தனிமனிதர்களுடனும், குழுக்களுடனும் தனிமனிதன் கொள்ளும் உறவுமுறைகளை அறிவியல் பூர்வமாக கற்பதில் சமூக உளவியல் கவனம் கொள்கிறது. சமூக அறிவியல்களில் அது வளர்ந்து வரும் ஓர் அறிவியலாகும். தனிமனிதர்களின் மனித நடத்தையை ஆராய்வதில் அறிவியல் முறைகளை அது பயன்படுத்துகிறது என்பதில் ஐயமில்லை. எனவே சமூக உளவியல் மேற்கொள்ளும் ஆராய்ச்சி முறைகளை அறிந்திருப்பது அவசியமாகும்.
ஆரம்பகால சிந்தனையாளர்கள் சமூக தொடர்பு முறைகளை அனுமானிக்கும் போது மனிதன் இயல்புத்தன்மையை வாழ்க்கையின் பிற உண்மைகளைப் போன்றும் இயற்கையை விபரிப்பது போன்றும் விபரித்தனர். தற்கால சமூக உளவியலாளர்கள் மனித நடத்தை முறைகளைக் கட்டுப்படுத்த வருமுன் உரைக்கவும் வேண்டும் என்பதனால் அவற்றை அறிந்து உயர்ந்து கொள்ள அறிவியல் முறைகளைப் பின்பற்றுகின்றனர். அதன் அணுகுமுறை தத்துவரீதியிலானதாகவும் செய்முறைக் குட்பட்டதாகவும் உள்ளது.
அறிவியல் முறையிலான எல்லாவகை துறைகளும் 3 நிலைகளில் வளர்ச்சி அடைந்தன.
- 1. தத்துவம் உருவாக்கும் நிலை
- 2. தரவுகளை உற்று நோக்கி குறிப்பெடுத்துக் கொள்ளல்
- 3. சோதனை சாசையும் ஆராய்ச்சி நிறுவனங்களும்
ஆராய்ச்சி நடத்துவதற்கான ஆராய்ச்சி கூடங்களை ஏற்படுத்திய பிறகுதான் நமது நாட்டில் சமூக உளவியல் துறை முழு வளர்ச்சியடையும் என்று கூறலாம். 1908 யில் Mcgougall, Ross ஆகியோர் எழுதிய நூற்கள் அதிகம் தத்துவரீதியானவையாகும். சமூக உளவியலில் தரவுகளை சேகரிக்கப் பயன்படுத்தும் அறிவியல் பூர்வமான சோதனை முறைகளையும் அவற்றின் நிறைகளையும், குறைகளையும் பார்ப்போம்.
Observation method ( உற்று நோக்கல் முறை )
பொதுவாக எல்லா இயற்கை அறிவியல்களும் உற்று நோக்கல் முறையை அடிப்படையாகப் பயன்படுத்துகின்றன. எல்லா சமூக சூழல்களும் சோதனை முறையில் கற்றுக்கொள்ள முடியாது எனவே சமூக உளவியலிலும் தரவுகள் சேகிரிப்பதற்கும் இம்முறை இப்போது பயன்படுத்தப்படுகின்றது. எப்படி உற்றுநோக்க வேண்டும் என்பதற்கு கணிசமான முறைகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். சமூக உளவியல் கற்கும் பொருள் வெளிப்படையானதாகவும், அகவயமானதாகவும் இருப்பதனால் தரவு சேகரிப்பதைப் பொறுத்து உற்று நோக்கல் வேறுபடும்.
உடல் கூறுபடியிலான மாற்றங்கள், முகத்தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் சமூக நடத்தைகள் என்று சில தரவுகள் சேகரிக்க வேண்டியிருக்கும் வேறு சில தரவுகள், அகவயமான சிந்தனைகள், உணர்வுகள், விருப்பங்கள், நோக்கங்கள் என்பவை போன்றிருக்கும். இந்த வகையிலான தரவுகளை சேகரிப்பதற்கு அகவயமான உற்று நோக்கல் போன்ற பல்வேறு முறைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். சரியான முறையில் உற்று நோக்குவதற்கு வேறு சில கருவிகளம் பயன்படுத்தப்படுவதுண்டு பார்வைக் கண்ணாடிகள், திரைப்படம், ஒலிப்பதிவுக் கருவிகள், போன்றவைகளும், மாதிரிக் கூறுகளும் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் உற்று நோக்கல் போன்றவைகளும் பயன்படுத்தப்படுவதுண்டு.
