மனப்பான்மை என்ற கருதுகோள் சமூக உளவியலில் முக்கியமான ஒன்றாகும். சமூக மனப்பான்மைகள் மனிதனுடைய நடத்தையை திசைதிருப்பவதிலும், வழிநடாத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. பொருத்தமான சமூக மனப்பான்மைகளை அமைத்துக் கொள்வதிலிருந்து ஒருவன் தலைவனாகவோ, தொழிலாழியாகவொ ஆகின்றான். பிறவியிலேயை மேற்கண்டவாறு யாரும் பிறப்பதில்லை மனப்பான்மை பற்றி சில அறிஞர்களின் வரையறைகள் வருமாறு.
G.W. Allport: மனப்பான்மை என்பது அனுபவங்களின் மூலமாக ஒன்று படுத்தப்பட்ட மன மற்றும் நரம்புகள் சார்ந்த ஒரு ஆயத்தநிலை.
Newcomb: மனப்பான்மை என்பது செயல் தூண்டுதல், உணர்ச்சியை எழுப்புதலுக்கான ஒரு ஆயத்த நிலை என குறிப்பிடுகின்றார்.
Sargent and Williamson: தனிமனிதர்கள் பொருட்கள் அல்லது சூழ்நிலைகள் தொடர்பாக ஒரு குறிப்பிட்ட முறையில் நடந்து கொள்ள செய்கின்ற ஒருங்கிணைந்து கற்றறிந்த ஒரு போக்கு.
மனப்பான்மை பற்றிய தற்பொழுதைய விளக்கமானது மனிதர்கள், பொருட்கள் அல்லது முக்கிய செய்திகள் ஆகியவற்றை பற்றிய பொதுவான மதிப்பீடே மனப்பான்மை மன வலியுறுத்தப்படுகின்றது.
சமூக மனப்பான்மையின் சிறப்புக் கூறுகள்.
சமூக அக்கறைகளின் தனித்துவமான அம்சங்கள்
சூழ்நிலையின் ஒரு குறிப்பிட்ட அம்சத்துடன் தொடர்பு கொண்ட சிறப்பான அல்லது நிலையான நடத்தை வகையில் நிருணயிக்கின்ற ஒரு மனப்பான்மை ஓர் உள்ளார்ந்த காரணியாகும் . Sherif என்பவரின் கருத்துப்படி பின்வருவனவை மனப்பான்மையின் சிறப்பு கூறுகளாகும்.
1. மனப்பான்மை நிலையானதும், நீடித்து இருப்பதுமாகும். நாம் மனப்பான்மைக்கு உடன்பட்டு நடப்பதால் சூழ்நிலைக்கேற்ப அவற்றை மாற்றியும் அமைத்துக் கொள்ளலாம்.
2. மனப்பான்மைகள் அசுபுற தொடர்பின் உள்ளடக்கியிருக்கின்றன. இது எப்பொழுதும் குறிப்பாக சில மக்கள், குழுக்கள், பொருட்கள், அல்லது நிறுவனங்களின் தொடர்பிலேயே உருவாக்கப்படுகின்றது.
3. மனப்பான்மைகள் உடன் மறந்தவையன்று தனிமனிதன் குழுவில் வரும் பொது அவை உருவாக்கவோ கற்கவோ பெறுகின்றன.
4. மனப்பான்மைகள் ஊக்குவித்தல் சார் வளர்ச்சி இயல்புகளை கொண்டுள்ளது.
5. மனப்பான்மைகள் குழு உறுப்பினர்களால் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.
ஒருவர் மனப்பான்மையுடன் பிறப்பதில்லை குழந்தைகள் இவ்வுலகில் அரசியல் விருப்பத்தேர்வுகள், இன வெறுப்புகள் போன்றவற்றுடன் பிறப்பதில்லை அத்தகைய மனப்பான்மைகள் நீண்டகாலமாக வளர்க்கப்படுகின்றன. கற்றல் முறையின் மூலமாக மிக சாத்வீக முறையில் மனப்பான்மைகள் தனிமனிதர்களால் வளர்க்கப்படுகின்றன. நேரடி அனுபவங்களின் மூலமாக தனிமனிதனின் மனப்பான்மைகளை வளர்த்துகொள்வதில் மிகத் தீவிரமாக பங்கு கொள்கிறாள்.
சமூக கற்றல் மனப்பான்மைகளை பிறரிடமிருந்து கற்றல்
மனப்பான்மைகள் சமூகமயமாதலின் மூலமாக கற்றுக்கொள்ளப்படுகின்றன. சமூகமயமாதல் என்பது ஒரு பிறந்த குழந்தையை சமூகத்தில் பொறுப்புள்ள மற்றும் திறமைவாய்ந்த ஒரு உறுப்பினராக மா மாற்றுவதாரும். குழந்தைகள் மனப்பான்மைகளை தங்களுடைய பெற்றோர்கள், உடன் பிறந்தோர், நன்பர்கள் மற்றும் மக்கள் தொடர்பு சாதனங்கள் மூலமாக பெறுகின்றனர். சமூக உளவியல் வல்லுனர்கள் கீழ்கண்ட 3 முறைகளில் மனப்பான்மைகள் வளர்க்கப்படுவதாக குறிப்பிடுகின்றனர்.
