கற்பித்தல் என்பது உத்தமமான தொழிலாகும். அதற்காக ஆசிரியர்கள் பொறுப்புடனும் வகை சொல்லத்தக்க வகையிலும் செயற்படுதல் அவசியமாகும்.

ஆசிரியர் தமது பணிகளில் தரத்தைப் பேண நடவடிக்கை எடுத்தல் வேண்டும். அது தொடர்பாக அவர் ஒட்டுமொத்தச் சமூகத்துக்கும் கடமைப்பட்டிருக்கின்றார்.

அத்தோடு தமது வகிபாகத்துக்குரிய சட்டதிட்டங்கள், சுற்றுநிருபங்களை அனுசரித்து தமது பணிக்கு முதன்மையளித்து அதனைச் சரியாகச் செய்வதும், அதற்கமைவான நடத்தைகளையும் வழமைகளையும் கட்டியெழுப்பிக் கொள்வதும் ஆசிரியரின் பொறுப்பாகும்.

அதாவது தொழில் சார்ந்த தனது நெருக்கமான தொடர்பே பொறுப்பு எனப்படுகிறது. ஆசிரியர்களது பொறுப்புக்களை பின்வரும் மூன்று வகுதிக்குள் உள்ளடக்கலாம்.

1. ஒழுக்கம் சார்ந்த பொறுப்பு.
2. தொழில் சார்ந்த பொறுப்பு.
3. ஒப்பந்தம் (நியமனம்) சார்ந்த பொறுப்பு.


Teacher Responsibilities in tamil


ஆசிரியர் ஒழுக்கக் கோவையின் அவசியம்.

உதாரணம்.
இளஞ்சந்ததியினரை உருவாக்குபவர் என்றவகையில் ஆசிரியர் ஒரு முன்மாதரியாக இருப்பதற்கு.
ஆசிரியர் எனும் தொழிலைப் பாதுகாப்பதற்கு.
பாடசாலையின் பண்பாட்டையும் ஒழுக்கத்தையம் பேணுவதற்கு.
இறுதிக் குறிக்கோளை அடைவதற்கு.
. தொழிலின் பொறுப்பேற்றலையும் வகைகூறலையும் பாதுகாப்பதற்கு.
ஆசிரியரது தொழில் தொடர்பாக அதிக அர்ப்பணிப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு.


ஆசிரியருக்குரிய ஒழுக்கக் கோவை.

1. ஆசிரியர் தமது உடையில் பகட்டில்லாத தன்மையையும் அவைப் பொருத்தத் தன்மையையும் வெளிக்காட்டுதல் வேண்டும்.

2. ஆசிரியர் சொல்லாலும் செயலாலும் நேர்மையானவராதல் வேண்டும்.

3. சாதி, இனம், சமூக அந்தஸ்து போன்ற எதனையும் கருதாது எல்லா மாணவரையும் நியாயமாகவும் சமமாகவும் கவனித்தல் வேண்டும்.

4. ஆசிரியர் தமது நடத்தையூடாக எல்லோரதும் கவனத்தையும், கௌரவத்தையும் மதிப்பையும் பெற வேண்டும்.

5. தொழிலுக்கு பங்கம் விளைவிக்காத துர்ப்பழக்கங்களிலிருந்து ஆசிரியர் விலகியிருத்தல் வேண்டும்.

ஆசிரியருக்குரிய ஒழுக்கக் கோவையொன்றின் அவசியம் தொடர்பாக இலங்கையிலும் அவ்வப்போது வலியுறுத்தப்பட்டு சில சந்தர்ப்பங்களில் அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான ஓர் ஒழுக்கக் கோவையைத் தயாரிக்கும் போது ஆசிரியரது பொறுப்புக்களுடன் தொடர்புடைய பின்வரும் பல்வேறு துறைகளையும் கவனத்திற் கொள்வது அவசியமாகும்.

1. ஆசிரியர் ஆசிரியர் தொடர்பு.
2. ஆசிரியர் மாணவர் தொடர்பு
3. ஆசிரியர் பெற்றோர் தொடர்பு.
4. ஆசிரியர் அதிகாரிகள் தொடர்பு.
5. ஆசிரியர் மாணவர் உரிமைகள்.



ஆசிரிய தொழிலுடன் இணைந்த உரிமைகள்.

அரசியலமைப்பினால் ஆட்கள் ஒவ்வொருவருக்கும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகள் ஆசிரியர்களுக்கும் உண்டு, முற்காலத்தில் ஆசிரியர்கள் எதிர்நோக்கிய சில அசௌகரியங்களைக் களைவதற்கு இது காரணமாகிறது.

1. ஆசிரியராக நியமித்தலும் பதிவு செய்தலும்.
2. சேவைக்காலமும், தகுதிகாண் காலமும்.
3. தொழிற்சங்கங்களைத் தாபிப்பதற்கும் அவற்றில் அங்கத்துவம் பெறுவதற்கும் உரிமை.
4. அறிவு சார்ந்த சுதந்திரம்.
5. அரசியல் சுதந்திரத்தை நடைமுறைப்படுத்தும் சுதந்திரம்.


