1.2. பாடசாலை அலுவலக முகாமைத்துவத்தை விளைதிறனுடனும், வினைத்திறனுடனும் மேற்கொள்ள உதவும் தகவல் தொடர்பாடல் நுட்பங்கள்.

School management in tamil


பாடசாலை அலுவலக முகாமைத்துவத்தை விளைதிறனுடனும், வினைத்திறனுடனும் மேற்கொள்ள உதவும் நவீன தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப எண்ணக்கருக்கள்.

  1. கல்வி முகாமைத்துவ தகவல் முறைமை (EMIS)
  2. - திறன் வகுப்பறை (SMART Classroom)
  3. - இலத்திரனியல் ஆய்வுகூடம் (e-Lab)
  4. -இலத்திரனியல் நூலகம் (e - Library)
  5. -இலத்திரனியல் அலவலகம் (e-Office)
  6. -இலத்திரனியல் கற்றல் (e-Learning)

பாடசாலை அலுவலக முகாமைத்துவத்தை மேற்கொள்ள உதவும் நவீன தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கணினி மென்பொருட்கள் மற்றும் வசதிகள்.

  1. - Time Table Software/aSc Software
  2. - e-mail
  3. - Zoom, MS Team, Skype, Go to meeting....
  4. - MS Excel. Access, SPSS.......
  5. - Power Point Presentation
  6. - WhatsApp, SMC, Viber...
  7. - Data base / Inventory System


(1) கல்வி முகாமைத்துவ தகவல் முறைமை.

Educational Management Information, Ststem  (EMIS)

மாணவர்களை அனுமதித்தல் தொடக்கம் விலகிச் செல்லுதல், புதிய ஆசிரியர் கடமையேற்றல் தொடக்கம் இடமாற்றம் / ஓய்வு பெற்றுச் செல்லுதல், பௌதிக வள முகாமைத்துவம் போன்றவற்றை எளிதாக்கிக் கொள்ள EMIS உதவும். MS Excel, Access, இணையத்தள வசதிகளையும் பயன்படுத்தலாம். இதன் முக்கியத்துவங்கள்.

  • அலுவலக முகாமைத்துவத்தை எளிதாக்கலாம்.
  • தேவையான தகவல்களை விரைவாகப் பெற்றுக் கொள்ளலாம்.
  • -தேவையான தகவல்களை காட்சிப்படுத்தலாம்.
  • தகவல்களை உடனுக்குடன் பரிமாற்றம் செய்யலாம்.


EMIS இல் உள்ளடக்க வேண்டிய முகாமைத்துத் தகவல்கள்.

* பாடசாலைக் காணி வரைபடம் + காணி உறுதிப் பத்திரம்.
* பாடசாலைக் கட்டங்களின் திட்டம் (Master plan)
* ஊட்டற் பிரதேச வரைபடம்.
* பாடசாலையின் வரலாறு
* மாணவர் தொடர்பான தரவுத்தளம்
* ஆசிரியர் தொடர்பான தரவுத்தளம்
* கல்வி சாரா ஊழியர் தொடர்பான தரவுத்தளம்
* பெளதீக வளங்கள் தொடர்பான தகவல்கள்
* பொதுப் பரீட்சை பகுப்பாய்வு தொடர்பான தகவல்கள்
* மாணவர் அடைவு தொடர்பான தகவல்கள்


EMIS இல் உள்ளடக்க வேண்டிய முகாமைத்துவங்கள் தொடர்ச்சி...

* SBPTD வளவாளர் தொடர்பான தகவல்கள்
* பாடசாலை நலன் விரும்பிகள் தொடர்பான தகவல்கள்
* இணைப்பாட விதான சாதனை தொடர்பான தகவல்கள்
* பாடசாலை முகாமைத்துவ உப குழுக்கள்
* மாணவர் நலன்புரி தொடர்பான தகவல்கள்
* மாணவர் தலைவர் தொடர்பான தகவல்கள்


தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை விளைதிறனு டன் பயன்படுத்தக் கூடிய வேறு சந்தர்ப்பங்கள்.

(i) aSc Software மூலம் பாடசாலையின் நேர நிரலணி, வகுப்புக்களுக் கான நேர நிரலணி. ஆசிரியர்களுக்கான நேர நிரலணி, பதிற் பாடக் கடமைக்கான நேர நிரலணி ஆகியவற்றைத் தயாரித்தல்.

(ii) Power Point Predentation  பகுப்பாய்வு ய்து, பெற்றோர்கள் மற்றும் SDEC உறுப்பினர்களுக்கு பலவீனம் மற்றும் அதிவிருத்தித் தேவை குறித்து விளக்கமளித்தல்.

(iii) Zoom/MS Team Go to Meeting ஊடாக பெற்றோர் வகுப்பாசிரியர் கூட்டம், ஆசிரியர் கூட்டம் போன்றவற்றை நடாத்துதல்.

(iv) MS Excel/database/Inventory Syster மென்பொருள் ஊடாக ஆசிரியர் தரவுத்தளம், மாணவர் தரவுத்தளம், பௌதீக வள தரவுத்தளம் போன்றவற்றை முகாமை செய்தல்.

(v) Data base கணினி மென்பொருளை உருவாக்கி, மாணவர் வரவு, பாடசாலை தொடர்பான செய்திகளை பெற்றோருக்குத் தெரியப் படுத்தல்.

(vi) School Website/WhatsApp/Facebook பாடசாலையின் சாதனைகள் மற்றும் செய்திகளைப் பெற்றோருக்கும். பாடசாலைச் சமூகத்திற்குகம் தெரிவித்தல்.

(vii) School e-mail ஊடாக கல்வி அமைச்சு, வலயக்கல்வி அலுவலகம் மற்றும் பாடசாலைச் சமூகத்திற்கு தகவல்களைப் பரிமாறுதல்.

(viii) School-e-mail, SMS போது லீவை அறிவித்தல்.

(ix) SPSS மென்பொருள் / Excel ஊடாக தரவுகளைப் பகுப்பாய்வு செய்து காட்சிப்படுத்தல் / செயற்றிட்ட அறிக்கை தயாரித்தல்.



Post a Comment

Previous Post Next Post