விளையாடுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி கலந்துரையாடுங்கள். குழந்தைகள் பயன்படுத்தும் விளையாட்டுப் பொருட்களானது எந்த வயதுப் பிரிவினருக்கும் என்பதனைப் பின்வரும் கட்டுரை  தெளிவுபடுத்துகிறது.


The importance of children playing in tamil


பிறந்தது முதல் 3 மாதங்கள் வரையில்

குழந்தையைக் கொஞ்சுதல். குழந்தையின் உணர்வுகளுக்கு பதில் வழங்குதல் போன்றவற்றின் மூலம் குழந்தைக்கும் தாயுக்கும் இடையில் சிறந்த நல்லுறவு விருத்தி அடையத் தொடங்கும். தாயுக்கும் குழந்தைக்கும் இடையில் விருத்தி அடையும் இந்த நல்லுறவானது குழந்தை பாதுகாப்பாக வளருவதற்கும் எதிர்காலத்தில் ஏனைய சிறுவர்களோடு நல்லுறவை விருத்தி செய்து கொள்வதற்கும் ஏதுவாக அமையும். 

இந்த வயதில் குழந்தையோடு செய்யக் கூடிய சில செயற்பாடுகள் கீழே தரப்பட்டுள்ளன. நீங்கள் ஏற்கனவே இச் செயற்பாடுகளை உங்களது குழந்தையோடு சேர்ந்து செய்வதாகவும் இருக்கலாம். 

  • இந்த வயதில் உங்களது குழந்தை உங்களது குரலைப் பெரிதும் விரும்புவர், குழந்தையோடு உரையாடுதல். குழந்தையை ஆட்டிய வண்ணம் தாலாட்டுப் பாடல் ஒன்றைப் பாடுதல். குழந்தையைப் பார்த்துச் சிரித்தல், போன்றவை நீங்கள் செய்யக் கூடிய மேலும் சில செயற்பாடுகளாகும். 
  • குழந்தை வேறு சத்தங்களைக் கேட்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்துங்கள் உதாரணம் ஒலி எழுப்பும் விளையாட்டுப் பொருட்களை ஒலி எழுப்பர் செய்தல். 
  • குழந்தையின் தொட்டிலின் மேல்ப் பகுதியில் சுழலும் இராட்டினம் போன்ற விளையாட்டுப் பொருட்களைக் கட்டி விடுதல். 
  • குழந்தைக்கு தெரியக் கூடிய வகையில் பல நிறங்களினாலான பொருட்களை வைத்தலும் அவற்றை அடிக்கடி குழந்தைக்குக் காட்டுதலும். 
  • குழந்தையின் படுக்கை அறையை அலங்கரித்தல். குழந்தையின் வ அதிகரிப்பதற்கு இணங்க இந்த அலங்காரங்களில் மாற்றத்தை ஏற்படுத்தித் முடியும்.


4 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையில் 

 இந்த வயதில் குழந்தைக்கு வழங்கும் விளையாட்டுப் பொருட்களானது அவர்களால் அங்கும் இங்கும் தூக்கிச் செல்லக் கூடியதாகவும்,குழந்தையின் கவனத்தை ஈர்ப்பதாகவும் இருத்தல் வேண்டும். இந்த விளைாயட்டுப் பொருட்களானது இலகுவில் பிள்ளையின் கையிற்குக் கிடைக்கக் கூடியதாகவும், அவர்களது ககைளால் தொடக் கூடியதாகவும், தேவைப்படின் அவற்றை வாயில் வைத்து சுவையைப் பார்க்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். நீங்களும் குழந்தையோடு சேர்ந்து விளைாயட்டுப் பொருட்களைத் தொடுதல்,அவற்றை வாயில் போடுதல் போன்றவற்றைச் செய்யுங்கள். இந்த வயதில் குழந்தையோடு செய்யக் கூடிய சில செயற்பாடுகள் கீழே வயது வரை தரப்பட்டுள்ளன. 

