கொள்கை பரப்பலானது தற்கால சமூகத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. மனிதர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், போராட்டங்களை உருவாக்கவும் சிக்கல்களை தீர்க்கவும் இதனால் முடியும். கொள்கை பரப்பல் என்பதற்கு பொதுவாக கெட்ட பெயர்தான் உண்டு. இது கடந்த காலத்தில் ஏற்பட்டதாகும். போர் மேகங்கள் சூழ்ந்த காலத்தில் ஒரு நாடு இதனை மிகவும் வலிமையுடன் பிற நாடுகள் மீது சுமத்தும் தூண்டுதல் முறைகளைப் பயன்படுத்தி மக்களது எண்ணங்களை மாற்றி அதன் மூலம் அவர்களது நடத்தையை மாற்றுவதை கொள்கை பரப்பல் எனலாம். ஒரு தனிமனிதரோ. குழுவோ திட்டம் தீட்டி தகுந்த முறைகளைப்பயன்படுத்தி பொதுமக்கள் கருத்தினையும் எண்ணங்களையும் மாற்றியமைக்க கொள்கை பரப்பல் மூலம் முயல்வதுண்டு.
L.W.Bubi எனும் அறிஞர் கூறுவதாவது 'கருத்தேற்றத்தினை ஒழுங்கான முறையில் பயன்படுத்திப் பொதுமக்களது மனப்பான்மையைக் கட்டுப்படுத்தவும் அதன் மூலம் அவர்களது நடத்தையை கட்டுப்படுத்தவும் அதற்கு முயலும் தனி மனிதரோ அன்றி மனிதர்களோ எடுத்துக்கொள்ளும் முயற்சியோ கொள்கைபரப்பல்"
கொள்கைபரப்பும் விதங்கள்.
கொள்கை பரப்பல் இரு வகைப்படும். நேரடியாக கொள்கை பரப்பல்,மறைமுகமாக கொள்கை பரப்பல், நேரடியான கொள்கை பரப்பலில் ஒளிவு மறைவு காணப்படுவதில்லை. மக்களின் மனப்பான்மையை மாற்றும் வகையில் கருத்தேற்றம் நேரடியாக பயன்படுத்தப்படும். பெரும்பான்மையான விளம்பரங்களும், அரசியல் கட்சிகளின் கூட்டங்களும் இவ்வகையை சார்ந்ததாகும். மறைவான கொள்கை பரப்பலில் மக்கள் அறியாவண்ணம் அவர்கள் எதிர்பாராத வகைகளில் கருத்தேற்றம் ஏற்படுவதுண்டு. இதற்கு உதாரணமாக சில மத கொள்கை பரப்பலை கூறலாம். மூவகை நோக்கங்களுடன் கொள்கைபரப்பல் ஏற்படுகின்றது அவை.
மாற்றத்திற்கான கொள்கைபரப்பல்: மக்களது மனப்பான்மையையும் மேற்கொள்ளப்படுகிறது. இதனை எண்ணங்களையும் மாற்றத்திற்கான மாற்றி அமைப்பதற்கென கொள்கைபரப்பல் எனலாம். கொள்கைபரப்பல் மூலம் மக்களின் பழக்கவளக்கங்களை மாற்றி அமைப்பதற்கு சிலர் முயல்வதுண்டு, ஒரு சில சமயங்களில் பிற சமயங்களைச் சார்ந்தவர்களின் சமய எண்ணங்களை மாற்ற கொள்கைபரப்பில் ஈடுபடுவதையும் நாம் காண்கின்றோம்.
பிரித்தாளும் கொள்கைப்பரப்பல்: மக்களிடையே காணப்படும் கூட்டுறவு, ஒற்றுமை, நட்புணர்ச்சி, போண்றவற்றை குலைச் பிளவை உண்டுபண்ணி தமது ஆதிக்கத்தை அவர்கள் மேல் நிலைநிறுத்த வி கைக்கொள்ளும் கொள்கை இதுவாகும். சில அரசியல் கட்சிகள் இவ்வாறு பிரி கொள்கைப்பரம்பரலை பின்பற்றுகின்றது.
