Prejudice and discrimination in tamil

சமூக உளவியலில் தப்பெண்ணமும் வேற்றமை காணுதலும் மிக முக்கியமாக கருதப்படுகின்றது. உளவியல் வல்லுணர்கள் இச்சொற்களை வேறுபடுத்திக் காட்டுகின்றார்கள், பொதுவாக தப்பெண்ணம் என்பது ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்த மனிதர்களைப் பற்றி எதிர்மறையாக கொண்டிருக்கும் மனப்பான்மையாகும். மாறாக வேற்றுமை காணுதல் என்பது இத்தகைய மனிதர்கள் மேல் எதிர்மறையாக செயல்படுதலாகும்.

தப்பெண்ணம் என்பது ஒரு குழுவின் உறுப்பினர்களைப் பற்றிய எதிர்மறையான மனப்பான்மை என்ற 93 பொதுவான நேர்மறையான மனப்பான்மையையும் உள்ளடக்கியதாகும். முற்றக் குழவின் உறுப்பினர்களைப் பற்றி எதிர்மறையான மனப்பான்மை கொண்டிருக்கும் மக்கள் தங்கள் குழுவின் உறுப்பினர்களைப் பற்றி நல்ல மனப்பான்மையை கொண்டுள்ளனர். எனவே தப்பெண்ணம் என்பது ஒரு குழுவின் உறுப்பினர்களைப் பற்றிய எண்ணமே தவிர தனிமனிதர்களின் குணங்களைப்பற்றிய எண்ணம் அல்ல. தப்பெண்ணம் என்பது நன்கு ஆராயப்படாமல் துரிதமாக எடுக்கப்படும். என குறிப்பிடலாம்.


மனப்பான்மையை போன்று தப்பெண்ணமும் 3 மூலக்கூறுகளை உடையது. ஆவை:

1. நேசத்தன்மை தப்பெண்ணம் கொண்டுள்ள மனிதன் ஒரு குறிப்பிட்ட குழுவின் மேல் கொண்டுள்ள எதிர்மறையான உணர்வுகளாகும்.

2. புலனறிவுத் தன்மை: தப்பெண்ணம் கொண்டுள்ள மனிதன் அக்குழுவைப்பற்றி கொண்டுள்ள தவறான நம்பிக்கையாகும்.

3. நடத்தை தன்மை: அக்குழுவிற்கு எதிராக செயற்படும் தன்மையாகும்.


தப்பெண்ணத்தின் வகைகள்.

நிறத்தின் அடிப்படையில் தப்பெண்ணம் - நிறத்தின் தப்பெண்ணம் அடிப்படையில் எங்கும் காணப்படுகின்றது. கறுப்ப. வெள்ளையரிடையே உள்ள தப்பெண்ணம் இதற்கு நல்ல உதாரணமாகும். நிறத்தின் அடிப்படையில் தப்பெண்ணம் உருவாகும் போது பல இன மக்களின் நடவடிக்கைகளும், அறிவும் குணமும் தீர்மானிக்கப்படுகின்றது.

மொழி அடிப்படையில் தப்பெண்ணம் - ஒவ்வொருவரும் தனது மொழியைத்தான் பிற தொழியை விடவும் சிறப்பானதாக கருதுகின்றனர். சில நேரங்களில் ஒருவன் தனது மொழியே உயர்ந்தது எனவும் பிறமொழிகள் தாழ்ந்தவை எனவும் கருதுகிறான். இதனை நாம் மொழி வெறி என்று கூறகின்றோம். ஆனால் சில மொழிகளில் மொழிவளம் அதிகமாக இருப்பது உன்மையை.

மத அடிப்படையில் தப்பெண்ணம் -  ஒரு மதத்தை பின்பற்றுபவர் தமது மதம்தான் உயர்ந்தது என்றும் பிறமதங்கள் தாழ்ந்தவை என்றும் எண்ணுகின்றனர். பிற மதங்களில் மூடநம்பிக்கைகள் அதிகம் இருப்பதனால் அது தாழ்ந்தது என கருதுகின்றனர். இதனால் பல்வேறு மதத்தவர்களிடையே தப்பெண்ணம் ஏற்படுகின்றது. சாதாரண அடிமட்ட மக்களில் இருந்து மிகவும் உயர்ந்த கல்வியறிவை கொண்ட மக்கள் வரை தான் பின்பற்றும் மதத்தை ஆராய்ந்து, விஞ்ஞான ரீதியாக பிற மதங்களுடன் ஒப்பிட்டும் பார்ப்பதில்லை. இதை செய்வது மிக அவசியமாகும்.