  • குழந்தையால் இலகுவில் நெருங்கி தனது கையில் எடுத்து வைத்துக் கொண்டு விளையாடக் கூடிய சில பொருட்களைக் கட்டிலின் ஒரு புறத்தில் வையுங்கள். 
  • குழந்தையை குப்புறத் திருப்பி படுக்க விடுங்கள். இப்போது குழந்தையை மற்றொரு புறமாகத் திரும்புவதற்கு அல்லது முன்னோக்கிச் செல்லுவதற்கு உற்சாகப்படுத்துங்கள். 
  • ஒலி எழுப்பும் விளையாட்டுப் பொருட்களில் இருந்து ஒலிகளை எழுப்புதல். 
  • குறிப்பிட்ட ஒரு தாளத்தோடு கைகளைத் தட்டுதல்.
  • நீங்கள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடக்கும் போது சுற்றுச் சூழலில் உங்களது கண்களுக்குப் புலப்படும் பொருட்களின் பெயர்களைக் குழந்தைக்குக் கேட்கும் வகையில் சொல்லுங்கள். இவ்வாறு செய்யும் போது குழந்தையால் சொற்களைத் தெளிவாகக் கேட்கக் கூடியதாக இருப்பதனால் குழந்தை பல சொற்களைப் புரிந்து கொள்ள ஆரம்பிக்கும்.



6 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரையில்

இந்த வயதில் குழந்தைகள் அங்கும் இங்கும் தவழ்ந்து திரிதல், உட்காருதல் போன்ற உடல் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுவர். எனவே குழந்தையின் கையிற்கு எட்டும் தூரத்தில் வைக்கப்படும் பொருட்கள் பாதுகாப்பானவையாக இருத்தல் வேண்டும். அதாவது அப்பொருடகளைக் கழந்தை தனது கையால் தொடக் கூடியதாகவும் வாயில் போடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். இந்த வயதில் குழந்தையோடு செய்யக் கூடிய சில செயற்பாடுகள் கீழே தரப்பட்டுள்ளன.

  • குழந்தை அங்கும் இங்கும் திரும்புவதற்குஏற்ற வாய்ப்புக்களை ஏற்படுத்துங்கள். அதாவது குழந்தை இலகுவில் நெருங்கக் கூடிய வகையில் பொருத்தமான சில பொருட்களை வையுங்கள். 
  • உங்களது உதவியுடன் உங்களைப் பிடித்துக் கொண்டு அல்லது வீட்டுப் பொருட்களைப் பிடித்துக் கொண்டு குழந்தை எழுந்து நிற்பதற்கு உதவி செய்யுங்கள். 
  • குழந்தையின் கையில் உள்ள பொருட்களை உங்களது கையிற்குத் தருமாறு குழந்தையிடம் கேட்டுக் கொள்வதோடு குழந்தை அவற்றை உங்களுக்குத் தருவதனை உற்சாகப்படுத்துங்கள். 
  • குழந்தைக்குப் பொருத்தமான ஏதாவது ஒரு பொருளைக் குழந்தையின் கையில் வழங்குங்கள். குழந்தை ஆரம்பத்தில் அப் பொருளைத் தூக்கி எறிவதனை உங்களால் காணக் கூடியதாக இருக்கும். இருப்பினும் குழந்தை அதனை மீண்டும் தேடிச் செல்லும். எனவே நீங்கள் மீண்டும் மீண்டும் ஏதாவதொரு பெருளைக் குழந்தையின் கையில் வழங்குங்கள். 
  • குழந்தை தனது கையில் தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் ஓடக் கூடிய வகையில் அமைந்த பொருட்களைக் குழந்தையின் கையில் வழங்குங்கள். 
  • கைகளைத் தட்டுவதற்கும் தனது கைகளை அசைத்து மற்றையவர்களுக்கு "டாட்டா காட்டுவதற்கும் சொல்லிக் கொடுங்கள். 
  • பல்வேறு உருவங்களுடன் கூடிய பொருட்கள் அடங்கிய பெட்டி ஒன்றைத் தயாரித்து அதனைக் குழந்தைக்கு வழங்கங்கள். பந்து, சிறிய விளையாட்டுப் பொருட்கள், பிளாஸ்டிக் அல்லது மரத்தினாளான பல்வேறு வடிவங்கள் போன்றவற்றை இப் பெட்டியில் போட்டுக் கொண்டால் மிகவம் பொரத்தமாக இருக்கும். இப் பொருட்களைப் பெட்டியில் இருந்து வெளியில் எடுத்தல், மீண்டும் பெட்டியினுள் போடுதல் என்னும் செயற்பாடுகளில் ஈடுபடுத்துங்கள்.  
  • மறைத்து வைக்கப்படும் பொருடகளைத் தேடிக் கண்டு பிடிப்பதில் இந்த வயதில் குழந்தை பெரிதும் அக்கறை செலுத்தும். எனவே குழந்தைக்குச் சொந்தமான ஏதாவது ஒரு பொருளை மறைத்து வைத்து விட்டு அப் பொருளைக் குழந்தையால் தேடிக் கண்டுபிடிக்க முடியுமா எனப் பாருங்கள். 




