தன்னால் இயன்றவரை அதிகபட்சம் பிள்ளைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அவர்களைப் பார்த்துக்கொள்வதும் பாதுகாப்பதும் பெற்றோர்களின் பிரதான பொறுப்பாகும். இந்த பொறுப்பினை நிறைவேற்றாவிடின் அது பிள்ளைகளை புறக்கணிக்கும் செயலாக அமையும். குறிப்பாக பிள்ளைகளுக்கு கல்வி வழங்காமை, மருத்துவ சிகிச்சைகளை வழங்காமை, அவர்களுடன் அன்புடன் நேரத்தைக் கழிக்காமை, பாதுகாப்பற்ற இடங்களுக்கு அனுப்புதல், பாதுகாப்பற்ற செயற்பாடுகளில் ஈடுபடுத்தல் என்பனவற்றை புறக்கணிப்புக்கு உதாரணங்களாகக் கூற முடியும்.
உடல் ரீதியிலான துஷ்பிரயோகம்
வன்முறையுடன் கூடிய அதிகாரத்தைப் பயன்படுத்தி பிள்ளை மீது உடற்காயத்தை ஏற்படுத்தினாலோ அல்லது வேதனையுடன் கூடிய உடல் பாதிப்பை ஏற்படுத்தினாலோ அதனை உடல் ரீதியிலான துஷ்பிரயோகம் என்று கூறுவர். உதாரணமாக பிள்ளையை அடித்தல், தீயினால் சுட்டுக் காயப்படுத்தல், துன்புறுத்தி சித்திரவதை செய்தல் என்பன உடல் ரீதியிலான துஷ்பிரயோகம் என்று கூறப்படும்.
மன ரீதியிலான துஷ்பிரயோகம்
பிள்ளையின் உணர்வுகளுக்கும் புத்திக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் மன ரீதியாகவோ, மன வளர்ச்சிக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் விதமாகவோ செயற்படுதல் மன ரீதியிலான துஷ்பிரயோகம் என்று கூறப்படும். இது தற்செயலாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ திட்டமிட்டு மேற்கொள்ளப்படலாம்.
- அவமானத்தை ஏற்படுத்தும் விதத்தில் மோசமாக
- நடத்தப்படல் அச்சுறுத்தப்படல்
- சத்தமிட்டு ஏசுதல்,
- கேலிப் பேசுதல்
- அடிக்கடி இழிவுப்படுத்தல்
- அன்பு, பாசம், நம்பிக்கை போன்ற மன ரீதியிலான தேவைகளை நிறைவேற்றாதிருத்தல்,
- பயமுறுத்தல்
- தனிமைப்படுத்தல்
என்பனவற்றை மன ரீதியிலான துண்புறுத்தல் என்று கூறுவர்.
பாலியல் துஷ்பிரயோகம்
பிள்ளைகளை அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதனை பாலியல் துஷ்பிரயோகம் எனப்படும்.
- பாலுறவுக்காக மட்டுமன்றி பிள்ளையை சுய இன்பத்திற்காக பயன்படுத்தல்,
- அணிந்திருக்கும் ஆடைகளுக்கு வெளியில்பிள்ளையின் உடலை தொடுவது,
- பிள்ளைகளை காமப்பார்வையுடன் பார்ப்பது,
- பாலியல் புகைப்படங்களுக்காக பிள்ளைகளைப் பயன்படுத்துவது,
ஒன்லைன் (Online) முறையில் பிள்ளைகளின் நிர்வாணத்தை புகைப்படம் எடுத்தல் அல்லது வீடியோ எடுத்தல், அவற்றை பகிருதல் (sharing). அல்லது பகிருவதற்காக அச்சுறுத்தி கப்பம் கேட்டல், மற்றும் பிள்ளைகளுக்கு சமூக ஊடகாங்களினூடாக பாலியல் நடத்தைகளுக்கு பிள்ளைகளை ஊக்கப்படுத்துவது, அதேபோன்று மன ரீதியில் அவ்வாறான செயற்பாடுகளுக்கு பிள்ளைகளை தயார்ப்படுத்துவது என்பன இவற்றுக்கு உதாரணமாகும்.
சுரண்டல்
இலாபம் ஈட்டுவதற்காக அல்லது நலன்களைப் பெறுவதற்காக எவராவது ஒருவர் பிள்ளைகளைப் பயன்படுத்துவார்களாயின் அதனை சுரண்டல் எனக் கூறுவர். இதனால் அநீதியையும், துன்புறுத்தலையும், பிள்ளை எதிர்கொள்கின்றது.
- பாலியல் தொழிவில் ஈடுபடுத்தல்
- பிள்ளைகளை விற்பனை செய்தல் பிள்ளைகளை ஆபாசக் காட்சிகளுக்கு பயன்படுத்தல்
- பிள்ளைகளை அடிமைகளாக வைத்திருத்தல்
- யுத்த நடவடிக்கைகளில் பிள்ளைகளை சிப்பாய்களாக பயன்படுத்தல்,
- போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்திற்கு பயன்படுத்தல் மற்றும் குற்றச்செயல்களில் பிள்ளைகளை ஈடுபடுத்தல்,
- ஆபத்தான வேலைகளில் பிள்ளைகளைப் பயன்படுத்தல்
என்பனவற்றை உதாரணமாகக் குறிப்பிட முடியும். வயதுவந்த ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் இவ்வாறான செயல்களில் பிள்ளைகளை ஈடுபடுத்த முடியும்.
