உளச்சார்பு என்பது ஒருவனது கற்கும் ஆற்றலைக் குறிப்பிடுவது. அதாவது ஒருவனுக்குப் பொருத்தமான வசதிகள் போதுமான அளவுக்கு அளிக்கப்படின் அவன் பெறக்கூடிய உயர் அடைவை உளச்சார்பு குறிப்பிடுகின்றது. ஆனால் அடைவு என்பது ஒருவன் ஈடுபட்ட கற்றிலின்பாற் பெற்றுக் கொண்டதைக் குறிப்பிடுகின்றது. பிறப்புரிமையாகப் பெறப்பட்ட சில பண்புக்கூறுகள் ஒவ்வொரு குறிப்பான உளச்சார்புக்கும் அடிப்படையாக உள்ளன எனவும் இது ஆளுக்காள் வேறுபட்டுக் காணப்படும் எனவும் உளவியல் ஆய்வுகள் புலப்படுத்தியுள்ளன.
"ஒரு குறிப்பிட்ட துறையில் கவர்ச்சியும், அத்துறைசார்ந்து திறமையுடன் செயல்படக்கூடிய ஆர்வமும், அதில் தேர்ச்சிபெறக் கூடிய தகுதியும் ஒருவரிடம் உள்ளதே உளச்சார்பு" என பின்ஹாம் குறிப்பிடுகிறார்.
ட்ரக்ஸ்லர்(Traxler) என்பவர் “ஒரு துறையில் அறிவையோ, செய்திறனையோ அல்லது இவ்விரண்டினையுமோ போதுமான பயிற்சிக்குப் பின்னர் ஒருவன் பெறக்கூடிய தகுதியைக் குறிக்கும் பண்புகளின் தொகுதியே உளச்சார்பு" என வரையறுக்கிறார்.
உளச்சார்புச் சோதனைகள்
ஒருவரிடத்தே காணப்படும் உள்ளார்ந்த இயலுமைகளைக் கண்டறிவதற்கும் அளப்பதற்கும் பயன்படுத்தப்படும். ஒரு வகைச் சோதனையே உளச்சார்புச் சோதனை/ நாட்டச் சோதனை எனப்படுகிறது.ஒருவர் யாதேனுமொரு செயல் தொடர்பான பயிற்சியில் ஈடுபட்டதன் பின்னர் அச்செயலில் ஈடுபடுவதன் வெற்றி அல்லது வெற்றியின்மை தொடர்பாக எதிர்வு கூறுவதற்காகவே இச்சோதனை நடத்தப்படுகிறது. ஒருவரது எதிர்கால ஆற்றல்கள் தொடர்பாக தற்காலத்தில் செய்யப்படும் எதிர்வு கூறலே உளச்சார்புச் சோதனை மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
உதாரணம்:- வங்கி ஊழியர்களை ஆட்சேர்ப்பதற்காக உளச்சார்புச் சோதனைகள் நடத்தப்படுதல்.
உளச்சார்பை அளவிடும் சோதனைகளை மூன்றாகப் பிரிக்கலாம்.
1. பொது உளச்சார்புச் சோதனை
2. பலவகை உளச்சார்புச் சோதனை
3. சிறப்பு உளச்சார்புச் சோதனை
1. பொது உளச்சார்புச் சோதனை(The Measuring Personal Abilities)
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பணியாளர் துறை உருவாக்கிய பொது உளச்சார்பு சோதனை அடுக்கு (The General Aptitude | Test Battery - GATB) இவ்வகையைச் சார்ந்தது.
2. பல்வகை உளச்சார்புச் சோதனை Differential Aptitude Tests)

கீழே காணும் எட்டு உட்சோதனைகள் உள்ளன. இவை ஒருவரிடம் உள்ள பல்வேறு உளச்சார்புகளை அளவிட்டு. எத்துறைகளில் உளச்சார்பு மிகுந்தும், குறைந்தும் காணப்படுகின்றன என்பதைத் தெரிவிக்கின்றன. ஒருவரது ஆற்றல்களின் ஒட்டுமொத்த வடிவுருவத்தை இவ்வகைச் சோதனைகள் அளிக்கின்றன. இச் சோதனையானது 1947 இல் உருவாக்கப்பட்டு 1963 இல் திருத்தியமைக்கப்பட்டது. இதில் பல்வகை உளச்சார்புச் சோதனைகள்
அ. சொல் ஆய்வு (Verbal Reasoning) - இதனில் ஒப்பிடுதல் வகை உருப்படிகள் இடம் பெறுகின்றன.