12 மாதங்கள் முதல் 18, மாதங்கள் வரை


இந்த வயதில் குழந்தையோடு செய்யக் கூடிய சில செயற்பாடுகள் கீழே தரப்பட்டுள்ளன. 
  • குழந்தையால் நடக்கக் கூடிய நிலை ஏற்படும் போது வருமாறு குழந்தையைக் குழந்தையை கட்டி அணைப்பதற்காக உற்சாகப்படுத்துங்கள். 
  • உங்கள் அருகில் சில பொருட்களை உங்களுக்குக் கொண்டு வந்து தருமாறு குழந்தையை உற்சாகப் படுத்துங்கள். 
  • ஒரு பந்தைக் குழந்தையை நோக்கி உருட்டி விட்ட பின்னர் மீண்டும் அதனை உங்களை நோக்கி உருட்டி விடுமாறு கூறுவதோடு பந்தை உருட்டுவதற்கு குழந்தையை உற்சாகப்படுத்துங்கள். 
  • இந்த வயதில் குழந்தை பொருட்களை அங்கும் இங்கும் எறிவதனைப் பெரிதும் விரும்பும். குழந்தை இவ்வாறாக பொருட்களைத் தூக்கி எறிவதன் விளைவாக ஏனைய குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படலாம் எனவே பொருட்களை எறிந்து குழந்தைகளோடு விளைாயடும் போது மிகவும் பாதுகாப்பான முறையில் விளையாடுதல் வேண்டும். 
  • உங்களது குழந்தையால் படிக் கட்டுகளில் ஏறுவதற்கு அல்லது பின்னால், பின்னால் நடந்து செல்வதற்கு முடியுமா எனப் பாருங்கள். 
  • பொருட்களை ஒன்றின் மீது ஒன்று அடுக்கிக் கொள்வதற்கு உங்களது குழந்தையை உற்சாகப்படுத்துங்கள். 
  • தனது உணவைத் தனியாக உண்ணுவதற்கும் ஒரு கோப்பையைப் பயன்படுத்தி தண்ணீர், பானங்கள் போன்றவற்றைக் குடிப்பதற்கும் குழந்தைக்குப் பழக்குவதோடு அவற்றைச் செய்வதற்கு உங்களது தூண்டுங்கள்.
  • குழந்தைக்கு  ஒரு ஒற்றையையும் தடிப்பான நுனியுடன் கூடிய பென்சிலையும் வழங்குங்கள். குழந்தையின் வயது 18 மாதங்கள் வரை ஆகும் போது குழந்தை கிறுக்குவதற்கு ஆரம்பிக்கும். 
  • நீங்கள் குழந்தையோடு சேர்ந்து எத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டாலும் குழந்தையோடு உரையாடிய வண்ணம் அவற்றைச் செய்யுங்கள்.


18 மாதங்கள் முதல் 24, மாதங்கள் வரை

இந்த வயதில் குழந்தை நடக்கவும் ஓடவும் ஆரம்பிக்கும். அவர்கள் மேலே ஏறுவதற்கும் மேலே இருந்து கீழே குதிப்பதற்கும் பெரிதும் விரும்புவர். அது போலவே பந்துகளை எறிந்து விளையாடுவதற்கு பந்துகளைக் காலால் அடித்து விளையாடவும் பெரிதும் விரும்புவர். சிலச் சில வேலைகளைத் தாமே செய்வதற்கும் முயற்சி செய்வார்கள் இருப்பினும் உங்களோடு விளையாடுவதனைக் குழந்தை பெரிதும் விரும்பும். இந்த வயதில் குழந்தையோடு செய்யக் தரப்பட்டுள்ளன. 
  • இழுக்கக் கூடிய விளயைாட்டுப் பொருட்களை அல்லது இழுத்துக் கொண்டு ஓடக் கூடிய விளையாட்டுப் பொருட்களைக் குழந்தைக்கு வழங்குங்கள். உதாரணம் : சில்லுகளுடன் கூடிய விளையாட்டுப் பொருட்களுக்கு ஒரு நூல் அல்லது கயற்றைக் கட்டி அவற்றை இழுத்துக் கொண்டு செல்வதற்கு குழந்தைக்கு உதவி செய்தல்.
  •  உயரம் குறைந்த இடங்களுக்கு ஏறவும் அவற்றில் இருந்து கீழே பாய்வதற்கும் குழந்தைக்கு வாய்ப்பளியுங்கள். 
  • உங்களது உதவியோடு படிக் கட்டுக்களில் ஏறவும் இறங்கவும் வாய்ப்பளியுங்கள். குழந்தைகள் படிகளில் ஏறி இறங்கும் போது அவாகள் இலகுவாகப் பிடித:துக் கொள்வதற்குப் பொரத்தமான கைப்பிடிகள் அல்லது வேறு ஏதாவது ஒழுங்குமுறை காணப்படுதல் வேண்டும். ] 
  • குழந்தை பந்தைத் தனது கால்களால் அடித்து விளையாடுவதற்குப் பொருத்தமான ஓரிடத்தை குழந்தைக்குத் தயாராக்கிக் கொடுங்கள். 
  • ஒரு பந்தையோ அல்லது வேறு ஏதாவது பொருளையோ குறி தவறாமல் வீசுவதற்குப் பழக்குங்கள். 
  • குழந்தைக்கு நிறப் பென்சில்கள், நிறச் சோக்குகள், ஒற்றைகள் போன்றவற்றை வழங்குங்கள். 
  • குழந்தைகளுக்கு கதைப் புத்தகங்கள் மற்றும் புத்தகங்களை வாசித்துக் காட்டுங்கள். 
  • குழந்தைக்கு மண் விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்பளியுங்கள்.