பெண்களை துன்புறுத்துவது தவறான செயலாகும்!
உடல் ரீதியிலான வன்முறை
யாராவது ஒருவர் திட்டமிட்டு உடலில் வேதனையையோ, காயப்படுத்தலையோ, உடற்கோளாறுகளையோ ஏற்படுத்தக் கூடியவாறு அல்லது மரணம் சம்பவிக்கக் கூடியவாறு ஒரு பெண் மீது தாக்குதல் நடத்துவார்களாயின் அதனை உடல் ரீதியிலான வன்முறை என்று கூறுவர்.
- தள்ளிவிடுதல்,
- கூந்தலைப் பிடித்து இழுத்தல்.
- கன்னங்களில் அறைதல்,
- கால்களால் உதைத்தல்,
- கழுத்தைப் பிடித்து இறுக்குதல்,
- கத்தியால் குத்துதல்,
- தீக்காயம் ஏற்படுத்தல்,
- அடிக்கடி அடித்தல்,
- நஞ்சு ஊட்டுதல்,
- மரணம் விளைவித்தல்,
இவற்றை உடல் ரீதியிலான வன்முறை என்று எம்மால் கூற முடியும்.
பாலியல் வன்முறை
ஒரு பெண் மீது அப்பெண்ணின் விருப்பம் இன்றி மேற்கொள்ளப்படும் பாலியல் செயல் பாலியல் வள்முறை என்று அழைக்கப்படும்.
ஒரு பெண் நோய், இயலாமை, மது அல்லது போதை பொருட்களின் தாக்கம் (உளவியல் பொருட்கள்), வயது, மிரட்டல், அச்சுறுத்தல் அல்லது அழுத்தம் காரணமாக சம்மதிக்கவோ அல்லது மறுக்கவோ இயலாத நிலையில் ஒரு பாலியல் செயலில் ஈடுபடுவதோ அல்லது பாலியல் செயலில் ஈடுபடுவதற்கு முயற்சிப்பதோ பாலியல் துஷ்ப்பிரயோகம் என கருதப்படும்.
மேலும் வலிமிகுந்த மற்றும் கோரும் பாலியல் செயல்களும், உதாரணமாக நிர்வாண புகைப்படங்கள்/வீடியோக்களை ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் பகிர்வதும் பாலியல் வன்முறை அல்லது பாலியல் நுஷ்பிரயோகமாக கருதப்படுகிறது.
பாலியல் செயல்களின் போது தமக்கு விருப்பம் இல்லை என்று கூறும் சந்தர்ப்பங்களில் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்காமல் பெண்ணை ஆதரவற்ற நிலைக்குட்படுத்தினால் அதுவும் பாலியல் வன்முறை என்று கூறுவர்.
மன ரீதியில் மேற்கொள்ளப்படும் வன்முறைகள்
யாராவது ஒருவர் ஒரு பெண்ணின் கதந்திரமான அமைதியான வாழ்க்கையை அழிப்பர்காயின் அதற்காக அழுத்தம் கொடுப்பார்களாயின், அதனை மன ரீதியில் நிகழ்த்தும் வன்முறை என்று கூறுவர்.
- அச்சுறுத்தல்,
- உடலில் காயங்கள் ஏற்படக் கூடியவாறான கருவிகளைப் பயன்படுத்தியோ அல்லது பயன்படுத்தாமலோ அச்சறுத்தல்,
- அவமானப்படுத்தும் விதத்தில் நடத்தினாலே,
- இழிவுப்படுத்தி வெட்கப்படுத்தும் விதத்தில் நடத்தப்பட்டாலோ,
- தகவல்களைப் பெற அல்லது பணம் மற்றும் இதர விடயங்களை பெறுவதற்கு உள்ள உரிமையை நிராகரித்தால்,
- ஒன்லைன் ரீதியாவோ அல்லது ஒன்லைன் அற்ற ரீதியாகவோ தொல்லைகள் கொடுத்தால்,
- தான் விரும்புபவர்கள் குறிப்பாக குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களிடமிருந்து விலக்கி வைத்தால்,
அவற்றை மன ரீதயில் நிகழ்த்தப்படும் வண்முறைக்கு உதாரணமாகக் கூற முடியும்.
சமூக பொருளாதார வன்முறை
ஒரு பெண்ணின் சமூக பொருளாதார சுதந்திரத்திற்கு இடமளிக்காமல், அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு செயற்பாட்டையும் சமூக பொருளாதார வன்முறை என்று கூறுவர்.
- பொது சொத்துக்களை அடைவதற்கு
- பணத்தை உரித்தாக்கிக் கொள்ள,
- தான் விரும்பும் தொழிலை செய்ய,
- கல்வியைப் பெற,
- தொழிற்சார் மட்டத்தினை மேம்டுபத்துவதற்கு
சொத்துக்களை உரித்தாக்கிக் கொள்ள பெண்களுக்குள்ள உரிமை மற்றும் வாய்ப்புகள் என்பனவற்றை இழக்கச் செய்வதுடன், அப்பெண்ணின் விருப்பம் இன்றி சொத்துக்களை மற்றவர்கள் மீது உரித்தாக்குவதும் இதற்கு சிறந்த உதாரணமாகக் கூற முடியும்.
Post a Comment