தரவட்டம் ஓர் அறிமுகம்
- 1962-ல் முதல் தரவட்டம், ஜப்பானில் தொடங்கப்பட்டது.
- 1980-ல் இந்தியாவில் Hyderabad BHEL நிறுவனத்தில் முதல் தரவட்டம் தொடங்கப்பட்டது.
- 1982-ல் இந்தியாவில் தரவட்டத்தை வழிநடத்தும் QCFI எனும் அமைப்பு நிறுவப்பட்டது.
தரவட்டம் என்பது தொழிலாளர்கள் தங்கள் பணியிடத்திலுள்ள பிரச்சனைகளை சிறு குழுவாக சேர்ந்து வாரந்தோறும் கலந்தாலோசித்து படிப்படியாக சரிசெய்வதே ஆகும்.
தரவட்டம் ஏன் தேவை?
- பணியிடத்திலுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண
- உற்பத்தியை அதிகரிக்க
- வேஸ்ட்டை குறைக்க
- செலவை குறைக்க
- வேலையை எளிமைப்படுத்த
- தொழிலாளர்களது ஈடுபாட்டை அதிகரிக்க
- சிந்தனைத் திறனை வளர்க்க
- பாதுகாப்பினை மேம்படுத்த
- திறமைகளை வெளிப்படுத்த
- மகிழ்ச்சியான பணியித்தை உண்டாக்கிட
- நிறுவனத்தை உயர்த்திட
1.பிரச்சனைகளை இனம் காணுதல்
பொதுவாக தரவட்டத்தில் "Brainstorming" முறையில் கண்டறியப்படும் பிரச்சனைகள் A,B,C என மூன்றாக பிரிக்கப்படும்.
- A வகை : குழு உறுப்பினர்களால் தீர்க்கக்கூடியது
- B வகை : வேறு டிபார்ட்மெண்டின் உதவியுடன் தீர்க்கக்கூடியது
- C வகை : நிர்வாக உதவியுடன் தீர்க்கக்கூடியது
2. பிரச்சனைகளை தேர்ந்தெடுத்தல்
உற்பத்தி துறையில் காணப்படும் பெரும்பாலான பிரச்சனைகளை கீழ்க்கண்ட ஆறினுள் வகைப்படுத்தலாம்.
- பராமரிப்பு
- பாதுகாப்பு
- உற்பத்தி
- வேஸ்ட்
- இரம்
- செல்வு
இதில் உறுப்பனர்கள் தாங்கள் அதிக முக்கியமாக கருதும் பிரச்சனைக்கு - 6 மதிப்பெண்ணும்
குறைந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் பிரச்சனைக்கு -1 மதிப்பெண் என முறையே ஆறிலிருந்து ஒன்று வரை வழங்கி ரேட்டிங் அட்டவணை தயார் செய்யவேண்டும்.
A,B,C என மூன்றாக வகைப்படுத்திய பிரச்சனைகளில் முதன்மையானதை தேர்ந்தெடுப்பதே பிரச்சனைகளை தேர்ந்தெடுத்தல் ஆகும்.
A-Type பிரச்சனைகள் குழு உறுப்பினர்களால் தீர்க்கக்கூடியதென்பதால் பொதுவாக இதற்கு முன்னுரிமை தர வேண்டும்.
3.பிரச்சனையை தெளிவுபடுத்துதல்
இந்த தரவட்டத்தில் நிமாபில் வேஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அதுகுறித்து விரிவாக விளக்க வேண்டும். (தேவையேற்படின் வீடியோ பயன்படுத்தலாம்.)
எடுத்துக்காட்டு : நிமாபில் வேஸ்ட் என்றால் என்ன?
ஸ்பின்னிங்கில் இழை அறுபடும் போது (Breaks) பாபினிலிருந்து வரும் ரோவிங், நூலாகாமல் Suction tube வழியாக Waste collection பகுதியைச் சென்றடையும், இதையே நிமாபில் வேஸ்ட் அல்லது எப்பின்னிங் வேஸ்ட் என்கிறோம்.
4.அலசி ஆராய்தல்
பிரச்சனைகளுக்கான காரணங்களை ஏன், எதற்கு, எங்கே, எதனால், எப்படி ஏற்படுகிறது, அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்னவென விரிவாய் ஆராய்வதே அலசி ஆராய்தல் ஆகும்
5.காரணங்களை கண்டறிதல்
பிரச்சனைகளுக்கு சாத்தியமுள்ளதாக கருதப்படும் காரணங்களை (Probable cause) மனிதன், இயந்திரம், பொருள், வேலைமுறை, சூழ்நிலை என இடத்திற்கேற்றவாறு பிரிப்பதே காரணங்களை கண்டறிதல் ஆகும்.
Post a Comment