2 - 3 வயதுச் சிறுவர்கள் 

இந்த வயதில் குழந்தையோடு சேர்ந்து செய்யக் கூடிய சில செயற்பாடுகள் கீழே தரப்பட்டுள்ளன. 
  • இந்த வயதில் குழந்தை மூன்று சில்லுகளுடன் கூடிய சைக்கிள்களை ஓட்டும் திறனைக் கொண்டிருக்கும். 
  • இந்த வயதில் குழந்தை பல்வேறு துண்டுகளை ஒன்றிணைத்தும் அவற்றை வெவ்வேறாகப் பிரித்தும் விளையாடுவதனைப் பெரிதும் விரும்பும். 
  • பல்வேறு தன்மைகளுடன் கூடிய பொருட்களைத் தொடுவதற்கு குழந்தைக்கு சந்தர்ப்பம் வழங்குங்கள். அதாவது கரடுமுரடான மேற்தளத்தைக் கொண்ட பொருட்கள். மென்யைமான மேட் தளத்துடன் கூடிய பொருட்கள். சுருக்கங்கள் நிறந்த மேட் தளத்துடன் கூடிய பொருட்கள் என பலதரப்பட்ட பொருட்களைக் குழந்தை தனது கையால் கைளால் தொட்டுணருவதற்கு வாய்ப்பளியுங்கள். இத்தகைய பொருட்களை ஒரு பெட்டியில் போட்டு வைத்து விட்டு ஒரு தடவையில் ஒரு பொருளைக் குழந்தை தனது எடுத்து அதனைத் தொட்டுப் பார்த்த பின்னர் மீண்டும் உங்களது கையில் தருமாறு கூறுங்கள். அதன் பின்னர் குறிப்பட்ட பொருளின் மேட் தளத்தின் தன்மையைப் பற்றி குழந்தையோடு உரையாடுங்கள். 
  • வெற்று பிளாஸ்டிக் போத்தல் ஒன்றை எடுத்து அதில் நீர் நிரப்பி விளைாயடும் வாய்ப்பை குழந்தைக்கு வழங்குங்கள். 
  • ஒரு பந்தை ஒருவரிடம் இருந்து மற்றையவருக்கு எறிந்து விளையாடப் பழக்குங்கள். 
  • உயரம் குறைந்த இடங்களுக்கு ஏற விடுங்கள். 
  • குழந்தைக்கு கதைகள் சொல்லிக் கொடுங்கள். குழந்தையோடு உரையாடுதல், குழந்தையோடு சேர்ந்து பாட்டுப் பாடுதல் செயற்பாடுகளில் ஈடுபடுங்கள். நடனம் ஆடுதல் போன்ற 
  • மிகவும் இலகுவான முறையில் பொருத்தக் கூடியதும் 3-4 துண்டுகளுடன் கூடியதுமான சில பிரணணடந களைக் குழந்தையோடு சேர்ந்து பொருத்துங்கள். 


