பிள்ளைகளது வயதிற்குப் பொருத்தமான செயற்பாடுகள் எவை என்பதனை இனங் காணுங்கள். அவ்வாறு இனங்கண்ட செயற்பாடுகளைப் பிள்ளைகளோடு சேர்ந்து செய்யுங்கள் .


What are the age-appropriate activities for children in tamil



குழந்தையாக இருக்கும் போது 

நீங்கள் உங்களது குழந்தைக்கு உடைகளை அணிவிக்கும் போது, உணவூட்டும் போது, குளிப்பாட்டும் போது அந்த விடயங்கைளப் பற்றி குழந்தையோடு உரையாடுங்கள் உதாரணமாக குளிப்பாட்டும் போது குழந்தையைப் பார்த்து "என்னுடைய செல்லம் இப்போது குளிக்கிறீர்கள் தண்ணீர் மிகவும் சுகமாக இருக்கின்றதா? இதோ மொழி பாருங்கள் சவர்க்காரம் நாங்கள் சவர்க்காரம் ஊதி விளையாடுவோமா" போன்ற விடயங்களைக் கூறலாம்.

 குழந்தையோடு இருக்கும் போது பாட்டுப் பாடுதல் போன்றவற்றைச் செய்யுங்கள். இது குழந்தையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். 

குழந்தைக்குக் கதை சொல்லுங்கள் இந்த வயதில் நீங்கள் கூறும் விடயங்களைக் குழந்தையால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாவிடினும் கூட உங்களது குரலைக் கேட்பதற்கு குழந்தை பெரிதும் விரும்பும் அத்துடன் குழந்தை பல தரப்பட்ட படங்களைப் பார்ப்பதற்கு முக்கியமாக பல நிறங்களினாலான படங்களைப் பார்ப்பதற்குப் பெரிதும் விரும்பும்.

உங்களது குழந்தை பல தரப்பட்ட ஒலிகளை எழுப்பும் போது நீங்களும் அதற்குச் சமமான ஒலிகளை எழுப்புவதன் மூலம் குழந்தை மீண்டும் அந்த ஒலிகளை எழுப்புவதற்குத் தேவையான தூண்டுதல்களை வழங்குங்கள்

 குழந்தையின் உடல்ப் பகுதிகளைக் கற்றுக் கொடுக்கும் வகையில் அழகான ஒரு சோடி கண்கள். கிளி மூக்கு போன்றவற்றைக் கூறிக் கொண்ட ஒரு பாடலைப் பாடிக் கொண்டு குழந்தைக்கு அந்த உடல்ப் பகுதிகளைத் தொட்டுக் காட்டுங்கள் உதாரணமாக குழந்தையின் மூக்கையும் கால் விரல்களையும் தொட்டுக் காட்டுங்கள்.

 உடல் அசைவுகள் மூலம் உரையாடுவதற்கு குழந்தைக்குக் கற்றுக் கொடுங்கள். அதாவது கையை இடமிருந்து வலமாக அசைத்து இல்லை அல்லது வேண்டாம் எனக் கூறுவதற்கும் தலையை மேலுடம் கீழுமாக ஆட்டி ஆம் அல்லது வேண்டும் எனக் கூறுவதற்கும் கைகளை நீட்டி ஏதாவது ஒரு பொருளைத் தருமாறு கேட்டுக் கொள்வதற்கும் கற்றுக் கொடுங்கள்.


குழந்தை நடக்க ஆரம்பிக்கும் வயதில் 

விளையாட்டுத் தொலைபேசி ஒன்றைப் பயன்படுத்தி கதைப்பதனைப் போன்று குழந்தைக்கு செய்து காட்டுவதன் மூலம் கதைப்பதற்குப் பழக்குதல், உதாரணமாக ஹலோ, வணக்கம், சொல்லுங்கள் போன்ற சொற்களைக் கற்பித்தல்.

குழந்தையிைன் கையைப் பிடித்துக் கொண்டு வீட்டு வாசலில் அல்லது தோட்டத்தில் நடக்கும் போது அங்கு வரும் மிருகங்கள், பறவைகள் போன்வற்றின் பெயர்களையும், பல்வேறு நிறத்தினாலான பூக்கள், இலை குலைகள் போன்றவற்றின் பெயர்களையும் அவற்றின் நிறங்களையும் கற்பித்தல், 

தாளத்தோடு பாடல்களைப் பாடுங்கள்.

நீங்கள் குழந்தைக்கு கதைகளைக் கூறும் போது கதைப் புத்தகத்தில் உள்ள படங்களைக் காட்டுவதோடு அவற்றோடு தொடர்புடைய விடயங்களையும் கற்பியுங்கள்.

 குழந்தை கதைப்பதற்கு முயற்சி செய்யும் போது சிரித்தல், கைளைத் தட்டுதல், அல்லது வேறு விதமான சமிக்ஞைகள் மூலம் குழந்தையை முடிந்தளவில் உற்சாகப்படுத்துவதோடு மக்கமும் அளியுங்கள். 

உங்களது குழந்தை உங்களோடு உடையாரும் எல்லா சந்தர்ப்பங்களிலும் குழந்தைக்கு பதில் வழங்குங்கள். நீங்கள் ஏதாவது முக்கியமான வேலையில் இருந்தால் கொஞ்சம் பொறுங்கள் மகன் / மகள் எனக் கூறிவிட்டு அந்த வேலையை விரைவில் முடித்தார் குழந்தையிடத்தில் வந்து குழந்தை கூறியதை மீண்டும் கூறுமாறு கேட்டுக் கொள்ளுங்கள். 