ஆசிரியர்களுக்கான வரப்பிரசாதங்கள்

1.லீவு
2. கடமை லீவு.
3. முழுச்சம்பளத்துடனான கற்கை லீவு.
4. பிரசவ லீவு,
5. இலசவ புகையிரத ஆணைச்சீட்டு
6. கடமைப் பிரயாணங்களுக்காக ஒன்றினைந்த கொடுப்பனவு,
7. ஓய்வூதியம் பெறல்


ஆசிரியரது தொழிலுடன் இணைந்த பொறுப்புக்கள்

1. மாணவரது கௌரவத்தைப் பாதுகாப்பதற்கு ஆவணை செய்தல்
2. தமது பணியை உரிய நேரத்தில் ஆரம்பித்து உரிய நேரத்தில் முடித்தல்.
3. மாணவரது தனிப்பட்ட தகவல்கள், பிரச்சினைகளை, அவர்களுக்கு பங்கம் விளையத்தக்க வகையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் பயன்படுத்துவதைத் தவிர்த்தல்.
4. மாணவரது முன்னிலையில் நிருவாகத்தை விமர்சிக்காதிருத்தல், நிருவாகத்திற்கு எதிராக மாணவரைத் தூண்டாதிருத்தல்.
5. மாணவரைச் சுய கற்றலின் பால் வழிப்படுத்தல்.


பரிவுணர்வுடன் செயற்படல் (Empathy)

பரிவு என்பது மற்றொருவரின் உலகில் பிரவேசிக்கும் தன்மையையே குறிக்கிறது. அவரது இதயத்துடிப்புடன் ஒன்றி அதன் விளைவுகள் வேதனைகளை அதே அளவில் தாமும் உணரும் நிலையே இதுவாகும்.

வகுப்பறையில் வெற்றிகரமாக விளைதிறன் மிக்க ஓர் ஆசிரியராவதற்காக ஒவ்வோர் ஆசிரியரும் பரிவுணர்வுடன் செயற்படும் திறனை விருத்தி செய்து கொள்ள வேண்டும்.

எவரேனும் மாணவர் யாதேனும் பிரச்சினையை எதிர்கொள்ள முடியாத நிலையில் ஆசிரியரை அணுகி அப்பிரச்சினையைக் கூறிய பட்சத்தில் அம்மாணவனின் அப்பிரச்சினை தீரும் வரையில் ஆசிரியர் அம்மாணவருக்கு உதவி புரிபவராக இருப்பது அவசியம்.

முஸ்டாகாஸ் (1986) எனும் தத்துவஞானி நாம் பிள்ளைகளுடன் செயற்படும் போது உருவாக்கிக் கொள்ள வேண்டிய பிரதானமான மூன்று நிபந்தனைகளை எடுத்துக் கூறியுள்ளர்.

  • Being in உள்ளிருத்தல்)
  • Being for (அவர்களுக்காக இருத்தல்)
  • உடன் இருப்பது (ஈல்)

இங்கு Being in என்பதால் கருதப்படுவது பரிவுணர்வு ஆகும்.


சிறுவர் மற்றும் மாணவரின் உரிமைகள்.

சகல நாடுகளிலும் பிள்ளைகள் யாவரும் ஆட்களாகக் கருதப்படுகின்றனர். பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பற்ற சிவில் உரிமைகள் பிள்ளைகளுக்கு அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளன.

1. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்.
2. கூட்டம் கூடும் சுதந்திரம்.
3. ஒழுக்கம் உடல் சார்ந்த தன்மை பற்றிய சுதந்திரம்.
4. காயமடைதல். சேதம் விளைவித்தலிருந்து பாதுகாப்பு.
5. கல்வியில் சம வாய்ப்புக் கிடைத்தல்.



செயல்வழி ஆய்வுகளில் ஈடுபடுதல்.

ஒவ்வொரு ஆசிரியரும் ஆராய்ச்சியாளராவது அவசியமானது. குறிப்பாக கற்றல் - கற்பித்தல் செயன்முறையின் போது மாணவரது கற்றல் பிரச்சினைகள் நடத்தைப் பிரச்சினைகள், வகுப்பறை முகாமை, ஆசிரியரது கற்பித்தல் பிரச்சினைகள், போன்ற வெவ்வேறு துறைகளில் இனங்கண்ட பிரச்சினைகளின் போது ஏற்பட வேண்டிய மாற்றங்களை இனங்கண்டு அதற்காகத் தலையிடுவதற்குரிய செயற்பாடுகளைத் திட்டமிட்டு அவற்றை நடைமுறைப்படுத்தி எதிர்பார்க்கப்படும் குறிக்கோளை / மாற்றத்தை அடைவதே செயல்வழி ஆய்வு என்பதால் கருதப்படுகிறது.

வகுப்பறையில் ஆசிரியர் எதிர்நோக்கும் பல்வேறு கற்றல் - கற்பித்தல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இது ஒரு நல்ல அணுகுமுறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.



