ஆலோசனை எனப்படுவது ஒழுங்காக அமைக்கப்பட்ட பல படிகளைக் கொண்ட செயல் முறை எனலாம். பாடசாலை அல்லது கல்லூரி மாணவர்கள் நேராக ஆலோசகரைச் சந்தித்து தமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆலோசனைச் செயல் முறை பயன்படுத்தப்படுகின்றது.  ஆலோசனைச் செயல் முறையானது ஒரு நாள் தொடக்கம் பல மாதங்கள் வரை நிகழலாம். ஒருவரின் ஆளுமை, அவரின் பிரச்சினையின் தன்மை ஆகியவற்றுக்கேற்ப ஆலோசனைச் செயல் முறையின் நுட்பங்களும், யுக்திகளும் வேறுபடலாம்.

பிரச்சினைகள் பொதுவாக எளிமையானதாக அல்லது சிக்கல் வாய்ந்தவையாக காணப்படலாம். மாணவர்களுக்கு பொதுவாக கல்விசார்ந்த பிரச்சினைகளே காணப்படும். சிக்கலான பிரச்சினைகளக்கு ஆலோசனை நிபுணரும், சாதாரண பிரச்சினைகளுக்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஆலோசனைச் சேவையை வளங்கலாம். மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆலோசனைச் சேவை மூன்று வகைப்படும். அவை


உத்தரவிடும் ஆலோசனைச் செயல் முறை:

இது ஆலோசகர் முறை எனவும் கூறப்படும். E.G.Williamson என்பவர் இதன் முன்னோடியாவார். இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு,

  • ஒருவருக்கு ஆலோசனை தேவைப்படுகின்றதா என்பதை ஆலோசகரே தீர்மானிப்பார்.
  • புத்தி கூறல், தீர்மானம் எடுத்தல் போன்றவற்றை ஆலோசகர் மேற்கொள்வார்.
  • முன்வைக்கப்படும் ஆலோசனை தீர்வை நாடி ஏற்றுக்கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்படுவார்.
  • பிரச்சினையின் ஆய்வு, முடிவு, விளைவு போன்வற்றுக்கு ஆலோசகரே பொருப்பேற்க வேண்டும்.


இவ்வாலோசனைச் சேவையின் படிமுறைகள் வருமாறு

1. ஆலோசனை நாடியும், ஆலோசகரும் சந்தித்து ஆலோசனையை ஆரம்பித்தல்
2. பிரச்சினையைப் பகுத்தாராய்தல்
3. பிரச்சினையை தொகுத்தாராய்தல்
4. பிரச்சினைக்குரிய காரணிகளைத் தீர்மானித்தல்
5. பிரச்சனையைத் தீர்க்கும் முறையையும்,அதன் பெறுபெறுகளையும் ஆலோசகர் எதிர்வு கூறல்
6. பிரச்சினையைத் தீர்க்கும் யுக்தியை செயல்படுத்துதல்
7. பிரச்சினையை தீர்வுகண்ட பின்னரும் தொடர்ந்து கண்காணித்தல்

மேற்கூறிய படிமுறையில் சில தடங்கல்களை எதிர்நோக்கக் கூடும். இம்முறையில் உள்ள பிரதான தீமையாக ஒரு தனிநபருக்கு ஏற்படும் சிறு பிரச்சினைகளுக்கும் அவர் ஆலோசகரை நாடினால் அவரின் ஆளுமை விருத்தியில் பாதிப்பு ஏற்படும்.


உத்தரவிடா ஆலோசனைச் செயல் முறை:

Carl Rogers இதன் முன்னோடியாவார். பின்வருவன இதன் முக்கிய அம்சமாக காணப்படும்.

  • ஆலோசனை நாடியின் புலக்காட்சியின் அடிப்படையில் ஆலோசகர் அவரின் பிரச்சினையை இளம்காண்பார்.
  • ஆலோசனை நாடி தன்விலுள்ள குற்றங்களையும், சிறப்பியல்புகளையும் ஏற்று தனது பிரச்சினையை அணுகுவார்.
  • ஆலோசனை நாடி தனது பிரச்சினையின் விளக்கம் பெற்று அதனை தீரப்பதற்கு ஆலோசகர் உதவி வழங்குவார்.