1. இயந்த குழநிலையமைப்பு (Classical Cordirioning)
2. கருத்து உத்த சூழ்நிலையமைப்பு (Operant Conditioning )
3. முன்மாதிரியாய் திகழல் (Modeling)
Classic Cordirioning ( இயைந்த சூழ்நிலையமைப்பு )
இந்த கற்றல் முறையில் நடுநிலையான தூண்டுதல் சூழ்நிலையுடன் ஒவ்வாத ஒரு தூண்டுதலுடன் ஒத்துப்போகிறது. உதாரணமாக மகிழ்ச்சியான அனுபவங்கள் உண்டாக்குகின்ற மனிதர்கள் பொருட்கள் அல்லது நிகழ்ச்சிகள் நல்லவகையானது மதிப்பிடப்படுகின்றன. ஆனால் துன்பத்தை அளிக்கின்றவைகள் எதிர்மறையாக மதிப்பிடப்படுகின்றன இந்த வகையில், நமது பல மனப்பான்மைகள் காரணமின்றியும் முன்பின் முரனானதாகவும் அமைகின்றது. உதாரணமாக, ஒரு நல்ல வசதியான அறையில் ஒருவருடன் ஒருவர் உறவாடும் போது அவர்கள் ஒருவரையொருவர் அதிகமாக நேசிக்கின்றனர்.அதே வசதிகுறைவான அறையில் ஒருவரோடு ஒருவர் உறவாடும்போது ஒருவரை மற்றொருவர் நேசிப்பதில்லை. இதனை ஆராய்ச்சி பூர்வமாக நிரூபித்துள்ளனர். இது போன்று, நமது மனப்பான்மைகள் இயைந்த சூழ்நிலை காரணமாக ஏற்படுகின்றது.
Operant Conditioning ( கருத்து உத்த சூழ்நிலையமைப்பு )
கருத்து ஒத்த குழ்நிலை அமைப்பு என்பது நல்ல செயல்விளைவுகளை ஏற்படுத்துகின்ற செயல்கள் வளர்ந்து அவற்றை திடப்படத்துதலாகும். உ+ம் 93 குடியாட்சியை விரும்புகின்ற தந்தை தனது மகனும் குடியாட்சியை விரும்பும்போழுது அதனை பாராட்டுகின்றார் மகன் அதற்கு எதிர்மறையான எண்ணங்களை கொண்டிருக்கும் போது தண்டிக்கின்றார். இது போன்று வெகுமானம் அல்லது தண்டனை அளித்தல் ஆகியவற்றின் மூலமாக பெற்றோர்கள் குழந்தைகளின் வெவ்வெறு விடயங்களை பற்றிய மனப்பான்மைகளை வளர்க்கின்றனர். சில மனப்பாள்மைகளை வளர்த்துக் கொள்ளுதலும், வெளிப்படுத்துதலும் விளையாட்டுக்குழு, சங்கங்கள், உடன் பிறப்புக்கள் ஆகிய குழுக்களின் ஒப்பதலின் அடிப்படையில் நிகழ்கின்றன. இத்தகைய குழுக்கள் நேரடியாகவே சில மனப்பான்மைகளை வளர்த்துக்கொள்ள மனிதர்களை தூண்டுகின்றன. பெற்றொர்கள் குழந்தைகள் மனப்பான்மைகளை வெளிப்படுத்துவதற்கு ஏற்றவாறு அவர்களுக்கு ஒப்புதல் அளிக்கின்றனர்.
முன்மாதிரியாக திகழ்தல் (Modeling)
முன்மாதிரியாக திகழ்தல் (Modeling). என்பது உற்று நோக்கல் முறையில் கற்றுக் கொள்ளுதல் ஆகும். உதாரணமாக குழந்தைகள் பெற்றோர்களை உற்று நோக்கி தங்களுடைய மனப்பான்மைகளை அதற்கு ஏற்றால் போல் வளர்த்துக்கொண்டு முன்மாதிரியாக திகழும் பெற்றோர்களை பின்பற்றுகின்றனர். மேலும் பள்ளிக்கூடம், ஆலயங்கள், செய்தித்தாள், தொலைக்காட்சி, வானொலி போன்ற மக்கள் தொடர்பு சாதனங்களும் மனப்பான்மைகளை உருவாகுகின்றன.
Attitude Specificity ( சிறப்பு மனப்பான்மை )
மனப்பான்மை ஆராய்ச்சியாளர்கள் இரண்டு விதமான மனப்பாளமைகளை விளக்குகின்றனர். அவை
1. பொதுவான மனப்பான்மை (General Attitude)
2. சிறப்பு மனப்பான்மை (specific Attitude)
ஓரவர் இளவேறுபாடு மற்றும் காழ்ப்பணர்ச்சி ஆகியவற்றை எதிர்த்து ஒரு பொதுவான மனப்பான்மையை கொண்டிருக்கும் போது அவர் எப்பொழுதும் ஊர்வலத்தில் கலந்து கொள்வார் என்றோ அல்லது மற்ற இன மக்களை நன்பர்களாக கொள்வார் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் இவற்றில் ஈடுபடலாம் அல்லது ஈடுபடாமலும் இருக்கலாம். இது நடத்தைக்கும், மனப்பான்மைக்கும் இடையே ஒரு பலவீனமான மேலும் வலுவான மனப்பான்மைகள் நம்முடைய மனதில் மிக எளிதாக தோன்றி நம்முடைய நடத்தையை நிர்ணயம் செய்கின்றன. மனதில் மிக எளிதாக தோன்றி நம்முடைய தன்மையை உாதரணமாக அயல் நாடுகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் உயர்தரமானவை என்ற எண்ணத்தை ஒருவன் கொண்டிருக்கும் தருணத்தில் ஒரு கொருளை வாங்க அவன் கடைக்குச் செல்லும் போது இந்த எண்ணமானது தோன்றி அயல்நாட்டு பொருட்களை வாங்க அவனை தூண்டுகின்றது இத்தகைய வலுவான மற்றும் எளிதில் அணுகத்தக்க தன்மையுடைய மனப்பான்மைகள் நம்முடைய நடத்தையை நிர்ணயம் செய்கின்றன.
Post a Comment