செயல்வழி ஆய்வுகளில் ஈடுபடுவதால் கிடைக்கும் நன்மைகள்.

1. மாணவரது பிரச்சினைகள் தீர்க்கப்படும் / இழிவாக்கப்படும்.

2. கற்றல் - கற்பித்தல் செயன்முறை வெற்றியடையும்.

3. மாணவர் ஆசிரியர் தொடர்பு உறுதி பெறும்.

4. மாணவர்கள் கற்றலின் பால் வழிப்படுத்தப்படுவர்.

5. மாணவரது பிரச்சினைகளை இனங்காணும் திறன் ஆசிரியரிடத்தே விருத்தியடையும்.

6. தமது கற்பித்தல் திறன்களை விருத்தி செய்து கொள்வதன் மூலம் ஆசிரியரிடத்தே வெற்றிகரமான கல்விப் பிரயோகங்கள் உருவாகும்.

7. பிரதிபலிப்பு (ஆழ்சிந்தனை வெளிப்பாடு - Reflection)  விருத்தியடையும்.

8. கல்விச் செயன்முறையின் போது ஆசிரியரது பணிக்கு / தலையீட்டுக்கு முக்கிய இடம் கிடைத்தல்.

9. கற்றல் பிரச்சினைகள் / கற்பித்தல் பிரச்சினைகளைத் தீர்க்க சந்தர்ப்பம் கிடைத்தல்.


வகுப்பறை முகாமை

வகுப்பறை முகாமைத்துவம் என்பது வகுப்பறை கற்றல் கற்பித்தல் அதிக வினைத்திறனுடையவாறு நிகழத்தக்க சூழலைக் கட்டியெழுப்புவதற்கும் அதனை நடத்திச் செல்வதற்கும் அதற்குத் தேவையான மனித, பௌதிக, நேர வளங்களை வினைத்திறனுடையவாறு பயன்படுத்துவதற்குத் தேவையான உத்திகளைப் பயன்படுத்துவதற்கான முயற்சி எனலாம்.


வகுப்பறை முகாமைத்துவம் தொடர்பான வரைவிலக்கணங்கள்.

மாணவனுக்கும் ஆசிரியருக்கும் விருப்பத்துக்குரிய ஓர் இடமாகவும் எதிர்பார்க்கப்பட்ட குறிக்கோள்களை அடையத்தக்கவாறான ஓர் இடமாகவும் ஊக்கலுடன் செயற்படத்தக்க ஒரு சூழ்நிலையைக் கொண்ட ஓர் இடமாகவும் வகுப்பறையை மாற்றியமைப்பதற்காக எடுக்கப்படும் ஒரு முயற்சியாகும்.

சாதகமான நடத்தைகளை மீள வலியுறுத்துவதன் மூலமும் பாதகமான நடத்தைகளை நீக்குவதன் மூலமும் வகுப்பறைச் சூழலைப் பேணிவருதலே வகுப்பறை முகாமைத்துவமாகும்.

மாணவரது கவனத்தைப் பேணுவதோடு. அவர்களுக்கு ஊக்குதலளித்து அவர்களது ஆக்கத்திறன் மற்றும் உள்ளார்ந்த ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்ளலை இலகு படுத்தத்தக்க வகையில் வகுப்பறையில் பௌதிக, மானுட சூழ்நிலையை அமைப்பாகும்.


வகுப்பறை முகாமைத்துவத்தின் அவசியம்.

  • முதன்மையாக எதிர்பார்க்கப்படும் குறிக்கோள்களை அடையத்தக்கதாக இருத்தல் வேண்டும்.
  • வினைத்திறன் அதாவது கற்றல் கற்பித்தற் செயன்முறையின் குறிக்கோள்களை அடைதல்.
  • விளைதிறன் அதாவது வளங்களைக் கொண்டு உச்ச பயன் பெறுதல். மனித கௌரவம் தொடர்பான நடத்தைப் பயிற்சி.
  • ஐக்கியம் / ஒற்றுமை / கூட்டுணர்வைக் கட்டியெழுப்புதல்.
  • தனியே தாமாக வேலைகளைச் செய்து கொள்ளத்தக்கவாறாக மாணவரைச் சுயமாக நெறிப்படுத்தலின்பால் வழிப்படுத்தல்.
  • குழுவில் ஒத்துளைப்பு தொடர்பான உணர்வைப் பயிற்றுவித்தலும் அனுபவங்களை வழங்குதலும்.
  • உயிரோட்டமான / விருப்பத்துக்குரிய சூழலாக மாற்றுவது.
  • நல்ல ஒழுக்கத்தையும் சுய ஒழுக்கத்தையும் உருவாக்குவதற்காக வகுப்பறை முகாமைத்துவம் அவசியம்.
  • ஆசிரியர் -மாணவர் தொடர்புகளையும் மாணவர் -மாணவர் தொடர்புகணையும் உச்சமாக்குவது அவசியமாகும்.



Post a Comment

Previous Post Next Post