இவ்வாலோசனைச் சேவையின் படிமுறைகள் வருமாறு

1.ஆலோசகர், ஆலோசனை நாடி ஆகிய இருவருக்கும் இடையில் புரிந்துணர்வு ஏற்படல்
2. பிரச்சினையை ஆலோசகரின் உதவியுடன் ஆராய்தல்
3. பிரச்சினைக்குரிய காரணிகளை ஆலோசகரின் உதவியுடன் இனங்காணல்
4. பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆலோசகரால் முன்வைக்கப்பட்ட யத்திகளை ஆராய்ந்து அவற்றுள் மிகப் பொருத்தமானதை ஆலோசனை நாடி தெரிவு செய்தல்
5. ஆலோசனை சேவையை முடிவுக்கு கொண்டுவரல்
6. ஆலோசனை நாடி பிரச்சினையை தீர்க்க முற்படுதல்
7. ஆலோசகர் தொடர்ந்து கண்காணித்தல்

ஆலோசனை நாடி மீது பயம், திகில், அதிர்ச்சி, மனக்குழப்பம் போன்றவை ஏற்படுத்தக்கூடிய சொற்களை தவிர்த்தல் வேண்டும்.


Counseling procedures in tamil


குழு வழிகாட்டல் அலோசனைச் சேவை

இவ்வாலோசனைச் சேவை பெருமளவில் பாடசாலைகளில் பயன்படுத்தப்படுகின்றது. சமூகத்தில் பல குழுக்களைக் காணலாம் அது முக்கியமும் கூட அது போலவே பாடசாலையிலும் பல குழுக்கள் காணப்படுகின்றன . ஒருவர் ஒரு குழுவில் சேரும் போது அக்குழுவின் நடத்தை இயல்புகளுக்கு ஏற்ப அவரின் தனிப்பட்ட இயல்புகளும் மாற்றமடையும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பாடசாலையில் ஒரே வகுப்பறையைச் சேர்ந்த மாணவர்கள் ஆகியோரை குழுக்கள் என அழைக்கலாம்.


இச்சேவையின் படிமுறைகள்

  • குழுவில் பங்குகொள்வோரை தெரவு செய்தல்
  • குழு ஆலோசனை அமர்வை குறிப்பிட்ட தினத்தில் ஆரம்பித்தல்
  • ஆலோசகர் தன்னை குழுவுக்கு அறிமுகப்படுத்தி ஆலோசனையை திசைப்படுத்தல்
  • கலந்தாலோசிக்கும் போது குழு அங்கத்தவரின் பொருத்தமற்ற நடத்தைகளைக் கட்டுப்படுத்தல்.
  • குழ அங்கத்தவர்களின் எண்ணங்களை தெளிவாக வெளிப்படுத்த ஆலோசகர் வஊக்குவித்தல்
  • குழ ஒருமுகமாகத் தீர்வுகளை எடுப்பதற்கு ஆலோசகர் உதவி வழங்கல்
  • பிரச்சினையின் தீர்வு தொடர்பாக ஆலோசகர் சில காலம் தொடர்ந்து கண்காணித்தல்.


குழுவழிகாட்டலுக்கு பயன்படுத்தப்படும் வினாப் பெட்டி ஆய்வு முறை

குழுவில் உள்ள மாணவர்கள் தமது பெயரை வெளிப்படுத்தாமல் தமது பிரச்சினைகளை எழுதி ஒரு பெட்டியில் இடுவர். ஆலோசகர் எழுந்தமானமாக இதை எடுத்து கலந்துரையாடுவார். இது அனைத்து மாணவருக்கும் பயன்தரும். இவ்வாலோசனை முறையில் பின்வரும் நன்மைகள் காணப்படும்.

  • ஆலோசகரின் நேரம் மீதப்படுத்தப்படும்
  • மாணவர்கள் தமது குழுவில் உள்ள அனைவரது பிரச்சினைகளையும், அபிப்பிராயங்களையும் கேட்கலாம்.
  • மாணவரிடையே ஆளுமை விருத்தி ஏற்படும்
  • மற்றவரின் தேவையையும், உணர்வையும் அறிய சந்தர்ப்பம் கிடைக்கும்
  • தனது உளவியல் தேவையை பூர்த்தி செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

குழு ஆலோசனையின் பிரதிகூலங்கள்

  • இங்கு இரகசியம் பேணப்படுவதில்லை
  • தமது தனிப்பட்ட பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சந்தர்ப்பங்கள் குறைவு
  • குழு ஆலோசனையின் போது தடங்கல்கள் ஏற்படும்
  • தனியாள் ஆலோசவை போன்று குழு ஆலாசனை இருக்காது

Post a Comment

Previous Post Next Post