3 வயதுச் சிறுவர்கள் 

இந்த வயதில் குழந்தையோடு சேர்ந்து செய்யக் கூடிய சில செயற்பாடுகள் கீழே தரப்பட்டுள்ளன. 
  • 3 வயதான குழந்தைகள் ஓடுதல், ஊஞ்சல் ஆடுதல். பந்து விளையாடுதல் போன்றவற்றைப் பெரிதும் விரும்புவர். 
  • இசையுடன் பாடல்களைப் பாடுவதற்கும் பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடுவதற்கும் பெரிதும் விரும்புவர். 
  • ஏனைய சிறுவர்களுடன் சேர்ந்து விளையாட ஆரம்பிப்பார்கள். 
  • பெரியவர்களைப் பின்பற்றி அவர்களைப் போன்று நடித்துக் காட்டுவதனைக் குழந்தை பெரிதும் விரும்பும். எனவே தனது தாய், தந்தை, போன்றவர்களைப் போன்று நடித்துக் காட்டுவதற்குத் தேவையான உடைகள் போன்றவற்றை வழங்குங்கள். 
  • படங்களை வரைவதற்கும் நிறந் தீட்டுவதற்கும் பெரிதும் விரும்புவர். மப்பட்டுகள் மற்றும் பெம்மைகளோடு விளையாடுவதனைப் பெரிதும் விரும்புவர்.



4-5 வயதுச் சிறுவர்கள் 

இந்த வயதில் குழந்தையோடு சேர்ந்து செய்யக் கூடிய சில செயற்பாடுகள் கீழே தரப்பட்டுள்ளன. 
  • மேற் குறிப்பிட்ட எல்லா விளையாட்டுக்களையும் விளையாடுவதற்கும் தமது வயதை ஒத்த சிறுவர்களோடு சேர்ந்து பழகுவதற்கும் பெரிதும் விரும்புவர். 
  • பெரியவர்களைப் பின்பற்றி அவர்கள் செய்யும் விடயங்களைச் செய்யவும் அவர்களைப் போன்று நடித்துக் காட்டவும் பெரிதும் விரும்புவதோடு அதில் மிகுந்த திறமை படைத்தவர்களாகவும் காணப்படுவர். எனவே அவர்கள் பெரியவர்களைப் பின்பற்றி அவர்களைப் போன்று நடித்துக் காட்டுவதற்குத் தேவையான பொருட்களை வழங்குங்கள். அவர்கள் இதனைச் செய்வதற்கு குழந்தைக்கு ஊக்கமளியுங்கள். 
  • குழந்தையின் சிந்தனைத் திறனை விருத்தி செய்யும் வகையில் செயற்பாடுகளைச் செய்யுங்கள். உதாரணமாக ஒரே விதமான பொருட்களைத் தெரிவு செய்தல். வித்தியாசமானவற்றைத் தெரிவு செய்தல், சிந்தனையைப் பயன்படுத்திச் செய்யும் விளையாட்டுக்கள், நிறங்கள் மற்றம் எண்களைப் பயன்படுத்திச் செய்யும் விளையாட்டுக்கள் என பலதரப்பட்ட விளையாட:டக்களைச் செய்ய முடியும். இருப்பினும் இந்த விளையாட்டுக்கள் அனைத்தும் இலகுவானவையாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமான விடயமாகும். விளையாட்டக்களில் ஈடுபடும் போது குழந்தை எதையாவது தவறாகச் செய்து விட்டால் அதனைத் தவறானது எனக் கூறுவதிலும் பார்க்க அதனை அவ்வாறு செய்வதற்கான காரணம் என்னவெனக் கேட்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். சரி, பிழை பற்றிக் கூறிக் கொண்டிருப்பதிலும் பார்க்க கேள்விகளைக் கேட்பதன் மூலம் குழந்தயை ஊக்குவிக்க முடியும். 
  • ஏண்களை எண்ணிப் பழகுவதற்கும் தெரிவுகளை மேற்கொள்வதற்கும் தேவையானவற்றை வழங்குங்கள். 
  • உங்களது பிள்ளைக்கு சிறந்த கதைகளைச் சொல்லிக் கொடுப்பதோடு, குழந்தைக்கும் கதைகளைச் சொல்லுமாறு உற்சாகப்படுத்துங்கள். அத்துடன் கேள்விகளைக் கேட்பதற்கும் பிள்ளையைத் | கூறி அவர்களை தூண்டுங்கள். பிள்ளை கேட்கும் கேள்விகளுக்கு பதில் வழங்குங்கள். அவ்வாறு செய்யும் போது நீங்கள் அவர்களுக்கு நன்றாக செவிமடுக்கின்றீர்கள் என அவர்கள் புரிந்து கொள்ளுவார்கள்.


Post a Comment

Previous Post Next Post