இது மனவெழுச்சிப் பிரச்சினைகள் பற்றியதாகும். ஒருவரின் உளநடத்தைப் பேணல் மிக முக்கியமாகும். கட்டிைைமப் பருவத்தில் மளவெழுச்சி அதீத நிலையில் காணப்படுவதால் ஒரு சிறு தூண்டி போதுமானது. கட்டிைைமப் பருவமானது குழலுடன் இசைவு காணும் பருவம் ஆகையால் பண்பாடு, குடும்பச் சமூக நியமங்கள் ஆகியன தகர்ந்து புதிய சிந்தனையோட்டங்கள், செயற்பாடுகள் ஏற்படலாம். பின்வரும் தனியாள் மனவெழுச்சி சார்பான பிரச்சினைகளாகும்.


பயம்: இவை பொதுவாக பெளதீக, சமூக தொடர்புகளான் ஏற்படகின்றது.

பதகளிப்பு Anxiety: இது பதற்ற உணர்வு ஆகும். இது ஏற்படுவதற்கு ஆசிரியர்களின் பாரபட்சம், அதிக வீட்டு வேலைகள், கேலி செய்யப்படல் பாதுகாப்பின்மை போன்ற செயற்பாடுகளினால் அமையலாம்.

உன்மையை மறுத்தல்: உன்மை நிலையை திரை போட்டு மறைக்கும் ஒரு பாதுகாப்பு நுண்முறைக் கவசம் ஆகும்.

பகைமை, ஆக்கிரமிப்பு: ஒருவன் ஒன்றன் பின் ஒன்றாக பல மன முறிவுகளை எதிர் நோக்கும் போது கோபம், பகைமை, ஆக்கிரமிப்பு ஆகிய உரைவுகள் ஏற்படும்.

பின்னடைவு : ஒருவர் தாம் எதிர் கொள்ளும் சம்பவங்களுக்கு ஈடுகொடுக்க முடியாத போது முதியவராக இருந்தாலும் சிறுபிள்ளைகளின் செயல்களில் ஈடுபடுவார். இது உளக்கோளாறுகளை ஏற்படுத்தும்.

பதட்டம், பொறுமையின்மை: பதட்டமுள்ள மாணவர்கள் கல்வியல் கவனம் செலுத்த முடியாது. பாதுகாப்பிைைம. குடும்ப பராமரிப்பு இன்மை, பெற்றோரை இழத்தல், பயங்கர சம்பவங்களை அனுபவித்தல், வறுமை ஆகிய காரணங்கள் ஒருவரை பதட்டத்துக்கு ஆட்படுத்துகின்றது.

மனமறிவு : ஒருவர் தனது தேவையை அடைய முடியாவிட்டால் மனமுறி ஏற்படுகின்றது. வசதியான வாழ்க்கை அற்றும் போதல், தனிமை, நன்பர்களால் நிராகரிக்கப்படுதல்,காதலில் தோல்வி, குறைவான அடைவ போன்ற காரணிகளினால் இது ஏற்படும்.

தகைப்பு: ஒருவர் உயிரியல் உளவியல் குழுலுக்குப் பொருத்தப்பாடு அடைய முடியாமல், உளநெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல், ELA உளச் சஞ்சலுத்துக்கு உட்படுவதே தகைப்பு ஆகும். தனைப்பு ஏற்படும் போது ஒருவரின் நரம்பு மண்டலமும் கானில் கரப்பிகளும் தாண்டப்படுகின்றன. இதனால் உடலின் தசை நார்கள் இறுகுதல், ஓமோன்கள் அதிகமாக சுரத்தல், இதயம் வேகமா அடித்தல், நா உலர்தல், மூச்சுத் திணறல் ஏற்படல், தேகம் நடுங்குதல், வியர்த்தல் போன்றவை ஏற்படும். இதன் காரணமாக தலையிடி, உணவு அதிகமாக அல்லது குறைவாக உட்கொள்ளல்,உயர் இரத்த அளுத்தம், இருதய நோய், சருமம் சார்ந்த நோய்கள் போன்றவை ஏற்படும்.


Personal guidance advice in tamil


தகைப்பை தடுக்கும் வளிமுறைகள்

  • சிறந்த வாழ்க்கைத் தத்துவம், சமய நம்பிக்கை, விழுமியங்கள், சாதகமான மனப்பாங்கு ஆகியவற்றை விருந்தி செய்து, மனத்திருப்பதியுடனும்,
  • மனச்சாந்தியுடனும் வாழ்க்கை நடாத்துதல்.
  • கடந்த காலத்தைப் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் கவலைப்படாமை
  • தனது அற்றலுக்கு அப்பால் பட்ட விடயங்களில் ஈடுபடாதிருத்தல்
  • நெருக்கடி நிலைமையை பொறுமையுடன் எதிர்கொள்ள பழக வேண்டும்.
  • அதிக வேலைப்பளுவை ஏற்படுத்தாமை
  • புகைத்தல், மதுபானம் போன்றவற்றை தவிர்த்தல்
  • நன்பர்களையும், குடும்ப உறவுகளையும் பேணல்
  • நல்ல போசாக்குள்ள உணவை உட்கொள்ளல்
  • நேகப்பியாசங்களில் ஈடுபடல்


தரவுகள் சேகரித்தல்

ஆலோசகர் தரவுகளைச் சேகரிப்பதற்கு பொருத்தமான சோதனைகள். நுட்பங்கள் ஆகியவற்றைத் தெரிவு செய்து பயன்படுத்துதல் வேண்டும். ஆலோசகர் எதிர்வு கூறுதல், தெரிவு செய்தல், வகைப்படுத்தல், மதிப்பீடு செய்தல், ஆகிய நான்கு வகை சோதனைகள் பயன்படுகின்றன.


எதிர்வு கூறல் : இச்சோதனைகள் அடைவு மட்டம், உளச்சார்பு, நுண்மதி, ஆளுமை ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்பாலம் சார்பான தீர்மானங்களை மேற்கொள்ள பயன்படும்.

தெரிவு செய்தல்: இது கல்விநெறி, பாடத்தெரிவு, தொழிற்தெரிவு ஆகியவற்றுக்கும், பிரச்சினை தீர்க்கும் அணுகு முறைகளை தெரிவு செய்யவும் பயன்படும்.

வகைப்படுத்தல்: இச்சோதனைகள் பகுப்பாய்வு செய்து ஒருவரின் உளப்பனிபுகள், அடைவு மட்டம், நுண்மதி ஆகியவற்றின் அடிப்படையில் குழுக்களாளப் பிரிப்பதற்கு பயன்படும்.

மதிப்பீடு செய்தல்: இச்சோதனைகள் பாடநெறி, செயற்பாடுகள்,ஆலோசனைப் பெறுபேறுகள் ஆகியவற்றில் பெற்ற முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதற்கு பயனுடையன.




Post a Comment

Previous Post Next Post