திடமாக்கும் கொள்கைப்பரப்பல்: மக்கள் ஏற்கனவே கொண்டுள்ள மனப்பான்மையையும், பழக்கங்களையும், எதிர் நோக்கும் பயன்களையும் இன்னும் உறுதியுடன் கடைப்பிடிக்கத்திடமாக கொள்கை பரம்பல் பயன்படுகிறது. குடும்பம், கல்வி நிலையங்கள் அதன் உறுப்பினர்கள் மேலும் திடமாக கருத்துக்களில் நிலைத்திருக்க இவ்வகை கருத்து பரம்பல் உதவுகின்றது.
கொள்கைப்பரப்பலை மூவகையாக பிரித்தாலும் நடைமுறையில் இவை ஒருங்கிணைந்தே பயன்படுத்தப்படுகின்றது. கொள்கைப்பரப்பில் மனித இதயங்களை வெல்வதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்படுகின்றது. இதயம் ஒன்றை விரும்பினால் நமது வயது அதற்கு குறுக்காக வருவதில்லை.
மனித தேவைகள், விருப்பங்கள் பற்றிய கருத்தேற்றங்களை மக்கள் எளிதாக ஏற்றுக்கொள்வர். ஒவ்வொரு மனிதனும் குறைவின்றி சமூகத்தில் கீர்த்தியும்,செல்வாக்கும் பெற்று வாழ வேண்டும் என்று விரும்புகின்றான். இவற்றை அடைவதற்கு வழிவகுக்கும் கருந்தேற்றங்களும் நம்பிக்கையூட்டும் கருத்தேற்றங்களும் அவனால் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இதனை மனதில் கொண்டே ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் அதிக வாக்குறுதிகளை மக்களுக்கு அள்ளி வளங்குகின்றன.
கொள்கைப்பரப்பில் ஈடுபடுவோர் அனைவரும் தமது கருத்துக்கள், நம்பிக்கைகள், பொருட்கள் ஆகியவையே மிகச் சிறந்தது என்றும் மற்றயவை குறைவுடையன என்றும் கூறத் தொடங்குகின்றனர்.
திரும்பத் திரும்ப ஒரு கருத்தை வெளியிடுதல் கொள்கைப் பரப்பில் பயன்படுத்தப்படும் மற்றொரு முறையாகும். வாணிபத்துறையில் மீண்டும் மீண்டும் விளம்பரங்களை செய்தித்தாழ்களில் வெளியிடுவதுடன் வானொலி, திரைப்படங்கள் போன்றவற்றினையும் இதற்கென பயன்படுத்திக் கொள்கின்றனர். மீண்டும் மீண்டும் ஒரே வகையான எண்ணங்களையும், கருத்துக்களையும் மனிதர்கள் முன்பு வைத்தால் அவர்கள் மனதில் இவைகள் கருத்தேற்றப்படுகின்றன.
சில சோப்புகளை திரைப்பட நடிகைகள் பயன்படுத்துவதாக விளம்பரப்படுத்துவதையும், விளையாட்டு வீரர்கள் கூறும் நற்சான்றிதளை விளம்பரத்தில் பயன்படுத்துவதையும் நாம் காணலாம் இவை எல்லாம் கொள்கை பரப்பலே.
கொள்கை பரப்பலில் உள்ள விதிகள்.
கொள்கை பரப்பல் நன்மையானதாகவோ அல்லது தீன்மையானதாகவோ இருக்கலாம் ஆனால் அது தீய வழியில் பயன்படுத்தும் போது அதை தடுத்த நிறத்தும் ஆற்றலை நாம் ஏற்படுதிக் கொள்ள வேண்டும். கீழ்வருவன இதில் உள்ள விதிகளாகும்.
1. ஒரு கருத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என விரும்பினால் தொடர்ந்து தடையின்றி அதனை எடுத்து கூறிக் கொண்டே இருக்க வேண்டும்.
2. நாம் வெளியிட விரும்பும் கருத்தைப் பற்றி விவாதிக்க கூடாது. எத்தகைய நிலையிலும் நம் கருத்திற்கு எதிர்மாறான கருத்து இருக்க முடியும் என ஏற்றுக்கொள்ளக்கூடாது.
