய்கிறாள்.
Post a Comment