ஆ. எண்ணாற்றல் (Nomerical Ability) - முக்கியமாகப் புரிந்து கொள்ளும் திறனைச் சோதிக்கும் வகையிலாக எண் கணக்குகள் இச்சோதனையில் இடம்பெறும்.
இ. கருத்தியல் ஆய்வு (Abstract Reasoning) - பிரச்சினையை உள்ளடக்கிய உருவங்கள் இதனில் தொடர்ச்சியாகத் தரப்படும்.
ஈ. இடத் தொடர்புகள் ( Special Relations) - காகிதத்தில் வரையப்பட்ட வடிவங்களைக் குறிப்பிட்ட முறையே மடித்தால் எத்தகைய முப்பரிமாணம் உள்ள உருவங்கள் தோன்றக்கூடும் என்று ஊகித்து எழுதுதல் இச் சோதனையில் இடம்பெறும்.
உ. பொறியியல் ஆராய்ந்தறிதல் (Mechanical Reasoning) - குறிப்பிட்ட செயல்களுக்கு உதவும் மிகப் பொருத்தமாக கருவியினைக் குறிப்பிடுதல்.
ஊ. எழுதுநர் தொழிலுக்கான வேகமும் துல்லியமும்
(Clerical Speed and Accurancy) - ஒவ்வொரு உருப்படியிலும் பல்வேறு குறியீடுகளின் காணப்படும். அவற்றில் ஒரு இணைப்பு மட்டும் காண்பிக்கப்படும்.
எ. மொழியைக் கையாளுதல் I (Language Proficiency I} - சொற்களின் பட்டியல் வழங்கப்படும். இதனில் தவறான எழுத்துக்களைக் கொண்ட சொற்களை இனங்கண்டு குறிப்பிட வேண்டும்.
ஏ. மொழியைக் கையாளுதல் II (Language Proficiency II) - கொடுக்கப்பட்ட வாக்கியம் 4 பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும். எந்தப் பிரிவு அல்லது பகுதியில் தவறு காணப்படுகிறது என்று சுட்டிக்காட்ட வேண்டும்.
3. சிறப்பு உளச்சார்புச் சோதனை (Special Aptitude Tests)

இவை குறிப்பிட்ட ஒரு துறையில் ஒருவருக்கு உளச்சார்பு உள்ளதா என்பதை அளவிட முற்படுகின்றன.
1) ஸீஷோரின் இசை உளச்சார்புச் சோதனைகள் (Seashcie's Musical Aptitude Tests) - இச்சோதனை ஒருவரின் இசைத்திறனையும் ஆர்வத்தையும் கண்டறியப் பயன்படுகிறது. இதில் அளவைகள் இசையைக் கேட்டல், பராட்டுதல், செயல்படும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. மொழி. மெட்டு,நேரம், ஆகியனவும் அளந்தறியப்படுகின்றன. இனம்,பண்பாடு எதுவாக இருந்தாலும் இவை பயன்படுகின்றன. இதில் சுருதி. சந்தம், மெட்டு, நேரம் இசைத்தட்டு மற்றும் நினைவு ஆகியன அளந்தறியப்படுகின்றன. மேலும் இசை பற்றிய அறிவும் இசை ஆர்வம், இசை உணர்வை வெளிப்படுத்தும் ஆற்றல் ஆகியனவும் அளந்தறியப்படுகின்றன.