சாதி அடிப்படையில் தப்பெண்ணம் - காதி அமைப்பிலும் தரவரிசை உள்ளது. ஒரு சாதி உயர்ந்தது என்றும் வேறொன்று தாழ்ந்தது என்று கருதப்படுகின்றது. உயர்சாதியை சார்ந்தவர் வேறு சாதியை சார்ந்தவர்களை வெறுக்கத் தொடங்குவர். இதனை போன்றே தாழ்ந்த சாதி எனக் கருதப்படுவோர் மேல் சாதியினரை வெறுக்கத் தொடங்கும்.

தேசிய அடிப்படையில் தப்பெண்ணம் - பல்வேறு நாட்டினர்க்கும் பல்வேறு தப்பெண்ணங்கள் உள்ளன. இந்தியா மக்களுக்கு பாக்கிஸ்தான் நாட்டு மக்கள் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி.

பொருளாதார அடிப்படையில் தப்பெண்ணம் -  அதிகப் பொருள் இருப்பவர்க்கும் இல்லாதவருக்குமிடையை காழ்ப்புணர்ச்சி ஏற்படுகிறது. இது பொருளாதார அடிப்படையில் ஏற்படுவதாகும். முதலாளிகளும், தொழிலாளிகளும் ஓரவர் மேல் ஒருவர் தப்பெண்ணம் கொண்டுள்ளனர். இதனால் தொழிற்சாலைகளில் பிரச்சினைகள் ஏற்படுகின்றது.



தப்பெண்ணம் தோன்றுவதற்கான காரணங்கள்.

தப்பெண்ணம் மிகவும் இளமை காலத்திலேயே ஒருவரிடம் ஆரம்பித்துவிடும். சாதி, சமய, இன வேறுபாடின்றி இளையோர்கள் ஆரம்பத்தில் விளையாடுவதைக் காணலாம். வளர வளர பல காரணங்களினால் பாகுபாடு செய்வதை பார்க்கலாம், வேறு குழுவினரை பாகுபாடு செய்ய ஆரம்பித்ததும் அவர்கள் அக்குழுவில் இருந்து தனித்து இயங்கத் தொடங்குவர். பிற குழுவினரை வெறுப்பது அவர்களுக்கு இயல்பாக இருந்து வரும். உள்ளுணர்ச்சி என்றாலும் இளம் வயதில் இதற்கான அனுபவங்கள் இல்லை என்பதனால் வளர வளர இந்த உணர்வு ஏற்படுகின்றது.

குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் இந்த வெறுப்பை தூண்டி விடுவார்கள். பிற குழுவினரடன் சேர்ந்து விளையாட அவர்கள் அனுமதிப்பதில்லை. நீக்ரோ குழந்தைகளிடம் இருந் தனித்து இருக்கவில்லை வெள்ளைக்கார லை என்றால் குழந்தைகள் தண்டிக்கப்படுவார்கள். இந்த வகையில் தப்பெண்ணம் மிகவும் இளமைக்காலத்தில் ஏற்படுகின்றது. தங்கள் செயலின் அடிப்படையை அவர்கள் அறிந்து கொள்ளும் முன்பே தப்பெண்ணம் ஏற்படுகின்றது.

தப்பெண்ணம் வளர்வதற்கு சமூக நெறி முறைகளும் ஒரு முக்கிய காரணமாகும். ஒரு மனிதன் சமூக நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு வாழவேண்டிய சூழ்நிலையில் உள்ளான். எனவே அவனுடைய எண்ணங்கள் வேறுபட்டிந்த போதிலும் சமூக நெறிமுறைகளை பின்பற்றுவதற்காக ஒருவன் தப்பெண்ணத்தை வளர்த்துக் கொள்கின்றான். உதாரணமாக தென் ஆபிரிக்க வெள்ளையர்களுக்கு கறுப்பர்கள் மீது மிகவும் மோசமான எண்ணம் தான் உண்டு . அதே நேரம் பிரான்ஸ், ரஷ்யா நாட்டு வெள்ளையர்களுக்கு இது போன்ற எண்ணம் ஏதும் கிடையாது.


Discrimination ( வேற்றுமை காணுதல்)

சில மனிதர்கள் சிறிய அளவில் மற்றவர்களை புறக்கணிக்கின்றார்கள், இதன் மூலம் தங்களுடைய எதிர்ப்பை மறைமுகமாக காட்டுகின்றார்கள். இதனை 3 வகையாக பிரிக்கலாம்.