Interview method ( பேட்டி முறை )
சமூகச் சிக்கல்கள் குறித்து வித்தியாசமான மற்றும் வேறுபாடான கருத்துக்கள் கொண்டிருக்கும் தனிமனிதர்களைப் புரிந்து கொள்வதற்கு தற்காலத்தில் பேட்டி முறை பரவலாக பயன்படுத்தப்படுகின்றது. இது தவிரவும் வேறுகாரணங்களுக்கும் இம் முறை பயன்படுத்தப்படுகின்றது. நோய்களை கண்டறிந்து மருத்துவம் பார்க்கவும், வேலைக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கவும் இம்முறை பணன்படுத்தப்படுவதுன்டு.
சமூக உளவியல் ஆய்வுக்காக பேட்டி முறை பயன்படுத்தப்படுகின்றது. பேட்டி முறையில் பேட்டி காண்பவர் பேட்டி அளிப்பவரை நேரடியாக சந்தித்து தகவல் சேகரிக்க விரும்புவார். தகவல் அளிப்பவரிடம் இருந்து அவரின் கருத்துக்களையும், நம்பிக்கைகளையும் அறிந்து கொள்வதுதான் பேட்டி முறையாகும். பேட்டியின் போது பேட்டி காண்பவர் பேட்டி அளிப்பவரின் நடத்தை முறைகளை கவனித்துக் கொண்டாலும்பேட்டி அளிப்பவரிடம் முறைப்படி கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதிலை குறிப்பெடுத்துக் கொள்வதுதான் முக்கியமாக செயலாகும்.
இவ்வகைப் பேட்டி முறை என்பது மனிதர்களின் ஊடாட்ட முறையாக விளங்குகின்றது. இதில் வாழ்க்கைப்பங்கும் முறையாக விளங்குகின்றது. பேட்டி காண்பவர் பேட்டி காணும் பொருள் குறித்து ஏற்கனவே பயிற்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.
மக்கள் கணக்கெடுப்பு, மதுவிலக்கு, குடும்ப கட்டுப்பாடு, போன்றவற்றில் மக்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயங்களை அறியவும் பேட்டி முறை பயன்படுத்தப்படுவதுண்டு, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கேள்விகளை கேட்பதாகவும் இப்பேட்டி முறை இருக்கலாம். அல்லது தனிமனிதர்களுடன் நீண்டநேரம் பேரி தகவல்களை அறிந்து கொள்வதாகவும் இருக்கலாம். பேட்டி என்பது மிகக் கவளமாக முன்பே தயாரிக்கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டு இந்த வரிசைக்கிரமமாக கேட்கப்பட வேண்டும். பேட்டி காண்பவரிடமிருந்து ஒழுங்கான பதிலை பெறுவதற்கு இந்த முறை உதவியாக இருக்கும்.
பேட்டி காண்பது ஒரு கலையாகும் பேட்டி பட்டி காண்பவரிடம் மனம் திறந்து தைரியமாக தன் அபிப்பிராயங்களை வெளியிட வேண்டுமென்றால் இருவருக்குமிடையை சுமுகமான உறவு ஏற்பட வேண்டும். இதன் மூலம் பேட்டி காணிபவர் சில விசேட தகுதிகளையும் தொழில் முறை பயிற்சியையும் பெற்றவராக இருக்க வேண்டும். பேட்டி மூலம் கிடைக்கும் தகவலின் நம்பகத்தன்மை குறித்தும் பேட்டிமுறையில் உத்தி குறித்து குறை கூறுவோரும் உண்டு. சமூக உறவுகள் குறித்தும் நடத்தைகள் குறித்தும் நமக்கு ஏற்பட்டுள்ள நமக்கு ஏற்பட்டுள்ள அறிவுக்கு. பேட்டி காணும் உத்தி மூலம் ஏற்பட்ட ஆய்வுதான் காரணம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
பேட்டி முறையின் வகைகள்.