2) பொறியியல் உளச்சார்புச் சோதனைகள் (Mechanical Aptitude Tests) - இவை எழுத்துச் சோதனைகளாகவோ, பல்வேறு பகுதிகளை இணைத்துப் பொருட்களை உருவாக்கும் உருவாக்கும் சோதனைகளாகவோ இருக்கக்கூடும். கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளின் உருவங்களை ஒன்று சேர்த்தால் எத்தகைய முழு உருவம் தோன்றும் என்பதனை ஊகித்தல், குறிப்பிட்ட செயல்களுக்கு எந்தக் கருவி உதவும் என நிர்ணயித்தல், இயக்க வேகம். பொறியியல் துறை பற்றிய விவரங்களின் அறிவு போன்றவை எழுத்துச் சோதனைகளில் சோதிக்கப்படும். பகுதிகளை ஒன்று சேர்த்து உருவாக்கும் சோதனையில் சைக்கிள், மணி, பூட்டு திருகு, எழுதுகோல் போன்றவற்றின் பகுதிகள் காணப்படும். இடத்தொடர்புச் சோதனைக்காக, 9 வளைந்த பகுதிகளாகப் பகுக்கப்பட்ட கட்டை, 27 சிறு கனவடிவங்களாக வெட்டப்பட்ட ஒரு பெரிய கனவடிவம் போன்றவை பயன்படுத்தப்படும்.
3)கற்பித்தல் உளச்சார்புச் சோதனைகள் (Teaching Aptitude Tests) - பல்வேறு ஆசிரியப்பணி சோதனைகளிலிருந்து உளச்சார்பை தொடர்பான பின்வருவனவற்றை, வெளிப்படுத்தும் உளச்சார்புச் பரிமாணங்களாக கற்பித்தல் ஊகித்தறியலாம்.
1. இளம் குழந்தைகளிடம் பரிவு மற்றும் அக்கறை
2.பொறுமை
3. படித்தறிவதில் பெரும் விருப்பார்வம் கொண்டிருத்தல்
4.கற்பித்தல் முறைகளையும், சாதனைங்களையும் அறிந்திருத்தல்
5.குழந்தைகளின் தன்மைகளைப் பற்றி அறிந்திடுவதில் ஈடுபாடு கொண்டிருத்தல்
1. இசை உளச்சார்புச் சோதனை
2. பொறியியல் உளச்சார்புச் சோதனை
3. இராணுவ உளச்சார்புச் சோதனை
4. எழுதுநர் உளச்சார்புச் சோதனை
5. கற்பித்தல் உளச்சார்புச் சோதனை
போன்றவை இப்பிரிவில் அடங்கும். இத்தகைய சோதனைகள் பெரும்பாலும் தொழில் வழிகாட்டலில் பயன்படுகின்றன.

நியமமாக்கப்பட்ட உளச்சார்புச் சோதனைகள்
1. புலமைசார் உளச்சார்புச் சோதனைகள் SAT அமெரிக்க ஐக்கிய குடியரசு.
2.வித்தியாச உளச்சார்புச் சோதனை NFER நிறுவனம்.
ஐக்கிய இராச்சிய
3. பொறிமுறை - தர்க்கிப்பு உளச்சார்புச் சோதனை அவுஸ்ரேலிய கல்விக் கவுன்சில்.
4. பேராசிரியர் தசநாயக்கா அவர்களால் க.பொ.த.உயர்தர மாணவரின் புலமைசார் உளச்சார்பை அளப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட உளச்சார்புச் சோதனை (1966)
உளச்சார்புச் சோதனை தயாரித்தல்
உளச்சார்புச் சோதனை தயாரிக்கையில் மாணவரது பொது உளச்சார்பையும், சிறப்பான உளச்சார்பையும் அளப்பதற்கு ஏற்றவாறு சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமானவாறு உளச்சார்புச் சோதனைகள் தயாரிக்கப்படும். பொது உளச்சார்புச் சோதனை தயாரிக்கையில் மாணவரது,
1. தர்க்கிப்புத் திறன்
2. ஒப்புமை காண் திறன்
3.வகைப்படுத்தும் திறன்
4. மொழித்திறன்
5. எண்சார்ந்த திறன்
போன்ற திறன்களை அளக்கத்தக்க வகையில் அவற்றைத் தயாரிப்பதில் கவனஞ் செலுத்த வேண்டும்.
Post a Comment