குழந்தை முன்பள்ளிக்குச் செல்லும் வயதில் •

 குழந்தையோடு சேர்ந்து தாளத்தோடு பாட்டுப் பாத்தில் எற்படுங்கள்: 

குழந்தையோடு சேர்ந்து குடும்ப அங்கத்தவர்களது அல்லது உறவினர்களது படங்கள் உள்ள Photo album ஒன்றைப் பார்ப்பதன் மூலம் குழந்தைக்குத் தெரிந்தவர்களை அடையாளம் காணுதல் 

உங்களது வீட்டில் உள்ள சில பொருட்களின் பெயர்களை எழுதி ஒட்டுவதன் மூலம் குழந்தை எழுத்துக்களைப் பார்ப்பதற்கும். அவற்றை இனங் காணுவதற்கும் வாய்ப்பளியுங்கள். இதன் மூலம் குழந்தைக்கு எழுத்துக்கள் மற்றும் சொற்கள் குறித்தான ஒரு புரிந்துணர்வு ஏற்படும். 

இலகுவான கதைகளுடன் கூடிய கதைப் புத்தகங்களைக் குழந்தைக்கு வாசித்துக் காட்டுங்கள். அதன் பின்னர் நீங்கள் வாசித்த கதையில் நீங்கள் விரும்பும் பகுதி எது என்பது குறித்து குழந்தைக்குக் கூறி விட்டு குழந்தைக்கு விருப்பமான பகுதி எது எனக் கேளுங்கள். 

குழந்தையோடு சேர்ந்து கற்பனை விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள். உதாரணமாக ஒரு விளையாட்டு இல்லத்தை அமைத்துக் கொண்டு அதில் உள்ள பொம்மையை ஒரு குழந்தையாகக் கற்பனை செய்து கொண்டு பொம்மையின் உடைகளை மாற்றுதல். 

குழந்தை அரைகுறையாக வசனங்களை அல்லது சொற்களைக் கூறும் போது, அதற்குப் பதில் வழங்கும் வகையில் நீங்கள் அவற்றை முழு வாக்கியமாகக் கூறுங்கள். உதாரணமாகக் குழந்தை "அதோ பவ்வா" எனக் கூறுனால் நீங்கள் குழந்தைக்குப் பதில் வழங்கும் வகையில் ஆம் அங்கு ஒரு கறுப்பு நாய் இருக்கின்றது எனக் கூறுங்கள். 

நீங்கள் காணும் பல தரப்பட்ட பொருட்களை அவற்றின் தன்மை அல்லது வடிவத்தின் அடிப்படையில் வேறு வேறாகப் பிரித்துக் கொள்ளுங்கள். உதாரணமாக பச்சை நிறக் காய்கறிகள், பழங்கள் என வேறுபடுத்தல்


குழந்தையோடு சேர்ந்து தடும அமந்தனப்பளது அல்லது உறவினர்களது படங்கள் உள்ள Photo album ஒன்றைப் பார்ப்பதன் மூனம் குர்க்ைகுதி களை அடைபா சாணுதல் உங்களது வீட்டில் உள்ள சீன பொருட்களில் பெர்கள்எழுத்து நவதன் மூலம் குழந்தை எழுத்துக்களைப் பார்ப்பதற்கும், அவற்றை இனிது சிர்ஜி தெந்துணய்ப்பளியுப்சன். இதன் இல்மி குழந்தைக்கு எழுத்துக்கள் மற்றும் சொற்கள் குறித்தான ஒரு புரிந்துமாவு சற்மடும்! - இலகுவான கதைகளுடன் ஆண்ம்ஆர்கைக்கு வாய்த்துக் காட்டுங்கள், அதன் பின்னர் நீங்கள் வாசித்த கதையில் நீங்க பகுதி எது பயனியம் குறித்து குழந்தைக்குக் கூறி விட்டு குழந்தைக்கு விருப்பமான பத்தி எது என கேன்கள் குழந்தையோடு சேர்ந்து கற்பிளாகரனின் ஈற்படுங்காரணமாக ஒரு விளையாட்டு இல்லத்தை அமைத்துக் கொணழ் அங்கு கொண்டு பொம்மையின் களை உயிர் ஒரு தந்தையாகக் கற்பனை செய்து குழந்தை அரைகுறையாக வசனங்களை அண்து டெர்களை ஆறும் போது. அதற்குப் பதில் வழங்கும் வகையில் நீங்கள் அவற்றை முழு வாக்கியானக் கழங்கள். உதாமாகள் குழந்தை "அதோ பவ்வா" எனக் கூறுனால் நீங்கள் குழந்தைக்குப் பதில் வழங்தர் வகையில் ஆம் இங்கு ஒரு கறுப்பு நாய் இருக்கின்றது எனக் கூறுங்கள். நீங்கள் காணும் பல தரப்பட்ட பொருட்களை அவற்றின் தன்மை அல்லது வடிவத்தின் அடிப்படையில் வேறு வேறாகப் பிரித்துக் கொள்ளுங்கள். உதரணமாக பச்சை நிறக் காய்கறிகள், பழங்கள் என வேறுபடுத்தல்.


Post a Comment

Previous Post Next Post