1.உதவி செய்வதில் தயக்கம் (Reluctance to help)
இது ஒரு வகையான புறக்கணிக்கும் தன்மையாகும். தப்பெண்ணம் கொண்டவர்கள் நேரடியாக ஒரு குழு உறப்பினர்களை புறக்கணிக்கமாட்டார்கள். மாறாக உதவி செய்வதில் தயக்கம் காட்டுவார்கள். புறக்கணிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்ய பலர் உள்ளனர். என்ற எண்ணத்தினால் இவர்கள் உதவி செய்வதில் தயக்கம் காட்டுவார்கள்.

2. அடையாள புறக்கணிப்பு
இத்தகைய முறையில் தப்பெண்ணம் கொண்டவர்கள் தாங்கள் வெறுப்பவர்களுக்கு சிறு, சிறு உதவிகளைச் செய்வார்கள். பின்பு இதைக்காட்டி பெரிய உதவி செய்ய மறுத்துவிடுவார்கள். தான் அவர்களுக்கு ஏற்கனவே உதவி செய்துவிட்டேன் என்று பேசுவார்கள்.

3. எதிர் மறையான புபுறக்கணிப்பு 
தப்பெண்ணம் சமூகத்தில் வெவ்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. இது தேவையற்ற துன்பத்தையும், பிரச்சினையையும், பிளவையும் ஏற்படுத்துகின்றது. சமூகத்தில் தப்பெண்ணம் அதிகரிக்கும் போது அதன் ஒற்றுமையும், நிலைப்புத்தன்மையும் பாதிக்கப்படுகின்றது. அதன் காரணமாக்தான் சமூகவியல் அறிஞர்கள் தப்பெண்ணத்தை தடுப்பதற்கான பல வழி முறைகளை ஏற்படுத்தியுள்ளார்கள். அவை வருமாறு.

1.கொள்கை வெறிச்சங்கிலித் தொடர் தகர்த்தல் (Breaking Chain of Bigotry) : குழந்தைகள் பிறக்கும் போதே தப்பெண்ணத்துடன் பிறப்பதில்லை. குழந்தைகளிடம் தப்பெண்ணங்கள் உருவாக்கப்படுகின்றன. உண்மையில் பெற்றோர்கள் இதல் முக்கிய பங்கு வகிக்கின்றார்கள். வழி வழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சூழ்நிலையமைப்பு சிறப்புடையதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சூழ்நிலையமைப்பு முன்மாதிரியாகத் திகழ்தல் மேற் கூறிய முறைகள் மூலமாக தப்பெண்ணங்கள் பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு செய்கின்றன. ஆனால் உளவியல் அறிஞர்கள், குழந்தைகள் பெற்றோர்கள் உறவு முறையில் நேரடியாக குறுக்கிட முடியாது. அதற்கு மாறாக பெற்றோர்கள் வயப்படுத்தி, தப்பெண்ணங்களின் விளைவுகளை எடுத்துக்கூறி அவற்றை குழந்தைகளிடம் வளர்க்காமல் இருப்பதற்காக வழிமுறைகளை வளர்க்க வேண்டும். ஆசிரியர்களும் தப்பெண்ணங்களை களைவதற்கு முக்கிய பங்கெடுக்க வேண்டும்.

2. குழுக்களிடையே நேரடித் தொடர்பு : பிற மதம், இனக்குழு உறுப்பினர்களிடம் உறவு முறை ஏற்படுத்திக் கொள்வதில் சில இடையூறுகள் உள்ளன. வெள்ளையர்கள், கறுப்பர்களுடன் உறவு முறையை ஏற்படுத்திக் கொள்வதற்கு தயங்குகின்றார்கள். பிராமணர்கள் தாழ்ந்த சாதி மக்களிடம் தொடர் கொள்ள மறுக்கிறார்கள். இச்செயற்பாடு தற்பொழுது சிறிது, சிறிதாக மாற்றமடைந்து கொண்டு வருகின்றது.

3. வலுவான ஆற்றல் அல்லது அறிவாற்றலின்மை : பொதுவாக மக்கள் தகவல்களை தன்னிச்சையாக பதிவுசெய்வார்கள். இதனை சுட்டிக்காட்ட லாங்கர் மற்றும் அவருடன் பணிபுரிபவர்கள் வலுவான அறிவாற்றல் மற்றும் அறிவாற்றலின்மை என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளனர். ஆறிவாற்றலின்மை தப்பெண்ணத்தை வளர்ப்பதற்கு உதவுகின்றது. உதாரணமாக, ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட குழுவைச் சார்ந்தவனாக இருந்தால் அக்குழுவைப் பற்றிய தமது வலுவற்ற எண்ணமானது அவரைப் பற்றி மதிப்பிடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.




Post a Comment

Previous Post Next Post