பேட்டி முறைகள் பல வகைப்படும். அதன் எண்ணிக்கை, நேரம்,அணுகு முறை என்பவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படும்.
நெறிமுறை பின்பற்றாத பேட்டி : இவ்வகைப் பேட்டி முறையை கட்டுப்படுத்தாத பேட்டி அல்லது வழிவகுக்காத பேட்டி அல்லது முறைப்படியில்லாத பேட்டி என்றும் அழைக்கலாம். முன்பே தீர்மானிக்கப்பட்ட கேள்விகள் இதில் கேட்கப்படுவதில்லை. பேட்டி அளிப்பவர் தனது அபிப்பிராயத்தையும், நோக்கத்தையும் விளக்குமாறு இப்பேட்டியில் ஊக்குவிக்கப்படுவார்.
நெறிமுறையிலான பேட்டி : இந்த மாதிரியான பேட்டி முறையில் தரமான உத்தி முறைகளும், முன்பே தீர்மானிக்கப்பட்ட கேள்விகளும் பயன்படுத்தப்படும். இம்மாதிரி பேட்டியில் வினாப்பட்டியல் பயன்படுத்தப்படும்.
குவிமையைப் பேட்டி : குவிமையைப் பேட்டி மற்ற வகைப் பேட்டிகளிலிருந்து கீழ்க்குறிப்பிடும் தன்மைகளில் இருந்து வேறுபடும்.
1. குறிப்பிட்ட சூழ்நிலையில் தொடர்புடையவர்களிடம் இப்பேட்டி நடைபெறுகின்றது.
2. பேட்டிக்கு முன்பே இத்தகைய சூழ்நிலைகள் ஆராயப்பட்டிருக்கும்.
3. இபபேட்டியில் சேகரிக்கப்படும் தரவுகள், எடுகோள்கள் குறித்து ஆராயப்படும். எல்லைக் குறித்தும் பேட்டிக்கு முன்பே பேட்டி காண்பவரிடம் விளக்கப்பட்டிருக்கும்.
4. பேட்டி தருபவரின் அனுபவ பொருளின் மீதுதான் பேட்டி கவனம் செலுத்தும். பேட்டி அளிப்பவருக்கு கூறப்பட்டிருக்கும் சூழ்நிலை குறித்து விளக்கம் அளிப்பதற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கும் இந்த குவிமைய பேட்டிக்கு அதிகப்படியான கவனமும் முன்னேற்பாடும் தேவைப்படுவதனால் பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை.
திரும்பதிரும்ப செய்யப்படும் பேட்டி : இந்த மாதிரியிலான பேட்டி சமூகம் மற்றும் உளவியல் முறைகளின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சித் தன்மையை அறிந்து கொள்வதற்காக மேற்கொள்ளப்படும். ஒரு குறிப்பிட்ட நடத்தைக் கோலங்கள் அல்லது சமூக குழுலை ஏற்படுத்தும் செயல் முறைகள், காரணிகள், மனப்பான்மை ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கு இவ்வகைப் பேட்டிகள் நடத்தப்படும். திரும்ப திரும்ப நடத்தப்படும் பேட்டி உத்திகள் பொருட்செலவும், சக்தியம் நேரமும் தேலைப்படும் என்றாலும் சில சம்பவங்கள், செயல்கள் எவ்வாறு நடக்கின்றனவோ அவ்வாறே கற்றுக்கொள்வதற்கு இம்மாதிரியான பேட்டி முறைகள் இன்றியமையாததாகும்.
அகழ்வளவு பேட்டி : உணர்வு நிலையற்ற தன்மையிலுள்ள தரவுகளையும் ஆளுமை இயக்கத்தையும் ாண்டுதலுணர்ச்சியையும் இந்த பேட்டி முறையால் அறிந்து கொள்ள முடியும். இப்பேட்டியில் அதிகம் உணரச்சி வாய்ந்த தகவல்களை சுதந்திரமாக வெளியிடுவதற்கு இப்பேட்டியில் வாய்ப்பளிக்கப்படும். ஆய்வாரள் இந்த பேட்டியில் சிறப்பு பயிற்சி பெற்றவராக இல்லையெனில் அகழ்வளவு பேட்டி நடத்துவது நல்லதல்ல.
Post a Comment