3. கூடியவரையில் நாம் பரப்பலிரும்பும் கருத்தை பொதுமக்களது பிற தேவைகளோடும், விருப்பங்களோடும் இணைந்து வெளியிட வேண்டும் தமது தேவைகளின் அடிப்படையிலேயே மக்கள் பிறரது கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்றார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்
4. தமது கருத்துக்களை மக்களுக்கு விளங்க கூடிய வகையில் வெளியிட வேண்டும்.
5. மக்கள் நம் கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலை உடையவர்களாக இருந்தால் நேரடியாகவே அவர்களிடம் தம் கருத்துக்களை வெளியிடலாம். அவர்களிடம் இம் மனநிலை இல்லையாயின் மறைமுகமாக நம்கருத்தை எத்திவைக்கலாம்.
6. நீண்டகாலம் நிலைத்திருக்ககூடிய வகையில் கொள்கை பரப்பல் செய்ய வேண்டும் எனின் குழந்தைகளிடம் கொள்கை பரப்பல் செய்யப்பட வேண்டும் கல்வியோடு கலந்து கொடுக்கப்படும் கொள்கை பரப்பல் மனதில் ஆழமாக பதியும்.
மக்கள் கருத்து
பொது மக்கள் கருத்து தற்போது மிகவும் வலிமை வாய்ந்ததாக காணப்படுகின்றது. மக்களாட்சி முறை நாட்டில் அரசாங்கத்தை அமைத்து நாடு முன்னேறி செல்வதற்கு பொதுமக்கள் கருத்து இன்றியமையாததாகும்.
பொதுமக்கள் கருத்து என்றால் என்ன என்று திரு. டூப் என்பவர் கூறும் போது ஒரே சமூகக்குழுவில் பல உறுப்பினர்கள் இருக்கும் போது ஓர் விவகாரம் குறித்து மக்கள் கொண்டிருக்கும் நோக்கத்தை குறிப்பதுதான் பொதுமக்கள் கருத்தாகும்'. கிம்பால் எஸ் என்பவர் கூறும் போது 'பொது மக்கள் கருத்து என்பது பொதுமக்கள் சில காலம் வைத்திருக்கும் கருத்தாகும்.
பொதுமக்கள் கருத்து உருவாகுவதற்கு பல காரணிகள் உள்ளன. அது இறுதி வடிவம் எடுப்பதற்கு முன்னால் பல படிகளை தாண்டவேண்டியுள்ளது.
பொதுமக்கள் கருத்துக்கான ஊடகங்கள்.
செய்தித்தாழ்கள் : தற்காலத்தில் செய்தித்தாழை எல்லோரம் விரும்பி படிக்கின்றார்கள். உலகின் பல்வேறு இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை மட்டும் செய்தித்தாழ்கள் வெளியிடுவதில்லை. தங்கள் கருத்துக்களையும் வெளியிடுகின்றன. பல்லேறு செய்தித்தாழ்கள் ஒரு சிக்கல் குறித்து பல்வேறு வகையிலான கருத்தை வெளியிடும். செய்தித்தாழ்கள் பொதுமக்களை சரியான பாதையிலும், தவறான பாதையிலும் இட்டுச்செல்லலாம்.
திரைப்படங்கள்: திரைப்படங்கள் பொதுமக்கள் கருந்து உருவாவதற்கான வலிமை மிக்க தொடர்பு சாதனமாகும். திரைப்படம் பார்ப்பவர்களை அது அதிகம் பாதிக்கும். இந்த ஊடகத்தின் மூலம் கல்வி அறிவு இல்லாதவர்களையும் ஊக்குவித்து அவர்களின் கவனத்தை குறிப்பிட்ட திசை நோக்கி திருப்பலாம்.
வானொலி: செய்தித்தாழ்களை விட வானொலி மிக வலிமை வாய்ந்தது. வானொலியை மக்கள் விரும்பி கேட்கின்றார்கள். வானொலி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.
தொலைக்காட்சி: தற்காலத்தில் பொதுமக்கள் கருத்தை உருவாக்கும் மிக முக்கியமான ஊடகமாக தொலைக்காட்சி காணப்படுகின்றது. தொலைக்காட்சி மூலம் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கும் கேட்பதற்கும் முடியுமாதலால் இது அதிக பயன் வாய்ந்ததாகும். இதன் காரணமாகத்தான் இது எல்லா நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றது.
Post a Comment